என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "medical waste"
- குழித்துறை பழைய பாலத்தின் மேற்பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு தயாராக அந்த வாகனம் நின்று கொண்டிருந்தது.
- வாகனத்தை பொதுமக்கள் துரத்தி பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
குழித்துறை:
கேரளா மாநிலத்தில் இருந்து இறைச்சி கழிவுகள், ஓட்டல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை வாகனங்களில் ஏற்றி கொண்டு வந்து குமரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், சாலையோரங்கள் மற்றும் வேளாண் நிலங்களில் கொட்டப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.
கேரளாவில் இருந்து குமரி மாவட்ட சோதனை சாவடிகள் வழியாக கொண்டு வரப்படும் கழிவுகள், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் வீசிச்செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுத்து நிறுத்தும படி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதுடன், போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.
ஆனால் கேரளாவில் இருந்து வாகனங்களில் கழிவுகள் கொண்டு வரப்பட்டு குமரி மாவட்டத்திற்குள் கொட்டப்படுவது நின்றபாடில்லை. இந்நிலையில் இன்று அதிகாலையில் குமரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடி வழியாக கேரளா மாநிலத்திலிருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு கூண்டு வாகனம் ஒன்று வந்தது.
படர்ந்தாலுமூடு பகுதியை தாண்டி சென்று கொண்டிருந்த அந்த வாகனத்தை பார்த்த பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் துரத்தி சென்றனர். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது. இதனையடுத்து அவர்கள் அந்த பகுதி முழுவதுமாக கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்தை தேடினர்.
அப்போது குழித்துறை பழைய பாலத்தின் மேற்பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு தயாராக அந்த வாகனம் நின்று கொண்டிருந்தது. அதனைப் பார்த்த பொதுமக்கள், அந்த வாகனத்தை சிறை பிடித்தனர். இதுகுறித்து குழித்துறை நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராம திலகம் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரி ராஜேஷ் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கழிவுகள் ஏற்றிவந்த அந்த வாகனத்துக்கு ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்தை குழித்துறை நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்அதை பொதுமக்கள் துரத்தி பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கேரளாவில் இருந்து வருகின்ற கனரக வாகனங்களில் மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்து சாலை ஓரங்களில் கொட்டி வருகின்றனர்.
- கழிவுகளை கொட்டும் டிரைவர்கள், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை:
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் காமராஜ் தலைமையில் நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் போத்திராஜ் வினோத் மற்றும் நிர்வாகிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்ட எல்லையான காவல் கிணறு இஸ்ரோவில் இருந்து பணகுடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், வாகைகுளம் மற்றும் நாங்குநேரி செல்லும் வழி ஆகிய இடங்களிலும் நான்கு வழி சாலைகளில் கேரளாவில் இருந்து வருகின்ற பெரும்பாலான கனரக வாகனங்களில் கோழி இறைச்சி, மீன் கழிவு, மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்து சாலை ஓரங்களில் கொட்டி வருகின்றனர்.
இந்த பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கானோர் கடந்து செல்லும் நிலையில் துர்நாற்றம் ஏற்பட்டு அவர்களுக்கு உடல் ரீதியில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கேரளா கழிவுகளை கொண்டு வந்து கொட்டும் டிரைவர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரிகளையும் பறிமுதல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
- வனவிலங்குகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம்
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி பகுதியில் ஆந்திரா, கர்நாடகா செல்லும் சாலையின் இருபுறமும் அடர்ந்த காடுகள் உள்ளது.
இந்தப் காப்பு காட்டில் மூட்டை, மூட்டையாக மருத்துவ கழிவுகள், ஊசி மற்றும் மருந்துகளை மர்ம கும்பல் கொட்டிவிட்டு செல்கின்றனர்.
இந்த சம்பவம் அடிக்கடி நடக்கிறது.
அதேபோல் கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளதால் அதிகளவில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் வனப்பகுதியில் வசிக்கும் குரங்குகள் மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மருத்துவக் கல்லூரிகளால் வனவிலங்குகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே தமிழக எல்லையில் உள்ள வன சோதனை சாவடியில் வாகனங்களை முழுமையாக சோதனை செய்ய வேண்டும்.
மருத்துவக் கழிவுகளை வனப்பகுதியில் கொட்டப்படுவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதோடு, இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- முதியவர்கள், குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு மற்றும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வருவதாக தெரிகின்றது.
