search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manjuvirattu"

    • சேலம் வணங்கம்பாடியை சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
    • விபத்து குறித்து குன்றக்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் சூரக்குடியில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    மாடு முட்டியதில், சேலம் வணங்கம்பாடியை சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    மாடுபிடி வீரர் கார்த்திக் உயிரிழப்பை தொடர்ந்து வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது.

    விபத்து குறித்து குன்றக்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
    • களம் இறக்கப்பட்ட காளைகளை அடக்க 9 பேர் கொண்ட குழுவை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே கீழச்சீத்தை கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப் புல்லாணி ஒன்றியம் உதய–நிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நேற்று நடைபெற்றது.

    ராமநாதபுரம் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி மஞ்சுவிரட்டை தொடங்கி வைத்தார். உதயநிதி ஸ்டா–லின் நற்பணி மன்ற ஒன்றிய தலைவர் எஸ்.பி.ஜெயமுரு–கன் வரவேற்றார்.

    நற்பணி மன்ற மாவட்ட தலைவர் ஆர்.கே.கே.கார்த் திக், உத்திரகோச–மங்கை ஊராட்சி மன்ற தலைவர் கருங்கம்மாள் முத்து ஆகி–யோர் முன்னிலை வகித்த–னர். ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர், பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், திருப்புல்லாணி ஒன்றிய பெருந்தலைவர் புல்லாணி, மாவட்ட கவுன் சிலர்கள் ஆதித்தன், கார்த் திகேஸ்வரி கொத்தலிங்கம் ஒன்றிய செயலாளர்கள் உதயகுமார் (மேற்கு), நாகேஸ்வரன் (கிழக்கு) உட்பட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    இந்த போட்டியில் களம் இறக்கப்பட்ட ஒவ்வொரு காளைக்கும் 25 நிமிடங்கள் விளையாட அனுமதிக்கப்பட் டது. களம் இறக்கப்பட்ட காளைகளை அடக்க 9 பேர் கொண்ட குழுவை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். மாடுபிடி வீரர்க–ளிடம் பிடிபடாத காளை–களின் உரிமையாளர்க–ளுக் கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்க பணம் மற்றும் நினைவு பரிசு வழங்கப் பட்டது.

    இதில் மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் இருந்து காளை–களும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற ஒன்றிய செயலாளர் ரவிச் சந்திரன் நன்றி கூறினார்.

    • வடவன்பட்டி கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
    • வயல்வெளி பகுதிகளில் அவிழ்த்து விடப்பட்டன.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மயில்ராயன்கோட்டை நாடு வடவன்பட்டி கிராமத்தில் முனிநாதர் சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

    முன்னதாக இப்பகுதிகளை சேர்ந்த கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் முனி நாதர் பொட்டலிலும், கண்மாய் மற்றும் வயல்வெளி பகுதிகளில் அவிழ்த்து விடப்பட்டன.

    விரட்டு மஞ்சுவிரட்டு என்பதால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டு ஓடிய காளைகளை வீரத்தோடு அடக்க முற்பட்டனர்.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு பணியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டனர்.

    • ஆலங்குடி அருகே மஞ்சுவிரட்டு நடைபெற்றது
    • ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே துவரங்கொல்லைப்பட்டியில் பிடாரியம்மன், சித்திவிநாயகர், முத்துமுனீஸ்வரர், உருமநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு சித்தி விநாயகர் திடலில் நேற்று நடந்தது. கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி உறுதிமொழி வாசிக்க அதனை வீரர்கள் ஏற்றுக்கொண்டனர். முத்துராஜா எம்.எல்.ஏ., கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் தவ.பாஞ்சாலன், துணை தாசில்தார் செல்வராஜ், முதுநிலை வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் உதயசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கொடியசைத்து மஞ்சுவிரட்டை தொடங்கி வைத்தார். இதில், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 11 காளைகள் கலந்து கொண்டன. 11 சுற்றுகளாக நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 99 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். இதில் காயமடைந்தவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

    மஞ்சுவிரட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு கட்டில், வெள்ளி நாணயம், மின்விசிறி, சில்வர் அண்டா, குக்கர், ஹாட் பாக்ஸ், மின்சார அடுப்பு மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. மஞ்சுவிரட்டில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.



    • திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டு நடந்தது.
    • தென்கரை, கும்மங்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தென்கரை கிராமத்தில் ஆகாச கருப்பர் அந்த நாச்சி அம்மன் கோவிலில் பூச்செரிதல் மற்றும் பால்குட சித்திரை திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய மஞ்சுவிரட்டு நடந்தது. முன்னதாக தென்கரை, கும்மங்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் கண்மாய் மற்றும் வயல்வெளி பகுதிகளில் அவிழ்த்து விடப்பட்டது. திரளோனோர் இதில் கலந்துகொண்டு அவிழ்த்து விடப்பட்ட காளைகளை அடக்க முயன்றனர். விழாவிற்கான பணிகளை வாசுதேவன் அம்பலம், தலைவர் சுப்பிரமணியன், சொக்கலிங்கம், ராமராஜன், கவுதமன் மற்றும் ஊர் மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமையில் திருப்பத்தூர் நகர் காவல் ஆய்வாளர் கலைவாணி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    • பாரம்பரிய மஞ்சுவிரட்டு நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட தரியம்பட்டி கிராமத்தில் வழி விடு விநாயகர் வடக்கு வாசல் செல்வி அம்பாள் கருப்பர் ஆலய வருடா பிஷேக விழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க மஞ்சுவிரட்டு நடந்தது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான காளைகள் கண்மாய் மற்றும் வயல்வெளிகளில் அவிழ்த்து விடப்பட்டன. பாய்ந்து ஓடிய காளைகளின் திமிலை பிடித்து வீரர்கள் அடக்கிய காட்சிகளை பார்வை யாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் அம்பலக்காரர் ராஜா மற்றும் கிராம மக்கள், இளைஞர்கள் செய்தி ருந்தனர். போட்டிக்கான விழாக்குழு பணிகளில் கமிட்டி நிர்வாகிகளான பரமசிவம், போஸ், சிங்காரம், மணிமாறன், பெரியசாமி ஆகியோர் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல்துறை துணை கண்கா ணிப்பாளர் ஆத்மநாதன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    • ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் பார்வையாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதில், காரைக்குடியை சேர்ந்த பாண்டி (32) என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேலூர் மங்களாம்பட்டியை சேர்ந்த முருகன் (55) என்பவரும் மாடு முட்டி உயிரிழந்துள்ளார்.

    மேலும், மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    • கறம்பக்குடி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடபெற்றது
    • நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும் காளையை அடக்கிய வீரர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுக்கா மாங்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் சந்தன காப்பு திருவிழாவை முன்னிட்டு கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்களால் 4ம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து 11 மஞ்சுவிரட்டு காளைகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு காளையையும் அடக்க ஒன்பது மாடுபிடி வீரர்கள் களத்தில் இறக்கி விடப்பட்டனர்.

    இந்த வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும் காளையை அடக்கிய வீரர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தீபக் ரஜினி தலைமையில் செய்திருந்தனர். இப்போட்டியை மாங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பார்த்து மகிழ்ந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.


    ×