search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayor announce"

    • தூத்துக்குடி மாநகராட்சியின் கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.
    • ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மாநகராட்சி இடங்களை கண்டறிந்து பாதுகாக்கவும் தொழில்நுட்ப அலுவலர்கள் நியமனம் செய்தல், போல்பேட்டை 60 அடி சாலையில் 49 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியின் கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.

    ஆணையாளர் சாருஸ்ரீ, துணை மேயர்ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:-

    தூத்துக்குடி சிவந்தாகுளத்தில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வருவதற்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி இரண்டு வேன்களை வழங்கியுள்ளது. அதனை இயக்குவதற்கு 2 ஓட்டுநர்களை நகர்புற வாழ்வாதார மையம் மூலம் பணியமர்த்துதல். அதே திட்டத்தில் தேவைப்படும் பிளம்பர் பணியிடத்தை நிரப்புதல் ஆகிய பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.

    புதிய கட்டுமானப் பணி இடங்களுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு செய்தல், மாநகராட்சி வழக்கறிஞர் நியமனம் செய்தல், மாநகர பகுதிகளில் குடிநீர் திட்ட பணி மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை மற்றும் சேதமடைந்த சாலைகளை தமிழ்நாடு சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம் 2022-2023கீழ் ரூ.14 கோடியே 15 லட்சத்தில் மேற்கொள்ள ரூ. 13 கோடியே 29 லட்சத்தில் தொழில்நுட்ப அனுமதி அளித்தல். மாநகராட்சி கடைகளுக்கு ஒப்பந்ததாரர் தேர்வு செய்தல்,

    தூத்துக்குடி நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக 5-8-2008 அன்று தரம் உயர்த்தப்பட்ட போது அருகில் இருந்த ரூரல், சங்கரபேரி,மீளவிட்டான், முத்தையாபுரம் மற்றும் அத்திமரப்பட்டி ஆகிய 5 பஞ்சாயத்துகள் சேர்த்து 60 வார்டுகள் உள்ளடக்கியதாகும். மாநகரட்சிக்கான அடிப்படை பணிகளுக்குத் தேவையான பணியாளர்கள் அரசிடம் இருந்து அனுமதி அளிக்கப்படவில்லை.

    எனவே நிர்வாக அனுமதியின்படி நகர்புற வாழ்வாதார மையம மூலம் தினக்கூலி அடிப்படையில்,துப்புரவு பணியாளர்கள் பள்ளி கழிவறை பராமரிப்பு,தூய்மைப் பணியாளர்கள்,வாகன ஓட்டுனர்கள்,டெங்கு ஒழிப்பு பணியாளர்கள்,சூப்பர்வைசர்கள்,கணினி இயக்குபவர்கள் என 1100 தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். தூத்துக்குடி மீளவிட்டான் ெரயில் நிலையத்திற்கு இடையே சுரங்கப்பாதை அமைப்பதற்கு பதிலாக ெரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளஅமைச்சர் கீதாஜீவன் வழங்கிய கடித அறிவுறுத்தலின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மாநகராட்சி இடங்களை கண்டறிந்து பாதுகாக்கவும் தொழில்நுட்ப அலுவலர்கள் நியமனம் செய்தல், போல்பேட்டை 60 அடி சாலையில் 49 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும்.

    மாநகராட்சி மைய அலுவலகம், மண்டலங்கள் மற்றும் பூங்காக்களில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றுப வர்களுக்கு ஊதியம் வழங்க ஒப்புதல் அளித்தல் மற்றும் நிர்வாக பணிகளுக்கான அனுமதி அளித்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரெங்கச்சாமி, விஜயகுமார், சுயம்பு, பச்சி ராஜ், ராஜதுரை, சந்தி ரபோஸ் உட்பட அனைத்து கவுன்சிலர்களும், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் ரூபன் சுரேஷ், பொன்னையா, டாக்டர் அருண்குமார், சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன் உட்பட அதிகாரிகள் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமி சுடலைமணி, மந்திரமூர்த்தி, பத்மாவதி, ஜெயராணி, ஜெயக்குமார் ஆகிய 5 அ.தி.மு.க. உறுப்பினர்களும் மின்கட்டண உயர்வுக்கு வெளிநடப்பு செய்தனர்.

    ×