search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lorry owner murder"

    லாரி உரிமையாளர் கொலை வழக்கில் ஜாமீனில் வேளியே வந்து தலைமறைவானவரை 15 ஆண்டுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். #arrest

    கும்மிடிப்பூண்டி:

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தவார்சிங், லாரி உரிமையாளர். இவர் கடந்த 2001-ம் ஆண்டு ராஜஸ்தானில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு லாரியில் வந்தார்.

    லாரியை ராஜஸ்தானை சேர்ந்த அப்துல் சலீம் ஓட்டினார். கிளீனராக பிரேம்சந்த் பொக்காரி இருந்தார்.

    கும்மிடிப்பூண்டி ஏரிக்கரை அருகே வந்த போது லாரி உரிமையாளர் தவார் சிங்கை கொலை செய்து விட்டு அவரிடம் இருந்த பணம் மற்றும் உடைமைகளை பறித்துவிட்டு அப்துல் சலீமும், பிரேம்சந்த் பொக்காரியும் தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்துல் சலீம், பிரேம்சந்த் பொக்காரியை கைது செய்தனர்.

    இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை கைது செய்ய கடந்த 15 ஆண்டுக்கு முன்பு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் சிக்காமல் இருந்தனர்.

    இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. ரமேஷ் உத்தரவுப்படி தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்முருகன், சுரேஷ், சபாபதி, அப்துல் காதர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் ராஜஸ்தான் சென்று கடந்த மாதம் அப்துல் சலீமை கைது செய்தனர். தலைமறைவான பிரேம்சந்த் பொக்காரியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ராஜஸ்தானில் பதுங்கி இருந்த பிரேம்சந்த் பொக்காரியை நேற்று மாலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    மாதவரம் அருகே வாய் தகராறில் லாரி அதிபர் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    மாதவரம்:

    மாதவரம் மகாவீர் நகரை சேர்ந்தவர் பாலு (45). லாரி அதிபர். இவரது நண்பர் சிவா. இவர் மாதவரம் அருகேயுள்ள சாஸ்திரி நகரில் சொந்தமாக பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு அங்கு அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கொளத்தூர் வஜ்ரவேல் நகரை சேர்ந்த சுரேந்திரன் (30) பெட்ரோல் போட தனது மனைவியுடன் அங்கு வந்தார்.

    அப்போது அவர் குடிபோதையில் இருந்தார். மனைவியை வைத்துக் கொண்டு குடிபோதையில் வாகனம் ஓட்டலாமா என பாலுவும், சிவாவும் அவருக்கு அறிவுரை கூறினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சுரேந்திரன் அவர்களுடன் வாக்குவாதம் செய்தார். பின்னர் அது கைகலப்பாக மாறியது. அதையடுத்து வீட்டுக்கு சென்ற சுரேந்திரன் மனைவியை இறக்கிவிட்டு 5 பேருடன் மீண்டும் பெட்ரோல் பங்க் வந்தார்.

    அங்கு பாலு மற்றும் சிவாவுடன் மீண்டும் தகராறு செய்து தாக்கினார். அவருடன் வந்தவர்கள் இருவரையும் மரக்கட்டை மற்றும் இரும்பு கம்பியல் தாக்கினர்.

    அதில் படுகாயம் அடைந்த பாலுவை ரெட்டேரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பாலு பரிதாபமாக இறந்தார். சிவா சிகிச்சை பெற்று வருகிறார்.

    மாதவரம் போலீசார் கொலை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த அசார் அலி (25) ஜோதீஸ்வரன் (30), அசோக் (20) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். சுரேந்திரன், அவரது நண்பர் கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். #Tamilnews
    ×