search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lorry fined"

    எரியோடு அருகே அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    எரியோடு:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய் உத்தரவின் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் வழிகாட்டுதலின் படி மோட்டார் வாகன ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையிலான அலுவலர்கள் எரியோடு மற்றும் தொட்டணம்பட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியே மணல் ஏற்றி வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

    இதில் அதிக பாரங்கள் ஏற்றி வந்ததும், வரி செலுத்தாமலும், பதிவுச் சான்று புதுப்பிக்காமலும் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து 2 லாரிகளுக்கும் ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் நிலக்கரி ஏற்றிக் கொண்டு சங்ககிரி நோக்கி சென்ற ஒரு லாரியை மடக்கி சோதனையிட்டனர். அதிலும் கூடுதல் பாரம் ஏற்றி வந்தது தெரிய வரவே ரூ.9 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வாகன ஓட்டுனர்கள் தங்கள் உரிமங்களை சரியான காலக்கெடுவுக்குள் புதுப்பித்து விதிகளை பின்பற்றி ஓட்டுமாறும் விதி மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

    ×