search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maduravoyal robbery"

    • மூதாட்டியிடம் நூதன முறையில் கைவரிசை காட்டி நகையுடன் இளம்பெண் தப்பி சென்றார்.
    • கொள்ளை சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பொத்தியம்மா (வயது 90) வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

    இவரது வீட்டிற்கு நேற்று இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் மூதாட்டி பெத்தியம்மாளிடம் பக்கத்து வீட்டுக்கு புதிதாக குடிவந்துள்ளதாக கூறி அறிமுகம் செய்து கொண்டார்.

    பின்னர் உடல் வலிக்கு தைலம் தேய்த்து விடுவதாக கூறி அந்த பெண் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 2.5 பவுன் நகையை கழற்றிவிட்டு தேய்த்தார். பின்னர் தான் கொண்டு வந்த கவரிங் நகையை மூதாட்டியின் கழுத்தில் போட்டுவிட்டு அங்கிருந்து நகையுடன் இளம்பெண் தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து மதுரவாயல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நூதன முறையில் கைவரிசை காட்டி நகையுடன் தப்பிய பெண்ணை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரவாயலில் வியாபரி வீட்டின் பூட்டை உடைத்து13 பவுன் நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    மதுரவாயல், கிருஷ்ணா நகர் 14-வது தெருவைச் சேர்ந்தவர் சங்கர். கோயம்பேடு மார்க்கெட்டில் சாக்லேட் மொத்த விற்பனை கடை நடத்தி வருகிறார்.

    இவர் கடந்த 15-ந்தேதி சிவகாசி, திருத்தங்கலில் உள்ள உறவினர் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றார்.

    இன்று காலை அவர்கள் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 13 பவுன் நகை மற்றும் 2 எல்.இ.டி. டி.வி., 2 கேமரா மற்றும் கேமரா ஸ்டாண்டு ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    கடலூர் நியூ டவுண் கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் கிருபாகரன். ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவியுடன் கடலூரில் நடைபெறும் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரெயில் மூலம் சென்னை வந்தார்.

    பின்னர் அவர்கள் கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து கடலூர் செல்வதற்காக பஸ்சில் ஏறி அமர்ந்து இருந்தனர். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் பார்த்த போது அருகில் வைத்திருந்த பை மாயமாகி இருந்தது. அதில் 35 பவுன் நகை, லேப்டாப் மற்றும் ரூ. 20 ஆயிரம் ரொக்கம் இருந்தது. மர்ம நபர்கள் கைப்பையை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
    போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க இரவு நேரங்களில் காரில் சென்று வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பூந்தமல்லி:

    மதுரவாயல் பகுதியில் அடிக்கடி வீடுகளின் பூட்டை உடைத்து திருடும் சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதையடுத்து மதுரவாயல் உதவி கமிஷனர் ஜான்சுந்தர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வானகரம் அருகே மதுரவாயல்-தாம்பரம் பைபாஸ் சாலை சர்வீஸ் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அந்த காரில் 2 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்த போது, முன்னுக்குப்பின் முரணாக பேசினர். மேலும் அவர்கள் வந்த காருக்குள் விலை உயர்ந்த டி.வி. ஒன்றும் இருந்தது. அதுபற்றி போலீசார் கேட்டபோது, ஒரு வீட்டின் பூட்டை உடைத்து திருடி வந்ததாக தெரிவித்தனர்.

    இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவா என்ற முனியப்பன் (வயது 28), கார்த்திக் என்ற அப்துல் அமீது(34) என்பது தெரிந்தது.

    மேலும் விசாரணையில், இவர்கள் இருவரும் இரவு நேரங்களில் மதுரவாயல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க காரில் சென்று வீடுகளின் பூட்டை உடைத்து திருடி வந்ததை ஒப்புக்கொண்டனர்.

    அவர்களிடம் இருந்து சுமார் 13 பவுன் நகைகள், 2 எல்.ஈ.டி. டி.வி. மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் சிறையில் அடைத்தனர். #tamilnews
    ×