என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "lorry tire battery theft"
முதுகுளத்தூர்:
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு மணல் கடத்தி வரும் லாரிகளை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இவ்வாறு 10-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு கீழத்தூவல் போலீஸ் நிலைய வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. கோர்ட்டு உத்தரவை பெற்று உரிமையாளர்கள் லாரியை எடுத்து செல்வார்கள்.
இந்த நிலையில் வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டு இருந்த 2 லாரிகளில் இருந்த டயர்கள், பேட்டரிகள் ஆகியவை திருட்டுபோயின.
இதுகுறித்து அறிந்த கீழத்தூவல் போலீசார் சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்தபோது டயர், பேட்டரிகளை திருடியது கீழகொடுமலூரைச் சேர்ந்த கருப்புராஜா, அபிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். இவர்களது லாரியும் மணல் கடத்தலில் சிக்கி போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
முதுகுளத்தூர், கீழத் தூவல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நாள்தோறும் திருட்டு, வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளை போன்றவை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. போலீசார் நடவடிக்கை எடுத்தும் எந்த பலனும் இல்லை.
தற்போது போலீஸ் நிலைய வளாகத்திலேயே போலீசார் பறிமுதல் செய்த வாகனத்திலேயே டயர், பேட்டரிகளை திருடியதுகூட தெரியாமல் போலீசார் மெத்தனமாக இருந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.