search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maha lakshmi"

    • பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரத்தில், நடு நாடு என்று சொல்லப்பட்ட பகுதியில் ஆதிதிருவரங்கம் உள்ளது.
    • கிருஷ்ணர் பெயரினால் விளங்கும் காட்டில் அமைந்துள்ளதால் ‘கிருஷ்ணாரண்யம்’ என்றும் பெயர் பெற்றது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது ஆதிதிருவரங்கம்.

    இக்கோவில் முதல்யுகமாகிய கிருதாயுகத்தில் அமைக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.

    முதல்யுகம் மற்றும் முதலவதாரம் என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளதால் இது ஆதி(முதல்) திருவரங்கம் என வழங்கப்படுகிறது.

    இக்கோவில் மூன்று முக்கிய பாக்கியங்களை பக்கதர்களுக்கு வழங்குகிறது.

    அவை முறையே வேலை, திருமணம் மற்றும் புத்திரபாக்கியம்.

    இங்குள்ள பெருமாள் சயனக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இதனை போகசயனம் எனக் கூறுகின்றனர்.

    போகம் என்றால் மகிழ்ச்சி (சந்தோசம்) எனப் பொருள்.

    அவரின் இந்த திருஉருவம் தமிழ்நாட்டில் உள்ள சயனக்கோலப் பெருமாள்களில் பெரியது என கூறப்படுகிறது.

    அவர் ஐந்து தலைக் கொண்ட ஆதிசேஷனின் மீது படுத்துள்ளார். அவரின் தலையை ஸ்ரீதேவி மடியில் கிடத்தியிள்ளார்.

    அவரின் கால்களில் ஒன்றை பூதேவி பிடித்துள்ளார். மற்றொரு கால் ஆதிசேஷனின் வால் மீதி வைத்துள்ளார்.

    அவரின் தோல்பட்டையை கருடபகவான் தாங்கியிருக்கிறார்.

    அவரின் இடது கை விரல்கள் 4 வேதங்களை குறிக்கின்றன. அவரின் வயிற்றிற்கு மேலாக பிரம்மன் காட்சியளிக்கின்றார்.

    இந்த நான்கு வேதங்களை பிரம்மாவிற்கு எடுத்துரைப்பதாக வருணிக்கப்படுகிறது.

    வேதங்களை உபதேசிப்பதால் இந்த காட்சியைக் கண்டால் உத்யோகப் பிராப்தம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

    மேலும் தம்பதிசமயந்தராக பெருமாள் காட்சியளிப்பதாலும் சந்திரனுக்கு சாபவிமோசனம் கொடுத்து அவர் மனைவியுடன் சேர்ந்ததால் திருமண யோகம் கிடைக்கும் எனவும், கிருதாயுகத்தில் சுரதகீர்த்தி என்னும் தொண்டை மன்னன், நாரதரின் ஆலோசைப்படி இங்கு தன் மனைவியுடன் வந்து வணங்கியதால் நான்கு ஆண்பிள்ளைகள் பெற்றதாக வரலாறுள்ளது. இதனால் புத்திரப்பாக்கியம் கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது.

    இக்கோவில் கிருஷ்ணருக்கு விருப்பமான தளமாக விளங்குகின்றது. இங்கு கிருஷ்ணர் கொடி மரம் அருகில் உயர்ந்த இடத்தில் தனிசன்னதியில் காட்சி அளிக்கின்றார். ஒரு கையில் வெண்னையும் மற்றொரு கையில் உரியோடும் தோன்றுகிறார்.

    பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரத்தில், நடு நாடு என்று சொல்லப்பட்ட பகுதியில் ஆதிதிருவரங்கம் உள்ளது.

    கிருஷ்ணர் பெயரினால் விளங்கும் காட்டில் அமைந்துள்ளதால் 'கிருஷ்ணாரண்யம்' என்றும் பெயர் பெற்றது.

