search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "manimaran"

    • சமுதாய வளைகாப்பு விழாவை மணிமாறன் தொடங்கி வைத்தார்.
    • திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப் பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. நகர மன்ற தலைவர் ரம்யா முத்துக் குமார் தலைமை தாங்கினார். மதுரை தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தொடங்கி வைத்தார்.

    ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்டம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப்பெண் களுக்கு 5 வகையான ஊட்டச்சத்து உணவு வளையல் பழ வகைகள் நெய் உடை மற்றும் சில்வர் தட்டு ஆகியவற்றை மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தொடங்கி வைத்தார்

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் வட்டார அளவில் உள்ள தாய்மார்களுக்கு ஆண்டுதோறும் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திலும் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் முதல் தவணையாக 2000 மூன்றாம் மாதம் முடிவில் 2000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் கர்ப்பகால சேவைக்காக 2000 வழங்கப்படுகிறது இதன் ஒரு பகுதியாக இன்று திருமங்கலத்தில் செக்கானூரணி, சாத்தங்குடி, புதுப்பட்டி, திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப் பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கிருத்திகா தங்க பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராம லிங்கம், நகராட்சி துணை சேர்மன் லதா அதியமான், ஆதவன் அதியமான், ஒன்றிய கவுன்சிலர்கள் மதன் தங்கப்பாண்டி, கவுன்சிலர்கள் சின்னச்சாமி, திருக்குமார், வீரக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • இந்தக் கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் தி.மு.க. சார்பில் பாக முகவர்க ளுக்கான ஆலோசனைக் கூட்டம் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணி மாறன் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார்.

    தொடர்ந்து மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் பேசியதாவது:-

    தேர்தலில் கிளைச் செய லாளராக இருப்பவர்கள் பாக முகவர்தான். உங்கள் பணி மிகவும் முக்கியமானது. நமது பகுதியில் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர். அதை சரியாக கணக்கெடுக்க வேண்டும். பாக முகவர்கள் தான் தேர்தலின் அடித்தளம் பொதுமக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்வு காண்பதற்காக வாட்ஸ்அப் குரூப் ஒன்றை அமைத்து அதை உடனடியாக தீர்வு காண நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.

    கிராமம், கிராமமாக சென்று திண்ணை பிரசாரம் செய்து அ.தி.மு.க.வின் பொய் பிரசாரத்தை முறி யடிக்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பணிகளை கொண்டு வந்தது காங்கிரஸ் தான். அதனை தாங்கள் கொண்டு வந்ததாக

    அ.தி.மு.க.வினர் கூறி வருகின்றனர்.

    அதனை முறியடிக்க வேண்டும் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. நல்லாட்சியின் சான்றாக இந்த தேர்தல் அமைய வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் தற்போது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற்று தமிழகத்தில் முதல் தொகுதி யாக தொண்டர்கள் அனை வரும் பாடுபட வேண்டும்.

    இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன், முத்துராமன் மகிழன் மாநில விவசாய அணி இணைச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், அணி அமைப்பாளர்கள் கொடி சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் லதா அதியமான், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதிமூலம், சிவமுருகன், ஒன்றிய செய லாளர்கள் தனபாண்டியன், ராமமூர்த்தி, நாகராஜ், மதன்குமார், பாண்டியன், பேரூர் செயலாளர்கள் வருசை முகமது, திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், நகர மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதிய மான் உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பூவரசம் காயை சாப்பிட்டு சிகிச்சை பெற்று வரும் மாணவ-மாணவிகளை தி.மு.க. மாவட்ட செயலாளர் நேரில் சந்தித்தார்.
    • சிகிச்சையில் இருந்த மாணவர்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் பள்ளி வளாகத்திற்குள் இருந்த பூவரசரம் மரகாயை எடுத்து சாப்பிட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் ஒவ்வொரு மாணவராக மயக்கம் அடைந்தனர். அவர்கள் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை தெற்குமாவட்ட தி.மு.க. செயலாளர் மணி மாறன் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர் சிகிச்சையில் இருந்த மாணவர்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் தெரி வித்தார்.

    மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பாக டாக்டர்களிடம் கேட்ட றிந்தார். அப்போது திருமங்க லம் நகர செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட துணைசெயலாளர் லதா அதியமான், தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன், நகராட்சி துணைத்தலைவர் ஆதவன், ஒன்றிய செயலாளர்கள் ஆலம்பட்டி சண்முகம், மதன்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் சிவமுருகன்.

