என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Memorial Samathupurams"
- மாவட்ட கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- ரூ.50,000 மதிப்பீட்டில் மேற்கொள்ளபட்டு வருகின்றன.
கோவை,
கோவை மாவட்டத்தில், சமத்துவபுரங்கள் மறுசீரமைப்பு செய்தல் பகுதி 1 திட்டத்தின் கீழ் 4 சமத்துவபுரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆனைமலை வட்டாரம் தென்சங்கம்பாளையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் 78 வீடுகளும், கிணத்துக்கடவு வட்டாரம் வடசித்தூரில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் 90 வீடுகளும், மதுக்கரை வட்டாரம், செட்டி–பாளையம் பேரூராட்சியில் ரூ.32.50 லட்சம் மதிப்பீட்டில் 65 வீடுகளும், சர்க்கார் சாமக்குளம் வட்டாரம் வெள்ளகிணறு பகுதியில் ரூ.43லட்சம் மதிப்பில் 80 வீடுகளும் என மொத்தம் 319 வீடுகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பழுதுபார்ப்பு பணிகள் தலா ரூ.50,000 மதிப்பீட்டில் மேற்கொள்ளபட்டு வருகின்றன.
இதில் 72 வீடுகளின் பழுதுபார்ப்பு பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், கிணத்துக்கடவு வட்டாரம் வடசித்தூர் ஊராட்சியில் ரூ.9.87 லட்சம் மதிப்பீட்டில் 8 வீடுகளும், மதுக்கரை, செட்டிபாளையம் பேரூராட்சியில் 2 வீடுகளும் என மொத்தம் ரூ.18.87 லட்சம் மதிப்பீட்டில் 10 வீடுகள் மறுசீரமைப்புபணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சமத்துவபுரங்களில் 2 குடிநீர் வழங்கல் பணிகள், 4 சாலைபணிகள், 45 தெருவிளக்கு பணிகள், ஒரு விளையாட்டு மைதானம், 4 சமுதாய நலக்கூடங்கள், 2 நூலக கட்டிடங்கள், ஒரு அங்கன்வாடி கட்டிடம், 3 நியாயவிலைகடைகள், 3 தந்தை பெரியார் சிலைகள், 3 சமத்துவபுர நுழைவு வாயில்கள் என மொத்தம் ரூ.93.71 லட்சம் மதிப்பீட்டில் 58 உட்கட்டமைப்பு சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள தென்சங்கம்பாளையம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு நடந்து பணிகள் மற்றும் அதன் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது பொள்ளாச்சி சப் கலெக்டர் திருதாக்கரேசுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கவிதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்