    தமிழ் இலக்கணம் இலக்கிய முறைப்படி காடும், காட்டைச் சார்ந்த பகுதியில் இத்திருத்தலம் உள்ளதால் இந்நிலம் முல்லை நிலம் எனப்படும்.

    காட்டை சார்ந்த பகுதியில் முழு முதற்கடவுள் 'கிருஷ்ணர்' இருப்பதனால், இத்திருத்தலத்தில் கிருஷ்ணருக்கு ஒரு தனி சன்னதி உண்டு, இது பலி பீடத்திற்கு பின்புறம் மேல் மாடியில் அமைந்துள்ளது.

    பக்தர்கள் பலி பீடத்தில் இருந்தே கிருஷ்ணரை சேவித்துக் கொள்கிறார்கள்.

    இச்சன்னதியில் பாலகிருஷ்ணர் ஒரு கையில் வெண்ணையும் மற்றொரு கையில் உரியோடும், ஆண் உருவோடு காட்சித் தருகின்றார்.

    தென்பெண்ணை ஆற்றின் தென் கரையோரம் மேட்டுப் பாங்கான பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.

    இதன் தோற்ற மும் இதை உராய்ந் தாற்போல வடக் கிலும், கிழக்கிலும் நீர் வழிந்தோடும் பெண்ணை ஆற்றின் அழகும், மனதைக் கவர்ந்த கண் கொள்ளாக் காட்சி யாய் இன்பம் அளிக்கிறது.

    • ஆதி திருவரங்கத்தில் இருக்கும் பெருமாள் நினைத்தால்தான் இந்த தலத்துக்கு வர முடியும் என்பது ஐதீகமாகும்.
    • ஆதி திருவரங்கம் ஆலயம் முதல் யுகத்தில் உருவான வைணவ தலம் என்ற சிறப்பை பெற்றது.

    1. ஆதி திருவரங்கம் ஆலயம் முதல் யுகத்தில் உருவான வைணவ தலம் என்ற சிறப்பை பெற்றது.

    2. ஆதி திருவரங்கத்தில் இருக்கும் பெருமாள் நினைத்தால்தான் இந்த தலத்துக்கு வர முடியும் என்பது ஐதீகமாகும்.

    3. ஆலய வழிபாட்டிற்கு செல்லும் பக்தர்களிடம் இந்த ஆலயத்தின் சிறப்புகளை அர்ச்சகர்கள் சொல்லிக்கொண்டே இருப்பது சிறப்பாகும்.

    4. ஆதிதிருவரங்கம் ஆலயம் திராவிட கட்டிட கலை பாணியில் கட்டப்பட்டு உள்ளது. இங்குள்ள சிற்பங்கள் திராவிட கலையின் சிறப்புகளை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

    5. ஆதி திருவரங்கம் ஆலயத்தை மிகப்பெரிய ஆலயம் என்றும் சொல்ல முடியாது. மிகச்சிறிய ஆலயம் என்றும் குறித்துவிடமுடியாது.

    2 பிரகாரங்களுடன் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

    6. ஆதி திருவரங்கத்தின் ஆலய சுற்றுச்சுவர்கள் மிக மிக உயரமானவை. வைணவ தலங்களில் சில ஆலயங்களில் மட்டுமே இத்தகைய உயரமான சுற்றுச்சுவரை காண முடியும்.

    7. இந்த ஆலயத்தில் பலிபீடம், கொடிமரம் ஆகிய இரண்டும் மகா மண்டபத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    8. இந்த ஆலயம் முதல் யுகத்தில் திருமாலின் முதல் அவதாரத்தை குறிக்கும் வகையில் உள்ளது. எனவேதான் இந்த ஆலயத்தை ஆதி திருவரங்கம் என்று சொல்லுகிறார்கள்.

    9. சிறப்பான வைணவ தலங்கள் 108 திவ்ய தேசம் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். ஆனால் இந்த தலம் திவ்ய தேச பட்டியலில் இல்லாமல் தனித்துவமாக திகழ்கிறது.

