search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Low prices"

    • தக்காளி பயிரிட்டு வரும் விவசாயிகளுக்கு குறைந்த அளவு லாபம் கூட கிடைப்பதில்லை.
    • ஒரு கிலோ ரூ.10க்கு மட்டும் விலை கேட்கப்படுவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, இடையகோட்டை, மூலச்சத்திரம், வடகாடு, கேதையெறும்பு, பால்கடை உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் அதிகளவு தக்காளி பயிரிடப்பட்டது. தக்காளி தற்போது அதிகளவு விலைச்சல் அடைந்துள்ளது.

    விளைச்சல் அடைந்த தக்காளியை தரம் பிரித்து தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஒட்டன்சத்திரம் காமராஜர் மற்றும் தங்கச்சியம்மாபட்டி காந்தி காய்கனி மார்க்கெட்டிக்கு கொண்டு வந்து விவசாயிகள், மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறார்கள்.

    இங்கிருந்து மதுரை, நெல்லை, உடுமலைப்பேட்டை பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதியிலேயே காய்கறி மார்க்கெட்டுகள் அமைந்துள்ளதால் வியாபாரிகள் வருகை குறைந்துள்ளது.

    தினசரி 4 ஆயிரம் டன் வரத்து உள்ளது. 2 மார்க்கெட்டுக்கும் தலா 2 ஆயிரம் டன் தக்காளிகளை விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.

    தொடர்ந்து அதிகரித்ததால் ரூ.350க்கு விற்கப்பட்ட 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.80முதல் ரூ.100 வரை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். ஒரு கிலோ ரூ.10க்கு மட்டும் விலை கேட்கப்படுவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். பல்வேறு இன்னல்களுக்கு இடையே தக்காளி பயிரிட்டு வரும் விவசாயிகளுக்கு குறைந்த அளவு லாபம் கூட கிடைப்பதில்லை.

    பறிப்பு கூலி மற்றும் மார்க்கெட்டுக்கு கொண்டு வரும் சரக்கு வேன் வாடகை கட்டணத்திற்கு கூட கட்டுபடியாகாததால் தக்காளிகளை சாலையோரம் கொட்டிச் செல்கின்றனர். பல ஆண்டுகளாக அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், தக்காளி சார்ந்த தொழிற்சாலைகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    சின்னவெங்காயம் ஒரு கிலோ ரூ.40க்கும், பல்லாரி ரூ.20க்கும் விற்கப்படுகிறது.

    ×