என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "maan ki baat"
- காதி பொருட்கள் இந்த மாதம் ரூ.1.25 லட்சம் கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.
- பண்டிகை காலத்தில் உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி இன்று 106-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த மாதம் காதி விற்பனை கடந்த கால சாதனைகளை முறியடித்துள்ளது. கடந்த காலங்களில் 30 ஆயிரம் கோடிக்கு மட்டுமே விற்பனையான காதி பொருட்கள் இந்த மாதம் ரூ.1.25 லட்சம் கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.
விவசாயிகள், குடிசை தொழில் செய்வோர், கைவினைக் கலைஞர்கள் ஆகியோர் இந்த விற்பனையால் பயனடைந்துள்ளனர்.
சுற்றுலா செல்லும்போது, ஆன்மிக யாத்திரை மேற்கொள்ளும்போது அப்பகுதியில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்குங்கள். உங்களது பட்ஜெட்டில் அதற்கு நிதி ஒதுக்குங்கள்.
பண்டிகை காலத்தில் உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
தமிழ் எழுத்தாளர் சகோதரி சிவசங்கரி இலக்கியம் மூலம் ‛knit india'என்ற திட்டத்தை தயாரித்துள்ளார். இது இலக்கியம் மூலம் நாட்டை இணைப்பது ஆகும். இதற்காக அவர் கடந்த 16 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அவர் 18 இந்திய மொழிகளில் எழுதப்பட்ட இலக்கியங்களை மொழி பெயர்த்துள்ளார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும், இம்பாலில் இருந்து ஜெய்சால்மர் வரையிலும் பலமுறை நாடு முழுவதும் பயணம் செய்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுடன் கலந்துரையாடினார்.
சிவசங்கரி பல்வேறு இடங்களுக்குச் சென்று பயணத் தகவல்களை வெளியிட்டார். இது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் உள்ளது. இந்தத் திட்டத்தில் 4 பெரிய தொகுதிகள் உள்ளன, ஒவ்வொரு தொகுதியும் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கன்னியாகுமரியைச் சேர்ந்த எழுத்தாளர் ஏ.கே.பெருமாளின் பணிகள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் கதை சொல்லும் பாரம்பரியத்தை அவர் பாதுகாத்து வருகிறார். இந்தப் பணியில் 40 ஆண்டுகளாக அவர் பணியாற்றி வருகிறார். இதுவரை அவர் 100 புத்தகங்களை எழுதி உள்ளார். சிவசங்கரி, ஏ.கே.பெருமாளின் முயற்சிகள் அனைவராலும் பாராட்டக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.
- இந்திய கலாச்சாரம் மற்றும் இசை மீது ஜெர்மனியின் காஸ்மியின் ஆர்வத்தை நான் முழுமனதுடன் பாராட்டுகிறேன்.
- நீங்களும் உங்கள் நேரத்தை ஒதுக்கி, தூய்மை தொடர்பான இந்த பிரசாரத்தில் உதவுங்கள்.
சென்னை:
பிரதமர் மோடி இன்று மான் கி பாத் 105-வது நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது சென்னை ஆட்டோ டிரைவர் ராஜேந்திரபிரசாத் புறாக்களை பராமரிக்க, பாதுகாக்க ஆற்றி வரும் பணிகளை பாராட்டினார். இது தொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்திய கலாசாரமும், இந்திய இசையும் தற்போது உலகமயமாகிவிட்டது.
அவர்கள் மீது உலகம் முழுவதும் உள்ள மக்களின் பற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 21 வயதான காஸ்மி இன்ஸ்டாகிராமில் இன்று மிகவும் பிரபலமானவர். ஜெர்மனியை சேர்ந்த காஸ்மி இதுவரை இந்தியா வந்ததில்லை.
ஆனால் இந்தியாவை பார்த்திராத இந்திய இசையின் ரசிகை, இந்திய இசையில் அவருக்கு இருக்கும் ஆர்வம் மிகவும் ஊக்கமளிக்கிறது. இந்திய கலாச்சாரம் மற்றும் இசை மீது ஜெர்மனியின் காஸ்மியின் ஆர்வத்தை நான் முழு மனதுடன் பாராட்டுகிறேன். அவரது முயற்சிகள் ஒவ்வொரு இந்தியரையும் மூழ்கடிக்கப் போகிறது.
