search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "madurai youth arrest"

    மதுரை அருகே வாலிபர் கொலையில் சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை தட்டான்குளம்-நரசிங்கம் ரோட்டில், அங்காளபரமேஸ்வரி கோவிலுக்கு செல்லும் வழியில், ஏ.பி.மலையாண்டிபுரத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் தவசி (வயது 21) என்பவர் அரிவாள் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரை யார், எதற்காக வெட்டிக் கொன்றார்கள்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.

    இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் ராஜசேகர் மேற்பார்வையில், அண்ணா நகர் உதவி கமிஷனர் சூரக் குமரன் ஆலோசனை பேரில், கே.புதூர் இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தவசி நண்பர்கள் சிலரிடம் விசாரித்தனர்.

    அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் சிறுவன் உள்பட 5 நண்பர்களை பிடித்து வந்து, காவல் நிலையத்தில் விசாரித்தனர்.

    இதில் அவர்கள் ஒத்தக்கடை, அரும்பனூர் புதூர், குமார் மகன் பாண்டியராஜன் என்ற சடையன் (21), நரசிங்கம் ராஜீவ்காந்தி நகர் அய்யனார் (27), மலையாண்டிபுரம் காளிமுத்து மகன் ராஜா (24), ஆண்டார் கொட்டாரம், சந்திரலேகா நகர் மணிமாறன் (32) மற்றும் 15 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

    தனிப்படை போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து சிறுவன் உள்பட 5 பேரும் தனிப்படை போலீசாரிடம் கொடுத்து உள்ள வாக்குமூலத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாங்களும் தவசியும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தோம். அவர் மாட்டுத்தாவணி ஓட்டலில் சர்வராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு தண்ணீர் லாரி டிரைவர்களுடன் நட்பு உண்டு. எனவே தவசியிடம் அய்யனாரின் 15 வயது தம்பிக்கு லாரி கிளீனர் வேலை கேட்டோம். இதற்காக அவருக்கு அடிக்கடி மதுபானம் வாங்கி கொடுத்தோம்.

    இருந்தபோதிலும் தவசி வேலை வாங்கித் தரவில்லை. அதேநேரத்தில் சந்திக்கும்போது எல்லாம் ஓசி மதுபானம் கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார். இதனால் எங்களுக்கு அவர் மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

    சம்பவத்தன்று தட்டான்குளம் சாலையில் தவசியுடன் ஒரே இடத்தில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினோம். அப்போது நாங்கள் அவரிடம் மீண்டும் அய்யனார் தம்பிக்கு லாரி கிளீனர் வேலை வாங்கி தருமாறு கேட்டோம். அப்போது “உங்களை எல்லாம் நம்பி அவனுக்கு எப்படி வேலை வாங்கித் தருவது?’ என்று தவசி நக்கலாக கேட்டார். இதனால் எங்களுக்குள் கடும் கோபம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் அங்கு கிடந்த இரும்பு கம்பியை எடுத்து சரமாரியாக தாக்கினோம். அதில் தவசி இறந்து போவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதன்பிறகு நாங்கள் அனைவரும் வீட்டுக்கு வந்து விட்டோம். அடுத்த நாள் காலையில் தான் தவசி இறந்து போன விவரம் எங்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து நாங்கள் போலீசுக்கு பயந்து தலைமறைவாக இருந்து வந்தோம். இருந்தபோதிலும் போலீசார் எங்களை சுற்றி வளைத்து பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் கொடுத்து உள்ளனர்.

    போலீசார் 5 பேரையும் கைது செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள். 
    காதலிக்குமாறு பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.
    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் செக்கானூரணி போலீஸ் சரகத்திற்குட்பட்ட கிண்ணிமங்கலம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் வெளியே செல்லும் போதெல்லாம் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் சுமன் (வயது 19), ராஜாகனி மகன் ரங்கேஷ் ஆகியோர் காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

    இளம்பெண் பல முறை எச்சரித்தும் அவர்கள் திருந்தவில்லை. அவர்களின் தொந்தரவு வரம்புமீறி சென்றது. மேலும் அந்த பெண்ணின் புகைபடத்தை எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் செக்கானூரணி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வனிதா விசாரணை நடத்தி இளம்பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த சுமனை கைது செய்தனர். ரங்கேசை தேடி வருகின்றனர்.
    ×