search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "make in india"

    • இந்தியாவில் வைத்தே ராக்கெட்களை தயாரிக்கும் தொழிலில் அதானி நிறுவனம் ஈடுபட உள்ளது.
    • தனது தயாரிப்புகளை உலகம் முழுவதிலும் அதானி ஏரோஸ்பேஸ் சந்தைப்படுத்த உள்ளது.

    இந்தியாவைச் சேர்ந்த உலகப் பணக்காரரான கவுதம் அதானியின் அதானி குழுமம், துறைமுகம்,விமானம், சோலார் உள்ளிட்ட துறைகளில் கோலோச்சி வருவதால் கடந்த 10 ஆண்டுகளாக கவுதம் அதானியின் சொத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் அதானி குழுமத்தின் கிளை நிறுவனமான அதானி டிபன்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் பிரான்சின் தாலேஸ் நிறுவனத்துடன் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.

    அதாவது இந்தியாவில் வைத்தே ராக்கெட்களை தயாரிக்கும் தொழிலில் அதானி நிறுவனம் ஈடுபட உள்ளது. மத்திய அரசு பல்வேறு பொதுத்துறைகளை தனியார் மயமாக்கி வரும் நிலையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே இஸ்ரோவுக்கான ராக்கெட் தளவாடங்கள், இந்திய ராணுவத்துக்கான ராக்கெட் தளவாடங்களை அதானி ஏரோஸ்பேஸ் நிறுவனம் மேம்பட்ட முறையில் தயாரிக்க உள்ளது.

    முன்னதாக இந்தியாவுக்கான பெருமாபாலான ராக்கெட்டுகளை வெளிநாடுகளிலிருந்தே அரசு வாங்கி வந்த நிலையில் தற்போது உள்நாட்டிலேயே ராக்கெட் தயாரிப்பு நடைபெற உள்ளது. இந்தியா மட்டுமின்றி தனது தயாரிப்புகளை உலகம் முழுவதிலும் அதானி ஏரோஸ்பேஸ் சந்தைப்படுத்த உள்ளது.

    மேலும் இந்த மாத தொடக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்த்த மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு துறையில் சிறந்து விளங்கும் EDGE குழுமத்துடன் அதானி குழுமம் இதுபோன்றதொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது. 

    • கம்ப்யூட்டர், லேப்டாப் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம்.
    • இந்தியா தற்போது 2-வது பெரிய சந்தையாக உள்ளது.

    தைவான் நாட்டை சேர்ந்த 'ஏசர்' மற்றும் 'அசுஸ்' உலகின் மிகப்பெரிய கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்நாட்டு தொழிலுக்கு ஆதரவு அளிக்கும் முயற்சியில் இறக்குமதிக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தைவானின் ஏசர் மற்றும் அசுஸ் நிறுவனங்கள் இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை தொடங்க திட்டமிட்டு உள்ளன. இதுகுறித்து ஏசர் தலைவர் ஜேசன் சென் கூறும் போது, "இந்தியாவில் இந்த ஆண்டு கம்ப்யூட்டர், லேப்டாப் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம்."

     


    "எங்களது ஏற்றுமதியில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா தற்போது 2-வது பெரிய சந்தையாக உள்ளது. கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு அதிகப்படியான கம்ப்யூட்டர், லேப்டாப்புகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்திய சந்தை மிகவிரைவாக விரிவடைந்து வருகிறது. ஆனாலும் இந்தியா கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது."

    "இந்தியாவில் உதிரிபாகங்களை இறக்குமதி செய்து அசெம்பிளி உற்பத்தி மட்டுமே நடக்கிறது. எனவே புதிதாக உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம். மேலும் நேரடியாக தொழில் தொடங்க மத்திய அரசு முன்னுரிமை வழங்கி உள்ளது."

    "இதன் காரணமாக இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் புதிய உற்பத்தி ஆலை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஏசர் மற்றும் அசுஸ் டெக் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை இரு மடங்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளன," என்று தெரிவித்தார்.

    • 2014-ல் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது
    • 90-களில் அயல்நாடுகளிலிருந்து கார்களை வாங்கி குவித்தோம்

    இந்திய தொழில் துறையில் முதலீடுகளை அதிகரிக்கவும், புதுமைகளை வளர்க்கவும், திறனை மேம்படுத்தவும், அறிவுசார் உடைமைகளை பாதுகாக்கவும் மற்றும் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், அதனை கொண்டு இந்தியாவிலேயே அனைத்து பொருட்களும் தயாரிக்கவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், வெளிநாட்டு இறக்குமதியை குறைக்கவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் 2014-ல் கொண்டு வரப்பட்டது "மேக் இன் இந்தியா" திட்டம்.