- மருத்துவக் கழிவுகளை மூட்டை மூட்டையாக நகராட்சி சார்பில் கொட்டி எரித்து சென்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை 4-வது வார்டில் அமைந்துள்ள எரிவாயு தகன மேடை அருகே உள்ள தலக்காஞ்சேரி குப்பை மேட்டில் கொட்டி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 50,000 டன்னிற்கும் மேலாக இமயமலை போல் குப்பைகள் உயர்ந்து உள்ளது. அந்த குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என நகராட்சி நிர்வாகத்தினர் தரம் பிரிக்காமல் அங்கே கொட்டி வருகின்றனர்.
மேலும் திருவள்ளூர் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இருந்து நாள்தோறும் 1 டன்னுக்கு மேலாக லாரிகளில் மருத்துவக் கழிவுகள் எடுத்து வந்து தலக்காஞ்சேரி பகுதியில் கொட்டப் பட்டதால் அப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டு வருகின்றது. திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பல்வேறு சிகிச்சைக்கு 500 படுக்கைகளுடன் செயல்பட்டு வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு நோயாளியின் படுக்கையில் இருந்து நாளொன்றுக்கு ஒரு கிலோ வரை கழிவுகள் சேருகின்றன.
இந்த மருத்துவக் கழிவுகள் 4வது வார்டில் அமைந்துள்ள எரிவாயு தகன மேடை அருகே உள்ள தலக்காஞ்சேரி குப்பை மேட்டில் கொட்டி வருகின்றனர். அதில் பல்வேறு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருந்து பாட்டில்கள், சிரிஞ்சுகள், ரத்தம் உறைந்த பஞ்சுகள், கையுறைகள், முக கவசம் போன்ற மருத்துவக் கழிவுகளை மூட்டை மூட்டையாக நகராட்சி சார்பில் கொட்டி எரித்து சென்றனர்.
4-வது வார்டை சுற்றி தலக்காஞ்சேரி, எடப்பாளையம், சின்ன ஈக்காடு உள்ளிட்ட பகுதியில் 3000 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் முதியவர் மற்றும் குழந்தைகள் வசிக்கின்றன.
மேலும் பெரும்பாலானோர் வீட்டில் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். அந்த கால்நடைகள் மற்றும் பறவைகள் மருத்துவக் கழிவுகளை தின்பதால் நோய் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் அப்பகுதியில் வசித்து வரும் முதியவர்கள், குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு மற்றும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வருவதாக தெரிகின்றது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலையரசன் கொசு ஒழிப்பு ஊழியராக தற்காலிக அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மரவனூரைச் சேர்ந்தவர் கலையரசன் (வயது 28). இவர் மரவனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு ஊழியராக தற்காலிக அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரை மணப்பாறை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிக்கு வரச் சொல்லி உள்ளனர். அதன்படி பணிக்கு வந்த கலையரசன் மருத்துவ கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்து மாத்திரைகளை எரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரின் சட்டையில் திடீரென தீப்பிடித்து எரியவே என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த அவர் எரியும் நெருப்புடன் சட்டையை கழற்றி வீசியபடி மருத்துவமனை வளாகத்தில் ஓடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தீக்காயம் அதிக அளவில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கலையரசன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏழ்மை நிலையில் வாழும் குடும்பம் என்ற நிலையில் கலையரசன் இந்த துயர சம்பவத்தில் இறந்து விட்டதால் அவரது குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
- மூட்டை, மூட்டையாக மருத்துவ கழிவுகள் அங்கு குவிந்து காணப்படுகிறது.
- கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினம் தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த ஆஸ்பத்திரியில் மகப்பேறுக்கு மட்டும் தனி கட்டிடம் ஒதுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அந்தக் கட்டிடத்திற்கு பின்புறம், மருத்துவனை முழுவதும் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் மூட்டை, மூட்டையாக மருத்துவ கழிவுகள் அங்கு குவிந்து காணப்படுகிறது.
குறிப்பாக அறுவை சிகிச்சை செய்யும் கழிவுகள், மற்றும் அவசர சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருத்துவ பாதுகாப்பு கவச கழிவுகள் உள்ளிட்டவற்றை பணியாளர்கள் ஆங்காங்கே கொட்டுவதால் மருத்துவமனை முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. திருவள்ளூர் நகரத்தின் மையப் பகுதியில் உள்ள இந்த ஆஸ்பத்திரியில் மருத்துவ கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- வேளாண் நிலங்களில் இது போல் சட்ட விரோதமாக கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.
