என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "lorry seized"
- கோவில்பட்டி சுற்றுப்பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் நேற்று வாகன சோதனை நடைபெற்றது.
- பறிமுதல் செய்யப்பட்ட 4 வாகனங்களுக்கும் அபராத தொகை ரூ.73 ஆயிரம் மற்றும் சாலை வரி ரூ.7ஆயிரத்து 100 விதிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகர பகுதியில் மினி பஸ்கள் முறைப்படி இயக்காமல் கூடுதல் கட்டணம் வசூலித்து இயக்கப்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று கோவில்பட்டி சுற்றுப்பகுதி களில் வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.
அப்போது செண்பகவல்லி அம்மன் கோவில் முதல் செண்பகப்பேரி வரை இயக்கப்பட வேண்டிய மினிபஸ் கோவில்பட்டி பழைய பஸ் நிலையம் வரை அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் இயங்கி கூடுதல் கட்டணம் வசூலித்தது கண்டு பிடிக்கப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் டிரைவர், கண்டக்டர்களுக்கு அனும திக்கப்படாத வழிதடத்தில் வாகனத்தை இயக்கக் கூடாது என்றும், கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மினிபஸ்சின் ஆவணம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட்டு அபராதம் நிர்ணயிக்கப்படும். வாகன உரிமையாளர் அபராத தொகையை செலுத்திய பிறகு வாகனம் விடுவிக்கப்படும்.
மேலும் 2 லோடு வேன், ஒரு ஆட்டோ மற்றும் ஒரு சரக்கு லாரி ஆகியவை முறையான ஆவணங்கள் இல்லாமலும், சாலை வரி இல்லாமலும் இயங்கிய தற்காக பறிமுதல் செய்யப்ப ட்டது. இந்த 4 வாகனங்க ளுக்கும் அபராத தொகை ரூ.73 ஆயிரம் மற்றும் சாலை வரி ரூ.7ஆயிரத்து 100 விதிக்கப்பட்டுள்ளது.
அபராத தொகையை அந்தந்த வாகன உரிமையாளர்கள் செலுத்திய பின்பு வாகனங்கள் விடுவிக்கப்படும். மோட்டார் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களுக்கான அனுமதிச்சீட்டு, சாலை வரி, தகுதி சான்று, காப்பு சான்று மற்றும் புகைச்சான்று ஆகியவை நடப்பில் இருந்தால் மட்டுமே வாகனத்தை பொது சாலையில் இயக்க வேண்டும். மீறி இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் தெரி வித்துள்ளார்.
- டிப்பர் லாரியில் அனுமதியின்றி செம்மண் பாரம் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
- போலீசார் டிரைவர் முனுசாமியை கைது செய்தனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே லாரிகளில் கனிமவளம் கடத்தப்படுவதாக பவானி தாசில்தார் ரவிச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பொன்னு சாமி, உதவியாளர் ரவிக்குமார், அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் பவானி - மேட்டூர் ரோட்டில் மாணிக்கம்பாளையம் பிரிவு அருகே வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அவ்வழியே வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்ட போது அனுமதியின்றி செம்மண் பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.
