search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "May Day Rally"

    • ராஜபாளையத்தில் மே தின விழா பேரணி நடந்தது.
    • ஏ.ஐ.டி.யூ.சி. மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்கள் சார்பில் நடந்தது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா பேரணி கொட்டும் மழையில் நடந்தது. ஜவகர் மைதானத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி காந்தி கலைமன்றம், மதுரை சாலை, காந்திசிலை ரவுண்டானா வழியாக பழைய பஸ் நிலையத்தை வந்தடைந்தது. ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ரவி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் லிங்கம், நகரச் செயலாளர் விஜயன் கணேசமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் கணேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் மாரியப்பன், கிழக்கு ஒன்றிய செயலாளர் முனியாண்டி, சோமசுந்தரம், சுப்பிரமணியம், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தொழிலாளர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப் பட்டது.
    • இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அன்புமணி கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப் பட்டது. சாணார்பாளையம் கிளை, வெள்ளாளப்பட்டி கிளை, ஏ.ஐ.டி.யு.சி. சந்தைப்பேட்டை கிளை ஆகிய இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அன்புமணி கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.

    திருச்செங்கோடு நகர கட்சி அலுவலகத்தில் நகர செயலாளர் எஸ்.சுகுமார் கொடியேற்றினார். தேரடி கிளையில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் ஜெயரா மன், ரவுண்டானா கிளை யில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலாளர் தனசேகரன், புதிய பேருந்து நிலையம் அண்ணாசிலை கிளையில் நகர துணை செயலாளர் கார்த்திக், கொட்டக்காடு கிளையில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் மாவட்ட செயலாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கூட்டப்பள்ளி கிளையில் தங்கராசு, சூரியம்பாளையம் கட்சி அலுவலகத்தில் பால தண்டாயுதம், வாலரைகேட் கிளையில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் ஜெய ராமன் கொடியேற்றி னார்கள். தொடர்ந்து திருச்செங்கோட்டில் நான்கு ரத வீதியில் பேரணி நடைபெற்றது. பேரணியில் சுமார் 500 பேர் கொடியுடன் கலந்து கொண்டனர். மழையின் காரணமாக பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

    ×