- இறைச்சி மற்றும் திடக்கழிவுகள் கொண்டு வருவது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
திருப்பூர் :
கேரளாவிலிருந்து மருத்துவ மற்றும் திடக்கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுவது குறித்து திருப்பூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்த கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- கேரளத்திலிருந்து மருத்துவ மற்றும் திடக்கழிவுகள் கொண்டு வந்து தமிழகத்தில் எல்லையோர கிராமங்களில் கொட்டப்படுகிறது. இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் கேரளாவுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
போலீஸ் மற்றும் வருவாய் துறையினர் செக்போஸ்ட் அமைத்து கண்காணித்து வருகின்றனர். இது போன்ற கழிவுகள் ஏற்றி வரும் வாகனங்கள், அதன் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.எல்லையோர கிராமங்களில் பயன்படாமல் உள்ள வேளாண் நிலங்களில் இது போல் சட்ட விரோதமாக கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.
நில உரிமையாளர்கள் இதற்கு துணை போகக் கூடாது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது போல் கேரளாவிலிருந்து மருத்துவ, இறைச்சி மற்றும் திடக்கழிவுகள் கொண்டு வருவது குறித்து பொதுமக்கள் பின் வரும் எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
திருப்பூர் கலெக்டர் - 0421 297 1100, எஸ்.பி., - 0421 297 0017, மாசு கட்டுப்பாட்டு வாரியம் - 0421 - 223 6210 மற்றும் 04255 - 252225, பறக்கும் படை - 0421-224 1131.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வில்லையென்றால் புகார் அளிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா ெதரிவித்துள்ளார்
- பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வில்லையென்றால் புகார் தெரிவிக்கலாம்-கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தகவல் பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வில்லையென்றால் புகார் அளிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா ெதரிவித்துள்ளார் மருத்துவக்கழிவுகளை பொது உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து அதன் மூலமாகவே மருத்துவக்கழிவுகளை அகற்ற வேண்டும்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படு த்தவில்லையென்றால் புகார் தெரிவிக்கலாம் என கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கூறினார்.பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை முறையாக பிரித்து அப்புறப்படுத்துவது தொடர்பான கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பேசியதாவது:-
மருத்துவக்கழிவுகள் பொது உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் நிறுவனங்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள் மூலம் மட்டுமே எடுத்து செல்வதையும், பிற வாகனங்களில் எடுத்து செல்லாமல் இருப்பதையும் காவல்துறை கண்காணிக்க வேண்டும். மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையங்கள் இணையதள முகவரியில் பதிவு செய்து, அதன் பிறகு தங்கள் மருத்துவக்கழிவுகளை பொது உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து அதன் மூலமாகவே மருத்துவக்கழிவுகளை அகற்ற வேண்டும்.
மருத்துவக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் பொது இடங்களில் கொட்டுவதோ மற்றும் பொதுக்கழிவுகளுடன் கலந்து மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவது தெரிந்தால் பொதுமக்கள் அரியலூரில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை 8220051372 என்ற செல்போன் எண்ணிலும், deeary@tnpcb.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- அண்டை மாநிலங்களிலிருந்து மருத்துவக் கழிவுகள்,கோழி கழிவுகள் போன்றவற்றை வாகனங்களில் ஏற்றி வரக்கூடாது.
- கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் மனித உயிருக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்படுத்தும் மருத்துவக் கழிவுகள், நெகிழி குப்பைகள், சாயக்கழிவுகள், கோழிக்கழிவுகள் மற்றும் மீன்கழிவுகள் போன்றவை கொட்டப்படுகிறது.
இதனை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் லாரி, சரக்கு வாகன உரிமையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைத்து உட்கோட்ட காவல் துணை சூப்பிரண்டுகள் மற்றும் போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் டி.எஸ்.பி.க்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளதாவது;- கேரளா உள்ளட்ட அண்டை மாநிலங்களிலிருந்து மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், கோழி கழிவுகள், மீன் கழிவுகள் போன்றவற்றை வாகனங்களில் ஏற்றி வரக்கூடாது. மேலும் அந்த கழிவுகளை ஏற்றி வந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களிலோ, தனியாருக்கு சொந்தமான இடங்களிலோ கொட்டவோ, குழி தோண்டி புதைக்கவோ கூடாது.