    10. ஆதி திருவரங்கம் ஆலயம் மிகச்சிறந்த பிரார்த்தனை தலமாகும்.

    • பல ஆலயங்கள் பாடல் பெற்றவை. குறிப்பாக திருக்கோவிலூர் ஆலயம் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
    • இந்த தலங்கள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமை சிறப்பு கொண்டவை.

    ஆதி திருவரங்கம் திருத்தலத்துக்கு செல்பவர்கள் திட்டமிட்டு யாத்திரை பயணத்தை அமைத்துக் கொண்டால் திருக்கோவிலூர் மற்றும் அதை சுற்றியிருக்கும் பகுதிகளில் உள்ள பல ஆலயங்களை பார்த்துவிட்டு வர முடியும்.

    ஆதிதிருவரங்கம் ஆலயத்தில் இருந்து 10 கி.மீட்டர் சுற்றளவில் மிகப்பழமையான சைவ, வைணவ தலங்கள் உள்ளன.

    இந்த தலங்கள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமை சிறப்பு கொண்டவை.

    பல ஆலயங்கள் பாடல் பெற்றவை. குறிப்பாக திருக்கோவிலூர் ஆலயம் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

    எனவே ஆதிதிருவரங்கம் ஆலயத்துக்கு செல்பவர்கள் அவசியம் திருக்கோவிலூர் ஆலயத்துக்கும் சென்று வாருங்கள்.

    இதில் திட்டமிடல்தான் முக்கியமானது.

    ஏனெனில் பெரும்பாலான ஆலயங்கள் மதியம் நடை மூடப்பட்டுவிடும்.

    ஆனால் ஆதிதிருவரங்கம் ஆலயத்தில் பகல் நேரத்தில் நடை மூடப்படுவதே கிடையாது.

    அதிகாலை 6 மணிக்கு திறந்தால் இரவு 8 மணிவரை அந்த ஆலயம் திறந்தே இருக்கும்.

    எனவே ஆதிதிருவரங்கம் ஆலயத்துக்கு எப்போது வேண்டுமானாலும் சென்று வரலாம்.

    மற்ற ஆலயங்களுக்கு முன்னதாக சென்றுவிட்டு மதியம் நேரத்தில் ஆதிதிருவரங்கம் ஆலயத்தில் தரிசனம் செய்யும் வகையில் உங்கள் ஆன்மிக பயணத்தை வைத்துக்கொண்டால் கூடுதலாக சில ஆலயங்களை தரிசனம் செய்யமுடியும்.

    சென்னையில் இருந்து நீண்ட தொலைவில் உள்ள பழமையான ஆலயங்களை தரிசிக்க செல்பவர்களுக்கு ஆலயம் நடை மூடப்படும் நேரம் மற்றும் குறிப்பிட்ட முகூர்த்த நேரம் முக்கியமானதாகும்.

    ஆதிதிருவரங்கத்துக்கு செல்பவர்களுக்கு இந்த பிரச்சினை இல்லை. எப்போதும் வழிபட முடியும்.

    • ரங்கநாயகி தாயாருக்கு தினமும் அபிஷேகம் நடைபெறும்.
    • இதில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

    ஆதி திருவரங்கம் ஆலயத் தில் தினமும் 2 கால பூஜை நடத்தப்படுகிறது.

    காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள் முதல் பூஜை நடத்தப்படும்.

    பிறகு மாலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் 2&வது பூஜை நடைபெறும்.

    மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட மாட்டாது.

    மூலவர் சிலை மூலிகை மற்றும் சுதையால் செய்யப்பட்டு இருப்பதால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

    அதற்கு பதில் சந்தனகாப்பு செய்யப்படுகிறது.

    உற்சவருக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படும்.

    சனிக்கிழமை தோறும் சிறப்பாக அந்த அபிஷேகத்தை நடத்துவார்கள்.

    அன்று காலை 8 மணிக்கு தொடங்கி அனைத்து அபிஷேகங்களையும் செய்வார்கள்.