விசாரணையில் லாரி டிரைவர் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்த பல்லக்கா பாளையத்தை சேர்ந்த ஒசுவங்காட்டை சேர்ந்த முனுசாமி என்பதும், லாரி யின் உரிமையாளர் சங்க கிரியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த சிவசங்கர் மற்றும் ஜெகன் ஆகியோர் லாரியை வாடகைக்கு எடுத்து செம்மண்ணை கடத்தி சேலம், நாமக்கல் மாவட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் முனுசாமியை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சிவசங்கர் மற்றும் ஜெகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகையை அடுத்த நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் நேற்று காலை கங்களாஞ்சேரி சாலை தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை மறித்து சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து லாரியில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் லாரி டிரைவர்கள் கீழ்வேளூர் கோகூர் மெயின் ரோட்டை சேர்ந்த சிவகுமார் (வயது 48), சிக்கல் குற்றம்புரிந்தானிருப்பு சிவன் கோவில் தெருவை சேர்ந்த செல்லதுரை (36) ஆகியோர் என்பதும், இவர்கள் உரிய அனுமதியின்றி வலங்கைமான் பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து மணல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமார், செல்லதுரை ஆகிய 2 பேரையும் கைது செய்ததுடன், 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனுக்கு பண்ருட்டி பகுதி தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்தல் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் மேற்பார்வையில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், பாக்கியலட்சுமி, பால சுப்பிரமணியன் மற்றும் போலீசார் பண்ருட்டி பகுதியில் மணல் கடத்தல் தடுப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புலவனூரில் இருந்து மாட்டுவண்டிகளில் மணல் அள்ளி வந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து மாட்டுவண்டிகளை ஓட்டி வந்த தட்டாம்பாளையத்தை சேர்ந்த சிவராமன்(வயது 35), தட்சிணாமூர்த்தி(52), சந்திரவேல்(39) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் மேல்குமாரமங்கலம் தென்பெண்ணையாற்றங்கரை அருகே மாட்டுவண்டிகளில் மணல் கடத்தி வந்த மேல்குமாரமங்கலத்தை சேர்ந்த பொன்மன்னன்(40), அம்பிகாபதி(27), லோகநாதன்(27), காசிநாதன்(37), அழகுநாதன்(45), ராமமூர்த்தி(40), கிருஷ்ணமூர்த்தி(53), லட்சுமணன்(48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இவர்களிடம் இருந்து 11 மாட்டுவண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது மழை இல்லாததால் நீர்நிலைகள் வறண்டு போய் உள்ளன. இதனை பயன்படுத்தி கும்பல் தொடர்ந்து மணல் கடத்தி வருகின்றன.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயம் மட்டுமின்றி குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே மணல் கடத்தல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தேனி மாவட்ட புவியியல் மற்றும் சுங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் கண்ணன் தலைமையில் அதிகாரிகள் க.விலக்கு- கண்டமனூர் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது டிப்பர் லாரி நிற்காமல் வேகமாக சென்றது.
லாரியை அதிகாரிகள் விரட்டி பிடித்தனர். அதிகாரிகளை கண்டதும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். சோதனையிட்டதில் வைகை ஆற்றில் இருந்து மணல் கடத்தியது தெரிய வந்தது. லாரியை பறிமுதல் செய்து க.விலக்கு போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும் இது குறித்து முத்தனம்பட்டியை சேர்ந்த டிரைவர் செந்தில் (வயது36), உரிமையாளர் பவுன்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேடசந்தூர் அருகேயுள்ள நல்லமனார்கோட்டை, கோட்டைமந்தை உள்ளிட்ட பகுதிகளில் வரட்டாற்றில் மர்ம கும்பல் அனுமதியின்றி மணல் அள்ளி செல்கிறது. மேலும் மணல் அள்ளுவதை தடுக்க முயற்சிக்கும் விவசாயிகளை அந்த கும்பல் மிரட்டுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து மணல் அள்ளும் கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கோட்டைமந்தை முனியப்பன் கோவில் அருகே ஒரு மினிலாரி மணல் ஏற்றி கொண்டு வந்தது. ஆனால், போலீசார் வருவதை கண்டதும் மினிலாரியை நிறுத்தி விட்டு, டிரைவர் தப்பியோடி விட்டார். இதையடுத்து மினிலாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மினிலாரியை ஓட்டி வந்தது சொட்டமாயனூரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 38) என்பது தெரியவந்தது. எனவே, அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செட்டிநாடு போலீசார் நேமத்தான்பட்டி சோதனைச் சாவடி அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியே வந்த லாரியை மறித்து நிறுத்தினர். அந்த லாரியை போலீசார் சோதனை செய்த போது, எவ்வித ஆவணமின்றி லாரியில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து சூசையப்பர்பட்டினத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 22), மரக்காத்தூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (33) பள்ளிதம்மம் பகுதியை சேர்ந்த செந்தில் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மணலுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல வடக்கு போலீஸ் சரகம் என்.ஜி.ஓ. காலனி அருகே போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது காரைக்குடி பகுதியை சேர்ந்த மணிவேல் (40) என்பவர் அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்த காரைக்குடி வடக்கு போலீசார் மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.
இதுபோன்று பள்ளத்தூர் போலீசார் கல்லூர் சாலையில் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஸ்ரீராம் நகரை சேர்ந்த குமார் (22) என்பவரை போலீசார் கைது செய்து, லாரியுடன் மணலை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்