search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mettur dam water inflow"

    • அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
    • இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 92.58 அடியாக குறைந்தது.

    மேட்டூர்:

    கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிந்து அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் தண்ணீர் போதுமான அளவு நிரம்பிய பிறகே உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது.

    இந்த உபரி நீர் காவிரி ஆறு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது.

    தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 12,713 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை அதிகரித்து வினாடிக்கு 15,710 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து தமிழக காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 800 கன அடி நீரும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நீர் வரத்தை விட மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 92.58 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 55.54 டி.எம்.சி. உள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 97 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 28 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
    சேலம்:

    மேட்டூர் அணைக்கு நேற்று 97 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 28 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 48.45 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 48.29 அடியானது. இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

    மேட்டூர் அணையில் தற்போது 48 அடிக்கும் மேல் தண்ணீர் உள்ளதால் மேட்டூர் அணையை நம்பியுள்ள கூட்டு குடிநீர் திட்ட பகுதிகளில் ஒன்றரை மாதத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேட்டூர் அணைக்கு 81 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர் வரத்து இன்று மேலும் அதிகரித்து 88 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
    மேட்டூர்:

    மேட்டூர் அணைக்கு கடந்த 15-ந் தேதி 56 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 81 கன அடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 88 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்று மாலை முதல் தண்ணீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 49.44 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 49.12 அடியானது. இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 19 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 88 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. #MetturDam
    சேலம்:

    மேட்டூர் அணைக்கு நேற்று 19 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 88 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    நேற்று 55.33 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 55.13 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. #MetturDam
    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வந்தது. இன்று நீர்வரத்து மீண்டும் சரிந்து 72 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி 86 கன அடியாக இருந்த நீர்வரத்து 17-ந் தேதி 118 கன அடியாக அதிகரித்தது. நேற்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 134 கன அடியானது. இன்று நீர்வரத்து மீண்டும் சரிந்து 72 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 2500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 72.70 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 72.43 அடியானது. இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது. #MetturDam
    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று 179 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 144 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

    நேற்று 179 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 144 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்திற்காக 8 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 84.87 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 84.2 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது. #MetturDam
    மேட்டூர் அணைக்கு நேற்று 668 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 541 கன அடியாக இருந்தது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 668 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 541 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 89.36 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 88.73 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது. #MetturDam
    மேட்டூர் அணைக்கு நேற்று 4 ஆயிரத்து 99 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 3 ஆயிரத்து 594 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. #MetturDam
    சேலம்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 4 ஆயிரத்து 99 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 3 ஆயிரத்து 594 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 5 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 400 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    நேற்று 103.63 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 103.5 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. #MetturDam

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.

    நேற்று 4 ஆயிரத்து 203 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 4 ஆயிரத்து 785 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த சில நாட்களாக 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட 900 கன அடி தண்ணீர் இன்று 400 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 100.16 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 100.36 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் மழை அதிகாரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #MetturDam
    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

    நேற்று 5ஆயிரத்து 783 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 4ஆயிரத்து 406 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு காவிரி ஆற்றில் 13ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 700 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    நேற்று 104.37 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 103.76 அடியாக சரிந்தது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. #MetturDam
    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று 6ஆயிரத்து 191 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 10ஆயிரத்து 42 கனஅடியாக அதிகரித்து உள்ளது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    நேற்று 6ஆயிரத்து 191 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 10ஆயிரத்து 42 கனஅடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து 13ஆயிரத்து 700 கனஅடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    நேற்று 103.35 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 103.10 அடியாக இருந்தது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 10ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 12ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்ததுடன், உற்சாகமாக படகு சவாரியும் சென்று மகிழ்ந்தனர். #MetturDam
    மேட்டூர் அணைக்கு நேற்று 11 ஆயிரத்து 402 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 13 ஆயிரத்து 47 கன அடியாக அதிகரித்தது. #MetturDam
    சேலம்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    நேற்று 11 ஆயிரத்து 402 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 13 ஆயிரத்து 47 கன அடியாக அதிகரித்தது.

    அணையில் இருந்து 7 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், 700 கன அடி தண்ணீர் கால்வாய் பாசனத்திற்கும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 103.85 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை104.18 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. #MetturDam
    ×