    பக்தர்களும் இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்கலாம்.

    ரங்கநாயகி தாயாருக்கு தினமும் அபிஷேகம் நடைபெறும்.

    இதில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இந்த அபிஷேக தரிசனத்தை செய்தால் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    • திருக்கோவிலூர் ஆதிதிருவரங்கம் ஆலயத்தில் ரங்கநாதர் புஜங்க சயன கோலத்தில் இருக்கிறார்.
    • இவர் முதல் யுகத்தில் அவதாரம் எடுத்தவர்.

    பொதுவாக பெருமாள் 8 விதமான சயன கோலத்தில் காட்சி அளிப்பார்.

    உத்தான சயனம், தர்ப்ப சயனம், தல சயனம், புஜங்க சயனம், யோக சயனம், மாணிக்க சயனம், வடபத்ர சயனம், வீர சயனம் என்று 8 விதமான கோலத்தில் ரங்கநாதரின் சயன கோலங்களை பல்வேறு ஆலயங்களில் காணலாம்.

    திருக்கோவிலூர் ஆதிதிருவரங்கம் ஆலயத்தில் ரங்கநாதர் புஜங்க சயன கோலத்தில் இருக்கிறார்.

    இவர் முதல் யுகத்தில் அவதாரம் எடுத்தவர்.முதல் யுகம் பாற்கடலில் பள்ளிக்கொண்டதை குறிக்கும். அதற்கு வெண்மை உகந்தது.

    எனவே ஆதிதிருவரங்கம் ரங்கநாத பெருமாளை வெண்மை நிற பூக்களால் வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

    முதல் யுகத்தில் பெருமாளின் முதல் அவதாரமாக நடந்தது மச்ச அவதாரம் ஆகும்.

    மச்ச அவதாரத்திற்கு உரிய திதியாக நவமி திதி உள்ளது.

    ஆகையால் நவமி திதி நாட்களில் இங்கு வழிபடுவது கூடுதல் சிறப்பு.

    ஜென்ம நட்சத்திர நாட்களில் சென்று வழிபட்டால் மேலும் பலன் கிடைக்கும்.


    • ஆதிதிருவரங்கம் ரங்கநாதரை பார்ப்பதே மிகப்பெரிய பாக்கியம்.
    • அவரது ஆசி இருந்தால் மட்டுமே அவரை சென்று பார்க்க முடியும் என்று சொல்கிறார்கள்.

    நாம் மேலே குறிப்பிட்ட ரங்கநாதர் ஆலயங்கள் ஒவ்வொன்றிலும் பெருமாள் விதவிதமான சயன கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.

    இந்த ஆலயங்களில் உள்ள பெருமாள்கள் சுமார் 15 அடி முதல் 21 அடி வரை சயன கோலத்தில் உள்ளனர்.

    ஆனால் இந்த சயன கோல பெருமாள்கள் அனைவரையும் மிஞ்சும் வகையில் திருக்கோவிலூர் அருகே

    ஆதிதிருவரங்கத்தில் இருக்கும் பெருமாள் மிக பிரமாண்டமான சயன கோலத்தில் இருக்கிறார்.

    23 அடி நீளத்தில் அங்கு ரங்கநாதர் புஜங்க சயனத்தில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.

    தமிழகத்திலேயே மிகப்பெரிய சயன கோல பெருமாள் இவர்தான். ஸ்ரீரங்கம் பெருமாளையும் விட பெரியவர்.

    ஸ்ரீரங்கம் தலம் தோன்றும் முன்பே உதித்து விட்டவர். எனவே இவரை பெரிய பெருமாள் என்று சொல்கிறார்கள்.

    ஸ்ரீரங்கத்து ரங்கநாதர் 7&வது அவதாரத்தில்தான் வந்தார்.

    ஆனால் ஆதிதிருவரங்கம் ரங்கநாதர் முதல் அவதாரத்திலேயே வந்து விட்டவர்.

