search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "local body polls"

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம் என்று தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜ‌ன் கூறினார். #MinisterPandiarajan #ADMK
    நெல்லை:

    தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜ‌ன் இன்று நெல்லை அரசு அருங்காட்சியகத்துக்கு வந்தார். அருங்காட்சியகத்தை ஆய்வு செய்த அவர் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பழங்கால சிலைகள் மற்றும் பொருட்களை பார்வையிட்டார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை அரசு அருங்காட்சியகம் ரூ.2.8 கோடியில் புதுப்பிக்கப்பட உள்ளது. புதிதாக கேலரி, கலையரங்கம் கட்டப்பட உள்ளது. தரங்கம்பாடி அருங்காட்சியகத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.4.8 கோடியில் புனரமைக்கும் பணிகள் நடக்க உள்ளன.

    புதுக்கோட்டை, திருச்சி அருங்காட்சியகங்களும் தரம் உயர்த்தப்பட உள்ளன. திருவண்ணாமலை, தேனி ஆகிய இடங்களில் புதிய அருங்காட்சியகம் அமைக்க அரசு ரூ.8 கோடி ஒதுக்கியுள்ளது.

    தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கொற்கை, கீழடியில் அகழாய்வுகள் நடந்துள்ளன. ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழிகளை வைப்பதற்கு அங்கேயே அகழ் வைப்பகம் அமைக்க மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.

    அகழ் வைப்பகம் அமையும் இடங்களில் மற்ற‌ கட்டிடங்கள் இருக்கக்கூடாது. அதை கருத்தில் கொண்டு அகழ் வைப்பகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் அகழ்வைப்பகம் அமைக்க மத்திய அரசு ரூ.1 லட்சம் ஒதுக்கியுள்ளது.

    மதுரையில் ரூ.56 கோடியில் உலகத்தரம் வாய்ந்த பழந்தமிழர் கண்காட்சி, ஐந்திணை பூங்கா, தமிழ்தாய் சிலையுடன் அமைக்கப்பட இருக்கிறது. அரியலூரில் திறந்தவெளி மியூசியம் அமைய உள்ளது. அருங்காட்சியகங்களில் மாணவர்களின் கலைதிறன்களை வளர்க்க பல்வேறு பயிற்சிகள், போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்களை ஆண்டுக்கு 10 லட்சம்பேர் மட்டுமே பார்வையிட்டு வருகிறார்கள்.

    இதை 20 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவ-மாணவியர் ஆண்டுக்கு ஒருமுறை அருங்காட்சியகத்தை பார்வையிட அறிவுறுத்தியுள்ளோம். இதன்மூலம் பார்வையாளர் எண்ணிக்கை 20 லட்சமாக உயரும். சென்னை அருங்காட்சி யகத்தில் 6 விதமான வரலாற்று கண்காட்சிகள் அமைக்கப்படும்.



    அ.தி.மு.கவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தாய் கழகத்துக்கு திரும்பி வரவேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ள‌ன‌ர். எனவே கட்சியை விட்டு சென்ற‌வர்கள் மீண்டும் வரவேண்டும்.

    தற்போது அ.தி.மு.க.வில் ஏராளமானோர் சேர்ந்து வருகிறார்கள். இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும். ஜெயலலிதா கூறியதுபோல் நூறாண்டுகாலம் இந்த ஆட்சி நீடிக்கும்.

    இப்போது தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம். கடந்தமுறை உள்ளாட்சி தேர்தலின்போது அ.தி.மு.க.வினர் 1 லட்சம் பேர் பதவிக்கு வந்தார்கள். வரும் தேர்தலில் இன்னும் அதிகமானோர் பதவிக்கு வருவார்கள்.

    இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.   #MinisterPandiarajan #ADMK
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். #JammuMunicipalBoard #BJP #Modi
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு சமீபத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது.
     
    நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஜம்மு காஷ்மீரில் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். ஜம்மு நகராட்சியில் மொத்தமுள்ள 75 வார்டுகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 43 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோல், ஜம்மு காஷ்மீரில் 178 வார்டுகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.



    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். இதேபோல், பாஜக தலைவர் அமித் ஷாவும் ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். #JammuMunicipalBoard #BJP #Modi
    ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. #JammuAndKashmir #JKElection #LocalBodyPolls
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, 2 கட்ட தேர்தல் முடிந்துள்ளது.

    இந்நிலையில், இன்று மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 207 வார்டுகளுக்கு இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் 49 வார்டுகளில் உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 62 வார்டுகளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மீதமுள்ள 96 வார்டுகளில் இன்று காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும்.