    பி.எஸ்.என்.எல். செல்வம், அணி அமைப்பா ளர்கள் விமல், வில்லூர் ஞானசேகரன், துணை அமைப்பாளர்கள் சுரேஷ், காளிதாஸ், வக்கீல் தங்க சாமி, நகர துணை செய லாளர் செல்வம், நகராட்சி கவுன்சிலர்கள் திருக்குமார் வீரக்குமார், சின்னசாமி, இளைஞரணி ஹரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மணிமாறன் என்பவர் தனது 16 வயது முதல் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.
    • இவர் உலக சாதனையாளர் விருது, கவுரவ டாக்டர் பட்டம் ஆகியவையும் பெற்றுள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 37). தனது 16 வயது முதல் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். இவர் செய்து வரும் சமூக சேவை கடினமானது. ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் மரணமடைந்து விட்டால் அவர்கள் உடல்கள் அரசு மருத்துவமனை பிணவறைகளில் கேட்பாரற்று பலநாட்கள் இருக்கும்.

    அதனை பெற எவரும் முன் வரமாட்டார்கள். அவ்வாறு பரிதாபத்துக்குரிய நிலையில் இருக்கும் உடல்களை போலீசார் அனுமதியுடன் பெற்று நல்லடக்கம் செய்து வருகிறார். கடந்த 21 ஆண்டுகளாக தொய்வின்றி இந்த பணியை அர்ப்பணிப்பு மனதுடன் செய்து வருகிறார். இதுவரை 2,045 ஆதரவற்றோர் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார். இவரது சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் விருதுகள் வழங்கியுள்ளன.

    பல மாநில முதல்-அமைச்சர்களின் பாராட்டுபெற்ற அவர் உலக சாதனையாளர் விருது, கவுரவ டாக்டர் பட்டம் ஆகியவையும் பெற்றுள்ளார். அவரை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்தி உள்ளனர். கொரோனா காலங்களிலும் மணிமாறன் இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்து வந்தார்.மேலும் தொழு நோயாளிகளுக்கு மனமுவந்து சேவையாற்றி வந்தார்.


    இதுபற்றி அறிந்த நடிகர் ரஜினிகாந்த், மணிமாறன் சேவையை மனதார பாராட்டி அவர் தடையின்றி சேவை செய்யும் வகையில் தனது அறக்கட்டளை சார்பில் ஒரு ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளார். மணிமாறன் தொடர்ந்து மக்கள் சேவை செய்ய ஊக்கம் அளித்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் வழங்கிய ஆம்புலன்ஸ் பெற்று கொண்ட மணிமாறன் கூறியதாவது:-

    நான் 21 ஆண்டுகளாக ஆதரவற்றவர்களின் உடலை அடக்கம் செய்து வருகிறேன் உடல்களைக் கொண்டு செல்வதற்காக வாடகை வேன்களை பயன்படுத்தி வந்தேன். இந்த நிலையில் எனது சேவை பற்றி அறிந்த நடிகர் ரஜினிகாந்த் என்னை சந்திக்க விரும்புவதாக அவரது உதவியாளர் போன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தார். இதனையடுத்து நேற்று காலை என்னை தயாராக இருக்கும்படி கூறினர்.

    நான் திருவண்ணாமலையில் அவர்களுக்காக காத்திருந்தேன் காலையில் ரஜினிகாந்த் வீட்டிலிருந்து அவரது உதவியாளர் காரில் திருவண்ணாமலைக்கு வந்தார். அங்கிருந்து என்னை சென்னையில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர் அங்கு சென்றதும் முதலில் எனக்கு உணவு வழங்கினார்கள்.

    ரஜினியிடம் 20 நிமிடம் சந்தித்து பேசினேன்.அப்போது அவர் எனது சேவையை பாராட்டினார். மேலும் எனக்கு ஆம்புலன்ஸ் வழங்கினார். எப்படி இவ்வளவு காலம் இந்த பணியில் ஈடுபட முடிகிறது என கேட்டறிந்தார். மேலும் குடும்ப வாழ்க்கை மிகவும் அவசியம். இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள். ஏதாவது உதவி தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள். நான் முடிந்த அளவு செய்கிறேன் என வாக்குறுதி அளித்தார். அவரிடம் நான் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன்.

    ரஜினிகாந்த் ஆம்புலன்ஸ் வழங்கியது என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அவரது இந்த உதவி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. ரஜினிகாந்த் வழங்கிய ஆம்புலன்ஸ் மூலம் ஆதரவற்றவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியும். மேலும் முதியவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லவும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    ×