    இதில் இருந்தே ஆதிதிருவரங்கம் ரங்கநாதர் முதன்மையானவர் என்பது புரியும்.

    ஆனால் தமிழகத்தில் நிறைய பேர் இந்த உண்மையை இன்னமும் உணராமலேயே இருக்கிறார்கள்

    ஆதிதிருவரங்கம் ரங்கநாதரை பார்ப்பதே மிகப்பெரிய பாக்கியம்.

    அவரது ஆசி இருந்தால் மட்டுமே அவரை சென்று பார்க்க முடியும் என்று சொல்கிறார்கள்.

    • குடும்பத்தில் குதூகலமும் ஒற்றுமையும் ஓங்கும்.
    • லட்சுமி சுலோகம் சொல்லி வழிபட வேண்டும்.

    ஸ்ரீவிஷ்ணுவின் விருப்பத்தால் தேவர்களும் அசுரர்களும் ஒன்று சேர்ந்து திருப்பாற் கடலை கடைந்தனர். அப்போது பாற்கடலில் இருந்து ஸ்ரீ மகாலட்சுமி தோன்றினாள். அந்த நன்நாளே ஸ்ரீபஞ்சமி-லட்சுமி பஞ்சமி எனப்படுகிறது. இன்று (ஞாயிறு) லட்சுமி பஞ்சமி தினமாகும். இன்று விரதம் இருந்து ஸ்ரீ விஷ்ணுவுடன் ஸ்ரீ லட்சுமி தேவியை பூஜை செய்து மல்லிகைப் பூவால் லட்சுமி சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்து லட்சுமி சுலோகம் சொல்லி வழிபட வேண்டும். இதனால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் ஏற்படும், ஏழ்மை விலகும்.

    இன்று பஞ்சமியில் விரதம் இருக்கலாம். இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலமாக தொழில் வளம் பெருகும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் வறுமை நீங்கும். குடும்பத்தில் குதூகலமும் ஒற்றுமையும் ஓங்குவதும், சுபநிகழ்ச்சிகள் நடப்பதும், வீடு, வாகனம் முதலிய பொருள் சேர்க்கை ஏற்படும்.

    இன்று காலை எழுந்தவுடன் வீட்டை தூய்மை செய்து, வீட்டில் உள்ள அனைவரும் நீராடி விட்டு பூஜை அறையில் ஒரு பலகை வைத்து, அதிலே கோலம் போட்டு, கலசத்தை ஆவாகனம் செய்ய வேண்டும். அந்த கலசத்தில் திருமகளுக்கான லட்சுமி மந்திரங்களைச் சொல்லி ஆவாகனம் செய்ய வேண்டும். "இந்த கலசத்தில் மகாலட்சுமி தாயே வந்து அமர வேண்டும். எங்கள் எளிய பூஜையை ஏற்றுக்கொண்டு திருப்தி அடைய வேண்டும்" என்று மனதார பிரார்த்தனை செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

    இன்று குதிரை பூஜை தினம்

    ஹயம் என்றால் குதிரை. குதிரையை பூஜிக்க வேண்டிய நாளே ஹய பஞ்சமி. தேவ அசுரர்கள் மந்திரமலையை மத்தாக்கி வாசுகி என்னும் பாம்பை கயிறாக்கி பாற்கடலைக் கடைந்த போது கடலில் இருந்து உச்சைஸ்ரவஸ் என்னும் பறக்கும் சக்தி உடைய தேவக்குதிரை தோன்றிய நாள்தான் இன்று பஞ்சமி நாள். எனவே இன்று குதிரையை பூஜித்து, குதிரைக்கு கொள்ளு தானியத்தை சாப்பிடதர வேண்டும். மேலும் குதிரை வடிவில் வந்து அருள்புரிந்த ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தியை ஆராதிக்கலாம். இதனால் நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வியாபார லாபமும் ஏற்படும்.

