என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Malai Amman"
- ஆடிப்பூர வளைகாப்பு முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றது.
- ஊர்வலத்தில் வந்த பக்தர்கள் அனைவரும் மாங்கல்ய பொருள்கள் கையில் ஏந்தி வந்திருந்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வணிக வைசிய சமுதாயத்திற்கு பார்த்தியப்பட்ட மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் ஆடிப்பூர வளைகாப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றது.
பின்னர் அதைத் தொடர்ந்து தனுஷ்கோடியாபுரம் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவில் முன்பில் இருந்து சீனிவாச பெருமாள் தாயார்களுடன் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து ஊர்வலமாக மாலை அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தார். ஊர்வலத்தில் வந்த பக்தர்கள் அனைவரும் மாங்கல்ய பொருள்கள் கையில் ஏந்தி வந்திருந்தனர். அதனைத் தொடர்ந்து அம்பாளுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது.
விழாவில் வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்க மாரியப்பன், முன்னாள் தலைவர் பூவலிங்கம், தலைமை ஆசிரியர் மாரியப்பன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் பரமசிவம், முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் ரத்தினவேல், இணைச் செயலாளர் காளிதாஸ், ஆலோசகர் மாதவராஜ், மாரிக்கண்ணன், முனிய செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வளைகாப்பு விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் மாங்கல்ய பொருட்கள் மற்றும் 5 வகை பிரசாதம் வழங்கப்பட்டது.