search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "maa vilakku pooja"

    சங்கரேஸ்வரி அம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி சங்கரலிங்கசுவாமி சமேத சங்கரேஸ்வரி கோவில் ஆடி தபசு விழா கடந்த 18-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 3-ம் நாளான நேற்று வணிக வைசிய சமுதாய மண்டகப்படி சார்பில் பூஜைகள் நடந்தன. இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து சமுதாய மண்டபத்தில் இருந்து பெண்கள் கலந்து கொண்ட மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. இரவு இன்னிசை கச்சேரி நடந்தது. விழாவில் கோவில்பட்டி வணிக வைசிய நடுநிலைப் பள்ளி செயலாளர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். வணிக வைசிய சங்க பொருளாளர் கருப்பசாமி, துணை செயலாளர்கள் வேல்முருகன், மணிமாறன், நிர்வாக குழு உறுப்பினர் கணேசன், வணிக வைசிய சங்க இளைஞரணி செய லாளர் தங்கமாரியப்பன், நாகராஜ், குன்னிமலைராஜா, பாண்டியராஜன், சங்கர்குமார், மீனாட்சி சுந்தரம், பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

    நிகழ்ச்சியில் வணிக வைசிய சங்க தலைவர் பூவலிங்கம், செயலாளர் பழனிக்குமார், நகர்மன்ற முன்னாள் துணை தலைவர் ரத்னவேல் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வீரவாஞ்சி நகர் வணிக வைசிய சங்க தலைவர் காளியப்பன், செயலாளர் வைரம், பொருளாளர் ராஜா, கணக்கர் கருப்பசாமி மற்றும் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். முடிவில் முருகேசன் நன்றி கூறினார்.
    ×