என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » materials damaged
நீங்கள் தேடியது "materials damaged"
சென்னிமலை அருகே பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. #FireAccident
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை, ஊத்துக்குளி ரோடு, காந்திநகரில் வசிப்பவர் குமரன் (வயது 36). இவர் சென்னிமலை அடுத்துள்ள ஈங்கூர் ரோடு, அஞ்சநேயர் கோவில் கோவில் பின்புறம் ஜெ.ஜெ., நகரில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான குடோனில் குமரன் டெக்ஸ் என்ற பெயரில் பனியன் வேஸ்ட் பஞ்சில் இருந்து பாலிஸ்டர் கலந்து கலர் நூல் உற்பத்தி செய்யும் மில் நடத்தி வருகிறார்.
இதில் 22 பேர் பணியாற்றி வருகின்றனர். காலை வழக்கம் போல் பணியாளர்கள் பணியில் ஈடுபட்ட போது தீடீர் என அங்கு கிடந்த பஞ்சு பகுதியில் புகை கிளம்பி உள்ளது. உடனடியாக பணியாளர்கள் வெளியேறி புகை வந்த பகுதியில் உள்ள தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது புகை மூட்டமாக மாறியது. அங்கு இருந்தவர்கள் சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் வந்து தீ அணைக்க அணைக்க முயன்றும் முடியவில்லை. உடனடியாக பெருந்துறைக்கு தகவல் கொடுத்து அங்கு இருந்தும் தீயணைப்பு வாகனம் வந்து குடோனில் இருபுறமும் ஒரு மணி நேரம் போராடி தீயினை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீ விபத்தில் அங்கு இருந்த 15 டன் பஞ்சு, 60 பேல் நூல் கோன் மற்றும் பாலிஸ்டர் பஞ்சு எறிந்து நாசம் ஆகியது, இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும். மேலும் அங்கு இருந்த இயந்திரமும் தீயில் கருகியது. குடோனிலும் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து சென்னிமலை போலீசார், வருவாய் ஆய்வாளர் தினேஷ் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து சென்னிமலை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பஞ்சுமில் எந்திரம் ஓடிக் கொண்டிருந்ததால். அதன் உஷ்ணத்தில் கழிவு பஞ்சில் தீ பிடித்ததா? அல்லது வேறு எப்படி தீ பிடித்தது? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. #FireAccident

×

X