அவ்வாறு சட்டவிரோதமாக கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது
- விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில் கழிவுகளால் அப்பகுதி சுகாதார சீர்கேடான நிலைக்கு மாறி வருகிறது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை பஸ் நிலையம் முன்பு கடந்த 2 மாதங்களாக தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. பல வாரங்களாக அகற்றப்படாமல் இருப்பதால் இப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தற்போது விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில் கழிவுகளால் அப்பகுதி சுகாதார சீர்கேடான நிலைக்கு மாறி வருகிறது.
இங்கு அரசு அலுவலகங்கள், வங்கி, கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை உள்ளன. தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் இப்பகுதியில் மருத்துவகழிவுகள் கொட்டப்படுவதை பேரூராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் உள்ளது. இதுகுறித்து ெசயல்அலுவலர் சுந்தரியிடம் கேட்டபோது பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தனியார் மருத்துவமனை கழிவுகள் கொட்டப்படுவதாக புகார் வந்துள்ளது.
இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம். மருத்துவகழிவுகள் கொட்டும் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
செங்கோட்டை அருகே தமிழக எல்லையான புளியரை சோதனை சாவடியில் கடந்த 20-ந் தேதி இரவில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக கேரளாவில் இருந்து மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த 12 லாரிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் சோதனை தீவிரமாக்கப்பட்டது. அப்போது தமிழகத்தில் கொட்டுவதற்காக ஏற்றி வந்த பிளாஸ்டிக் கழிவுகளுடன் வந்த 27 வாகனங்கள் அனைத்தும் சோதனைச்சாவடியின் அருகில் உள்ள தனியார் நிலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கழிவுகளுடன் இருந்த 27 வாகனங்களையும் போலீசார் கைப்பற்றி சுகாதாரத்துறையிடம் ஒப்படைத்தனர். அதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் இதுதொடர்பாக செங்கோட்டையில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு, நெல்லை சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
இலத்தூர் வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் மாரீஸ்வரி, செங்கோட்டை சுகாதார மேற்பார்வையாளர் ரகுபதி, சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடேஷ், செல்வமுருகன், செங்கோட்டை தாசில்தார் வெங்கடாசலம், தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த 4 லாரிகளுக்கு தலா ரூ.3 லட்சமும், 18 வாகனங்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதமும், 5 மினிலாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதமும் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராத தொகையை செங்கோட்டை அரசு கருவூலத்தில் செலுத்தி ரசீது பெற்ற பின்னர் லாரிகள் மற்றும் வாகனங்கள் விடுவிக்கப்படும் என்றும், கழிவுகளை ஏற்றிய இடத்துக்கே கொண்டு சென்று இறக்கிவிட வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து கழிவுகள் ஏற்றி வந்த லாரி மற்றும் வாகன உரிமையாளர்கள் இன்று அதற்கான அபராத தொகையை கட்டினார்கள். இதன்பின்னர் லாரிகள் மீண்டும் கேரளாவுக்கு திரும்பி சென்றன. #tamilnews
பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வீதிகளில் வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டிகளில் மருத்துவக்கழிவுகளை கொட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு சில தனியார் ஆஸ்பத்திரிகளின் மருத்துவ கழிவுகள் பொது இடங்களில் வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டிகளில் கொட்டப்படுவதாக ஈரோடு மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. எனவே மருத்துவக்கழிவுகளை குப்பையில் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் ஈரோடு பெரியார்நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் நேற்று காலை ரோந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டு இருந்ததை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அவருடைய உத்தரவின்பேரில் நகர்நல அதிகாரி டாக்டர் சுமதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
அங்கு மருந்து பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட ஊசி உள்ளிட்ட மருத்துவக்கழிவுகள் கிடந்தன. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த ஆஸ்பத்திரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் நடவடிக்கை எடுத்தார். மேலும், குப்பைத்தொட்டியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளும் அகற்றப்பட்டது.
ஆஸ்பத்திரிகளில் இருந்து மருத்துவ கழிவுகள் குப்பை தொட்டியில் கொட்டப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்