search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malayalam film director Ranjith"

    • பாதிக்கப்பட்டவர்கள் முறையான புகார் அளித்தால் மட்டுமே விசாரிக்க முடியும்.
    • குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணை அமைப்பு வேண்டும்.

    பலேரி மாணிக்கம் பட விவாதத்தின் போது அந்த படத்தின் நடிகரும் இயக்குனருமான ரஞ்சித், தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என நடிகை ஸ்ரீலேகா மித்ரா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து கேரள திரைப் பட அகாடமி பதவியில் இருந்து ரஞ்சித் விலக வேண்டும் என்ற கோஷங்கள் எழுந்துள்ளன.

    இந்த நிலையில் ரஞ்சித் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நடிகரும் கொல்லம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான முகேஷ் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழல் இருக்க வேண்டும். ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமை மற்றும் மலையாள திரை உலகில் பெண்கள் எதிர்கொள்ளும் இதர பிரச்சனைகள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் முறையான புகார் அளித்தால் மட்டுமே விசாரிக்க முடியும்.

    அறிக்கையில் உள்ள தகவல்கள் குறித்து விசாரணை நடத்த கோர முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு எந்த புகாரும் இல்லை என்று அறிவித்தால் என்ன நடக்கும்? எனவே பிரச்சனைகளை எதிர்கொண்ட பெண்கள் புகார் அளிக்க தயாராகும் வரை எந்த நடவடிக்கைக்கும் பரிந்துரைக்க முடியாது.

    கேரளா கலாசித்ரா அகாடமியின் தலைவர் ரஞ்சித் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை அவர் ராஜினாமா செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர் என் நண்பர் மற்றும் சக ஊழியர். தான் நிரபராதி என அவர் கூறுகிறார். அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணை அமைப்பு வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    ×