search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lokamadevi"

    குஜராத்தில் இருந்து மீட்கப்பட்டு தஞ்சை வந்தடைந்த ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகளுக்கு பெரிய கோவிலில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    தஞ்சாவூர்:
        
    தஞ்சை பெரிய கோவிலில் இருந்த ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி ஐம்பொன் சிலைகள் 60 ஆண்டுக்கு முன்பு திருடு போனது. அந்த சிலைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் டி.எஸ்.பி. ராஜாராமன் மற்றும் போலீசார் குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்டனர். இதையடுத்து அந்த சிலைகள் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

    இதற்கிடையே, மீட்கப்பட்ட ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி ஐம்பொன் சிலைகள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தடைந்தது. அங்கு அந்த சிலைகளுக்கு கோவில் தீட்சிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    இந்நிலையில், குஜராத்தில் இருந்து மீட்கப்பட்டு தஞ்சை வந்தடைந்த ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகளுக்கு பெரிய கோவிலில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த சிலைகளுடன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் டி.எஸ்.பி. ராஜாராமன் மற்றும் போலீசாரும் வந்தனர்.

    ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் தஞ்சை பெரிய கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. சுமார் 60 ஆண்டுகளுக்கு பின் தஞ்சைக்கு வந்த சிலைகளுக்கு பொதுமக்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேரமும் கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும்  போடப்பட்டுள்ளது. #Tamilnew
    ×