    • மகாலட்சுமி தாயார் கோவிலில் நவராத்திரி உற்சவம் நடந்து வருகிறது.
    • பட்டு வஸ்திரங்கள் ஊர்வலமாக எடுத்து வந்து மகாலட்சுமி தாயாருக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மராட்டிய மாநிலம் கோல்காபூரில் உள்ள மகாலட்சுமி தாயார் கோவிலில் நவராத்திரி உற்சவம் நடந்து வருகிறது. அதையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, அவரின் மனைவி சொர்ணலதாரெட்டி ஆகியோர் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பணம் செய்வதற்காக கோல்காபூருக்கு சென்றனர்.

    கோவிலுக்கு சென்ற அறங்காவலர் குழு தலைவர், மனைவியை கோவில் அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். அதன்பிறகு அறங்காவலர் குழு தலைவர் தம்பதியினர் பட்டு வஸ்திரங்களை ஊர்வலமாக எடுத்து வந்து மகாலட்சுமி தாயாருக்கு சமர்ப்பித்து, மகாலட்சுமி தாயாரை தரிசனம் செய்தனர். அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர். அவர்களுக்கு கோவில் பிரசாதம் வழங்கினர்.

    அப்போது திருமலை-திருப்பதி தேவஸ்தான டெல்லி தகவல் மைய உள்ளூர் ஆலோசனைக் குழு தலைவர் வேமிரெட்டி பிரசாந்தி ரெட்டி தம்பதியர் உடனிருந்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • லட்சுமியை தியானித்து பூஜை செய்ய வேண்டும்.
    • சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

    நவராத்திரியில் வரும் ஜேஷ்டா நட்சத்திர லட்சுமி பூஜை மிகவும் விசேஷமான பூஜையாகும். மூல நட்சத்திரத்திற்கு முதல் நாள் வரும். தமிழில் கேட்டை நட்சத்திரம் என்று சொல்வார்கள்.

    சாதாரணமாக இந்த லட்சுமி பூஜை படம், படி அரிசி, குத்து விளக்கு, இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் லட்சுமியை தியானித்து பூஜை செய்ய வேண்டும். இதனால் வறுமை அகலும் என்பது ஐதீகம். அன்று சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும். மகாலட்சுமியை குறித்து சொல்லும் சுலோகங்கள், அஷ்டோத்திரம், சகஸ்ர நாமம் சொல்லி குங்குமம், புஷ்பம், அட்சதைகளினால் அர்ச்சிக்கலாம்.

    மூலநட்சத்திர தீபம்: மூல நட்சத்திர தீபம் என்பது நவராத்திரி பூஜை சமயத்தில் சரஸ்வதி ஆவாகனம் செய்யும் மூலநட்சத்திரத்தன்று ஏற்றும் ஒரு அகண்ட தீபம் ஆகும். இந்த தீபமானது சரஸ்வதி பூஜை வரையிலும் அகண்டமாக அணையாமல் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.

    இதை ஏற்றுவதற்கு நந்தாதீபம் போன்ற நாக்கு வைத்த விளக்கு அல்லது காமாட்சி விளக்கு உசிதமானது. மூலம் நட்சத்திரத்தன்று காலையில் குளித்து புதிய ஆடை அணிந்து கொண்டு சுவாமியின் முன் ஒரு இடத்தைசுத்தம் செய்து செம்மண் கோலம் போட்டு அலங்கரித்து அதன் மேல் ஒரு சிறிய மர பலகை அல்லது தட்டு வைத்து சிறிய அரிசியை பரப்பி அதன் மேல் விளக்கு வைத்து ஏற்றி பூக்களைப்போட்டு நமஸ்கரிக்க வேண்டும். பசு நெய் ஸ்ரேஷ்டம் ஆனால் மூன்று நாட்களும் எரிந்து கொண்டிருக்க வேண்டியதினால் அந்த அளவு நெய் கிடைப்பது கஷ்டம். ஆகையால் நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றலாம்.