ஜீவேஷு கருணா சாபி, மைத்ரி தேஷு விதியாதம் என்றால், உயிரினங்கள் மீது கருணை காட்டுங்கள், அவர்களை உங்கள் நண்பர்களாக்குங்கள். எல்லா வழிகளிலும் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளில், நாட்டில் சிங்கம், புலிகள், சிறுத்தைகள் மற்றும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
உயிர்களிடம் கருணை காட்டுங்கள், அவற்றை உங்கள் நண்பர்களாக ஆக்குங்கள். தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் வாகனங்களில் பெரும்பாலானவை விலங்குகள் மற்றும் உயிரினங்கள். ராஜஸ்தானில் சுக்தேவ்பாம்பு களை பராமரிப்பதிலும், சென்னையில் ஆட்டோ டிரைவர் ராஜேந்திரபிரசாத் புறாக்களை பாதுகாப்பதிலும் சிறந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களது பணிகளை பாராட்டுகிறேன். ஐதராபாத்தை சேர்ந்த 11 வயது அக்சரா குழந்தைகளுக்கான 7 நூலகங்களை நிர்வகிக்கிறார். குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவர் பங்களிக்கும் விதம் ஊக்கமளிக்கிறது.
இன்று 'மான் கி பாத்' மூலம் அனைத்து நாட்டு மக்களுக்கும் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன். அக்டோபர் 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தூய்மை குறித்த பெரிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நீங்களும் உங்கள் நேரத்தை ஒதுக்கி, தூய்மை தொடர்பான இந்த பிரசாரத்தில் உதவுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியானது வருகிற 30- ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நாடுமுழுவதும் நடக்கிறது.
- பொதுமக்கள் அதிகம் பங்கேற்கவும், மேலும் நடுத்தர, அடித்தட்டு மக்கள் பெருமளவில் பங்கேற்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
சென்னை:
பிரதமர் நரேந்திர மோடி மாதம்தோறும் வானொலி மூலம் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் பொது மக்களிடையே உரையாற்றி வருகிறார். அப்போது பல தரப்பு மக்களின் சாதனைகள் அந்தந்த ஊர்களின் சிறப்பு குறித்தும், வளர்ச்சிகள், சுகாதாரம், வழிகாட்டுதல்கள், சமுதாய பணிகள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தோர் குறித்தும் வாழ்க்கை பாதையில் எவ்வாறு முன்னெடுத்து செல்ல வேண்டும் என உரையாற்றி வருகிறார். இது மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியானது வருகிற 30- ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நாடுமுழுவதும் நடக்கிறது. இதையொட்டி சென்னையில் முன்னேற் பாடாக பல பணிகள் நடைபெறுகிறது.
பொதுமக்கள் அதிகம் பங்கேற்கவும், மேலும் நடுத்தர, அடித்தட்டு மக்கள் பெருமளவில் பங்கேற்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மீனவர்கள் அதிகம் வாழும் பகுதியான நடுக்குப்பத்தில் பொதுமக்களை அழைப்பதற்கு வித்தியாசமான முறையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. திருமண பத்திரிக்கை போன்று மனதின் குரல் நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அடிக்கப்பட்டு தாம்பூல தட்டில் வெற்றியை பாக்கு, பழம் இனிப்புடன் மேள தாளம் முழங்க வீடு வீடாக சென்று நிகழ்ச்சியில் தவறாமல் பங்கு கொள்ளும்படி பொது மக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பாரதிய ஜனதா மாநில செயலாளர் சதீஷ்குமார் கூறியதாவது:-
பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சி அனைத்தும் மக்களிடையேயும் செல்ல வேண்டும்.
நடுக்குப்பத்தில் மீனவர்கள் அதிகம் வாழ்வதால் வருகிற ஞாயிறு அன்று நடைபெறும் பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியை எல்.இ.டி. திரை மூலம் ஒளிபரப்புகிறோம். இதில் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று பயனடைய வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் எல்லோரிடமும் போய் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழர் பாரம்பரிய முறையில் அழைப்பு விடுத்துள்ளோம் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்