search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai Paralympic Area"

    • மதுரை முடக்குசாலை பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
    • முடக்குச்சாலை- எச்.எம்.எஸ். காலனி இடையே மேம் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது .

    மதுரை

    மதுரை முடக்குச் சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் முடக்குச்சாலை- எச்.எம்.எஸ். காலனி இடையே 1,190 மீட்டர் தூரத்திற்கு மேம் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது .

    இதில் தற்போது முடக்குச் சாலை சந்திப்பில் கான்கிரீட் பில்லர்களில் உத்திரம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்காக முடக்குச் சாலை சந்திப்பில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து மதுரை போக்கு வரத்து ேபாலீஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    முடக்குச்சாலை, தேனி மெயின் ரோடு வழியாக வெளியூர் செல்லும் பஸ்கள், கனரக, இலகுரக வாக னங்கள், இருசக்கரம், ஆட்டோ, 4 சக்கர வாகனங்களுக்கு நாளை (25-ந்தேதி) முதல் போக்கு வரத்து மாற்றம் செய்யப்படு கிறது.

    அதன்படி மதுரை நகரில் இருந்து ேமற்கு நோக்கி செல்லும் அரசு, தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள் அனைத்தும் முடக்குச்சாலை சந்திப்பில் உள்ள ஓட்டல் முன்பு பில்லர்-3, 4-க்கு இடையில் வலதுபுறமாக திரும்பி மேலக்கால் சாலையில் சென்று இடதுபுறம் திரும்பி துவரிமான் சாலை வழியாக செல்ல வேண்டும்.

    மதுரை நகரில் இருந்து வெளியூர் செல்லும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார், மினி வேன் போன்ற இலகுரக வாகனங்கள் மற்றும் சில குறிப்பிட்ட அரசு நகர் பஸ்கள் (பஸ் ரூட் நம்பர்.21) மட்டும் காளவாசல் சந்திப்பு, சம்மட்டிபுரம், எச்.எம்.எஸ் காலனி பிரதான வீதி

    எச்.எம்.எஸ் காலனி சந்திப்பு, விராட்டி பத்து, அச்சம்பத்து வழியாக செல்ல வேண்டும்.

    நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் இருந்து அச்சம்பத்து வழி யாக நகருக்குள் வரும் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார், மினி வேன் போன்ற இலகுரக வாகனங்கள் வழக்கம்போல் அச்சம்பத்து, விராட்டிபத்து, டோக் நகர், முடக்குச்சாலை வழியாக நகருக்குள் வர லாம்.

    நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் இருந்து அச்சம்பத்து வழி யாக பஸ்கள், கனரக வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் நான்கு வழிச்சாலையில் இடதுபுறம் திரும்பி, பின்னர் துவரிமான், கோச்சடை, முடக்குச்சாலை வழியாக நகருக்குள் வர வேண்டும்.

    எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×