    விளக்கு மலையேறாமல் அடிக்கடி எண்ணெய் ஊற்றி திரியை தூண்டிவிட வேண்டும். இரவில் படுப்பதற்கு முன்பு நிதானமாக திரியின் மேல் பாகத்தை சுத்தம் செய்து எண்ணெய் ஊற்ற வேண்டும். திரியைசுத்தம் செய்யும் பொழுது அணையாமல் இருக்க வேறு திரியை ஏற்றி விட்டு சுத்தம் செய்து பிறகு ஏற்ற வேண்டும்.

    • 4-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை மகாலட்சுமி வழிபாட்டுக்கு உரிய நாட்களாகும்.
    • செல்வங்கள் அனைத்தும் நிரந்தரமாக தங்கி இருக்கும்.

    ஆவணி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சப்தமி வரை உள்ள நாட்கள் (4-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை) மகாலட்சுமி வழிபாட்டுக்கு உரிய நாட்களாகும்.

    இந்த நாட்களில் ஒவ்வொரு நாளும் ஸ்ரீமகாலட்சுமியை ஸ்ரீஸூக்தம் கனகதாரா ஸ்தவம் போன்றவற்றால் ஸ்தோத்ரம் செய்து வழிபட வேண்டும்.

    மல்லிகை, முல்லை புஷ்பங்களால் ஸ்ரீலட்சுமி அஷ்டோத்தரம் முதலிவைகளால் அர்ச்சித்து கொள்ள வேண்டும்.

    இப்படி நமஸ்கரித்து பிரார்த்திப்பதால் குடும்பத்தில் ஏழ்மை விலகும். செல்வங்கள் அனைத்தும் நிரந்தரமாக தங்கி இருக்கும்.

    • தொழிலில் உபரி லாபம் உண்டாகும்.
    • பதவி உயர்வு கிடைக்கும்.

    ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையானது அன்னை காளிகாம்பாளுக்கு உகந்தது.

    பார்வதி தேவியின் மற்றொரு வடிவமான காளிகாம்பாளை மூன்றாம் வெள்ளிக்கிழமையின் போது வேண்டினால், தைரியம் அதிகரிப்பதோடு, ஆரோக்கியமும் மேம்படும். கொடிய நோய் தாக்கம் குறையும். நிலையான தொழில் மற்றும் உத்தியோக அனுகூலம் உண்டாகும்.

    தொழிலில் உபரி லாபம் உண்டாகும். முதலாளி, தொழிலாளிகளுக்கு இடையே உள்ள பிரச்சினைகள் சுமூகமாகும். பதவி உயர்வு கிடைக்கும்.

    ஜாதகத்தில் சனி+ ராகு, கேது சேர்க்கையால் உருவாகும் இன்னல்கள் குறையும்.

    • அதிகாலை மூலவர் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.
    • மாலை 6 மணிக்கு பத்மாவதி தாயார் தங்க ரதத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    வரலட்சுமி விரதம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக சுமங்கலி பெண்கள் தங்களது தாலி பாக்கியம் வேண்டி விரதம் இருந்து வரலட்சுமி அம்மனுக்கு பூஜை செய்து வழிபடுகின்றனர்.

    திருப்பதி திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விரதத்தையொட்டி கோவில் வளாகம் விழா கோலம் பூண்டுள்ளது. கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிக்கிறது.

    பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மலர்களைக் கொண்டு கோவில் வளாகம் மற்றும் ஆஸ்தான மண்டபம் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி விழா நடந்தது. இந்த ஆண்டு விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. பக்தர்களை ஒழுங்குபடுத்த தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    அதிகாலை மூலவர் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    காலை 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்தி பத்மாவதி தாயார் ஆஸ்தான மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு மதியம் 2 மணி வரை சிறப்பு பூஜைகள் மலர் அபிஷேகம் நடந்தது.

    இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்.

    மாலை 6 மணிக்கு பத்மாவதி தாயார் தங்க ரதத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    ×