    இந்நிலையில் கிழக்கு பொருளாதார மன்றத்தின் 8-வது அமர்வில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    ஒரு காலத்தில் நாங்கள் வெளிநாடுகளிலிருந்து மட்டுமே கார்களை இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். ஆனால், பிறகு நாங்கள் உள்நாட்டில் கார்களை உற்பத்தி செய்ய தொடங்கினோம். நாங்கள் 90-களில் இறக்குமதி செய்து குவித்து வந்த அயல்நாட்டு மெர்சிடிஸ் மற்றும் ஆடி கார்களை போல் இவை மிக பிரமாண்டமானவை அல்ல என்றாலும் அது ஒரு குறை அல்ல.

    எங்கள் கூட்டாளிகளின் வழிமுறைகளை நாங்களும் கடைபிடிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இந்தியாவின் "மேக் இன் இந்தியா" (இந்தியாவிலேயே தயாரியுங்கள்) திட்டம் போன்றவற்றை நாங்களும் கையாள விரும்புகிறேன். உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்துவதன் மூலமும் அந்தந்த நகரங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும்.

    இத்தகைய பொருளாதார வளர்ச்சிக்கான வெற்றி பெறும் வழிமுறைகளை ரஷியா இந்தியாவை போல கையாள வேண்டும். இந்தியர்கள் இந்தியாவிலேயே அதிகளவில் வாகனங்களை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகின்றனர். இது மிக சரியான வழிமுறை. மோடி மிக சரியானதைத்தான் செய்கிறார்.

    இவ்வாறு புதின் தெரிவித்தார்.

    கடந்த 9, 10 தேதிகளில் இந்தியா ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமர் மோடியை உலக நாடுகள் பாராட்டி வரும் பின்னணியில் ரஷிய அதிபரின் இந்த கருத்து பார்க்கப்படுகிறது.

    • டாடா மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் மூலம் உள்நாட்டில் இந்த விமானங்கள் தயாரிக்கப்படும்.
    • புதிய திட்டத்திற்கு, அக்டோபர் 30 ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

    தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படைக்கான போக்குவரத்து விமானம் தயாரிக்கும் திட்டத்திற்கு குஜராத் மாநிலம் வதோதராவில் நாளை மறுநாள் 30ந் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் அஜய் குமார் கூறியதாவது:

    (இந்திய விமானப்படைக்கு) ஸ்பெயின் நிறுவனத்திடமிருந்து 56 சி-295 எம்.டபிள்யூ ரக போக்குவரத்து விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்படி, 16 விமானங்கள் பெறப்படும். எஞ்சிய 40 விமானங்கள் டாடா மற்றும் டிசிஎஸ் கூட்டமைப்பு மூலம் உள்நாட்டில் தயாரிக்கப்படும். தனியார் நிறுவனம் மூலம் முதல் முறையாக இந்திய ராணுவத்திற்கான விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன. 

    இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.21,935 கோடியாகும். விமானப்படைக்கான இந்த விமானங்கள் மக்கள் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் விமானப்படைக்கான முதல் போக்குவரத்து விமானம் 2026 செப்டம்பர் மாதம் தயாராகி விடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உலக அடையாளமாக மாறியுள்ள 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம் இந்தியா மட்டுமன்றி உலக நாடுகளும் பொருட்களை தயாரிக்கின்றன என பிரதமர் மோடி ஜப்பானில் பேசினார். #NarendraModi #MakeInIndia #BJP
    டோக்கியோ :

    இந்தியா - ஜப்பான் இடையிலான, 13-வது ஆண்டு மாநாடு, இரண்டு நாட்கள் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க, பிரதமர் மோடி, ஜப்பான் சென்றுள்ளார். டோக்கியோ நகரில் ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:

    தீபாவளி வெளிச்சம் போல் இந்தியர்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்கள். வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறார்கள்.



    டிஜிட்டல் கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களை இந்தியா ஏற்படுத்தி வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.  உலக அடையாளமாக மாறியுள்ள 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம் இந்தியா மட்டுமன்றி உலக நாடுகளும் பொருட்களை தயாரிக்கின்றன என்று கூறினார்.

    இந்துக்களோ, புத்த மதத்தை சேர்ந்தவர்களோ நமக்கு ஒன்று தான். இந்துக்கடவுள்களை ஜப்பானியர்கள் வணங்குகின்றனர். சேவை என்ற சொல் ஜப்பானிலும், இந்தியாவிலும் ஒன்று தான். #NarendraModi #MakeInIndia #BJP
    ×