search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lounge for tourists"

    • குண்டேரிபள்ளம் அணையில் சுற்றுலா பயணிகளுக்கு ஓய்வு அறை, குடிநீர், வாகனம் நிறுத்தும் இடம் அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்
    • அமைச்சர் முத்துசாமி சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்துள்ள கொங்கர்பாளையம் ஊராட்சியில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் ஓய்வறை, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, பாதுகாப்பு கம்பி வேலி அமைத்தல் மற்றும் அணுகு சாலை அமைத்தல் ஆகிய சுற்றுலா மேம்பாட்டு பணிகள் ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் நடந்து முடிவடைந்த நிலையில் அமைச்சர் சு.முத்துசாமி சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    அப்போது வினோபா நகரை சேர்ந்த விவசாயிகள் விவசாய கிணறுகளுக்கு மின் இணைப்பு, பூமிதான இடத்திற்கு பட்டா உட்பட பல்வேறு அரசு சார்ந்த நலத்திட்ட உதவிகள் தங்களுக்கும் கிடைக்க வேண்டி மனுக்களை அமைச்சர் முத்துசாமியிடம் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில், அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம், டி.என்.பாளையம் ஒன்றிய பொறுப்பாளர் எம்.சிவபாலன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டி.கே.சுப்பிரமணியம், கந்தசாமி, கோபி ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி, தாசில்தார் ஆசியா, சிட்கோ வாரிய முன்னாள் தலைவரும் ஐகோர்ட்டு வக்கீலுமான சிந்து ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சதிஷ்குமார், உதவி பொறியாளர் கல்பனா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    ×