    தேர்தல் அமைதியாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் பார்வையாளர்கள், நோடல் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். முதல் இரண்டு கட்ட தேர்தலில் வாக்கு சதவீதம் மிக குறைவாக இருந்த நிலையில், இன்று வாக்குப்பதிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    முக்கிய கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பிரிவினைவாத அமைப்புகள் இந்த தேர்தலை புறக்கணித்திருப்பதால், அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே தேசிய மாநாட்டுக் கட்சியின் இரண்டு தொண்டர்கள் நேற்று பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். மேலும், ஓட்டு போட யாரும் போகக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. #JammuAndKashmir #JKElection #LocalBodyPolls

    ஜம்மு காஷ்மீரில் 2-ம் கட்டமாக 263 நகராட்சி வார்டுகளுக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் 31.3 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. #JammuAndKashmir #JKElection #LocalBodyPolls
    ஸ்ரீநகர் :

    காஷ்மீரில் 4 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்ட தேர்தல் ஏற்கனவே நடந்த நிலையில் இன்று 2–ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பிராந்தியங்களில் மொத்தம் 263 நகராட்சி வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது.

    பிரதான கட்சிகளான தேசிய மாநாடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்ததால் வாக்காளர்களிடம் ஆர்வம் காணப்படவில்லை. மேலும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலாலும் பலர் வாக்களிக்க வரவில்லை. இதனால் பல வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    இதனால் பெரும்பாலான வார்டுகளில் குறைவான வாக்குகளே பதிவானது. குறிப்பாக காஷ்மீர் பகுதியில் உள்ள 2.20 லட்சம் வாக்காளர்களில் வெறும் 3.4 சதவீதத்தினரே தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். எனினும் ஜம்முவில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. ஒட்டுமொத்தமாக இந்த தேர்தலில் 31.3 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    இந்த தேர்தல் பெரும்பாலும் அமைதியாக நடந்து முடிந்தது. ராம்பான் மாவட்டத்தில் போட்டியிட்ட ஆசாத் சிங் ராஜு (வயது 62) என்ற பா.ஜனதா வேட்பாளர், ஓட்டுப்போடுவதற்காக வந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்தார்.

    மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் மாவட்ட பா.ஜனதாவினர் அதிர்ச்சியடைந்தனர்.  #JammuAndKashmir #JKElection #LocalBodyPolls
    தேசிய மாநாட்டு கட்சியை தொடர்ந்து காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி இன்று அறிவித்துள்ளார். #PDPboycott #Kashmirlocalbodypolls #MehboobaMufti
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் கடைசியாக நடைபெற்றன. இந்த தேர்தல்களில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இதைதொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடக்க வேண்டிய தேர்தல் அப்போது புர்ஹான் வானி என்னும் பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற பின்னர் ஏற்பட்ட கலவரம், வன்முறை மற்றும் அமைதியின்மையால் ஒத்திவைக்கப்பட்டது.

    தற்போது, அங்கு பதற்றம் தணிந்து, இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில் வரும் அக்டோபர் முதல் தேதி முதல் ஐந்தாம் தேதிவரை நகராட்சி தேர்தல்களும், நவம்பர் எட்டாம் தேதியில் தொடங்கி பஞ்சாயத்து தேர்தல்களும் நடைபெறவுள்ளது.

    காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாதிகள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

    இதேபோல், தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் பரூக் அப்துல்லாவும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார்.

    இந்நிலையில், காஷ்மீரில் உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி இன்று அறிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக, அக்கட்சியின் சார்பில் இயற்றப்பட்ட தீர்மானத்தை அவர் ஊடகங்களுக்கு செய்திக்குறிப்பாக அனுப்பி உள்ளார்.

    ‘சட்டப்பிரிவு 35-ஏ தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும் சூழலில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படுவதை பெருவாரியான மக்கள் விரும்பவில்லை என்பதால் இந்த வேளையில் நடத்தப்படும் தேர்தல்கள் ஜனநாயக அமைப்புகளின் நம்பகத்தன்மையை சீர்குலைத்து விடும்.

    இத்தகையதொரு சந்தர்ப்பத்தில் தேர்தல் நடத்துவதை அரசு மறுபரிசீலனை செய்வதுடன் மக்களின் நம்பிக்கையை பெறத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எங்கள் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறோம்.

    எனவே, இந்த தேர்தல்களை புறக்கணிப்பதாக எங்கள் கட்சியின் சார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது’ என மெகபூபா முப்தி அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PDPboycott #Kashmirlocalbodypolls #MehboobaMufti

    ×