என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "meeting-procession"
- மதுரையில் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த 15 நாட்கள் தடை உத்தரவிடப்பட்டுள்ளது.
- இந்த தடை உத்தரவு 9-ந்தேதி வரை அமலில் இருக்கும்.
மதுரை
மதுரையில் வருகிற 9-ந் தேதி வரை 15 நாட்களுக்கு போலீஸ் அனுமதி இன்றி பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக காவல்துறை சட்டம் 1888 -பிரிவு 41 மற்றும் 41(ஏ)- படி மதுரை மாநகர் பகுதிகளில் பொது,தனியார் இடங்களில் அனுமதி இன்றி கூடுதல், போராட்டத்தில் ஈடுபடுதல், ஆயுதங்களுடன் கூடுதல் மற்றும் பொதுக் கூட்டங்கள், ஊர்வலம் நடத்த வருகிற 15 நாட்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது
அதன்படி நேற்று(25-ந் தேதி) முதல் அடுத்த மாதம் 9-ந் தேதி வரை 15 நாட்கள் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். எனவே பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம்,ஊர்வலம் நடத்த விரும்புவர்கள் 5 நாட்களுக்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் உரிய அனுமதியை பெற வேண்டும். அனுமதிவேண்டி கடிதம் கொடுக்கப் படும் நிலையில் போலீஸ் அனுமதி வழங்குவது குறித்து முடி வெடுத்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.