search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mettur dam water opening"

    மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் திறப்பு இன்று காலை முதல் 2 ஆயிரத்து 500 கன அடியாக குறைக்கப்பட்டது.
    மேட்டூர்:

    மேட்டூர் அணைக்கு நேற்று 84 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 56 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் திறப்பு இன்று காலை முதல் 2 ஆயிரத்து 500 கன அடியாக குறைக்கப்பட்டது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    கடந்த 13-ந் தேதி 50.61 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 50.11 அடியாக சரிந்தது. இன்று நீர்மட்டம் மேலும் சரிந்து 49.80 அடியாக இருந்தது. இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் சுமார் ஒரு அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாமல் இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.
    நெல் அறுவடை தொடங்கி இருப்பதால் 190 நாட்களுக்குப்பின் இன்று மாலை முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. #MetturDam

    மேட்டூர், ஜன. 28-

    மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா பாச னத்திற்காக ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப் படுவது வழக்கம்.

    இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு உள்பட 12 மாவட்டங்களில் 16.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி அணையில் குறைவான தண்ணீர் இருந்ததால் தாமதமாக ஜூலை மாதம் 23-ந் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதித்தாலும் சம்பா நெல் சாகுபடி முழுமையாக நடந்தது. ஆண்டுதோறும் பாசனத்திற் காக ஜனவரி 28-ந் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படும். தற்போது நெல் அறுவடை தொடங்கி இருப்பதால் 190 நாட்களுக்குப்பின் இன்று மாலை முதல் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுகிறது.

    இதுபற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாக வில்லை. இருந்தாலும் டெல்டா பாச னத்திற்கு தண்ணீர் தேவை என்றால் நீர் திறப்பு இன்னும் சில நாட்கள் நீட்டிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 70.81 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வந்தது. இன்று அணைக்கு 150 கன அடி தண்ணீர் வந்து கொண் டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 70.81 அடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்கான 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    அணையில் தற்போது நீர்மட்டம் 70 அடியாக உள்ளதால் அணையில் மூழ்கி இருந்த கிறிஸ்தவ ஆலய கோபுரம் மற்றும் நந்தி சிலைகள் படிப்படியாக வெளியே தெரிய தொடங்கி உள்ளது.

    மேட்டூர் அணை மூலம் 12 டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாது வேலூர் மாநகராட்சி பகுதிகளின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் இந்த ஆண்டு கோடை காலத்தில் குடிநீர் தட்டுப் பாடு வராது என்று பொதுப் பணித்துறை அதிகாரி ஒருவர் கூறினார். * * * மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து வருவதை படத்தில் காணலாம்.

    காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் 16 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு கடந்த 7 மாதமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 1,005 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து 1,095 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 12 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வந்தது.

    இன்று காலை முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 16 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    கடந்த 15-ந் தேதி 100 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து நேற்று 97.53 அடியாக இருந்தது. இன்று மேலும் ஒரு அடி சரிந்து 96.56 அடியாக இருந்தது. இதனால் கடந்த 4 நாட்களில் மட்டும் 3.5 அடி நீர்மட்டம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்காத பட்சத்தில் நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது. #MetturDam
    மேட்டூர் அணையில் இருந்து 1,400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தண்ணீர் திறப்பு இன்று காலை 1,100 கன அடியாக குறைக்கப்பட்டது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு 6 மாதங்களுக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 4,785 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 4,670 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தண்ணீர் திறப்பு இன்று காலை 1,100 கன அடியாக குறைக்கப்பட்டது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 100.36 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 100.58 அடியானது.  #MetturDam
    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் இன்று காலை முதல் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. #Metturdam
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    கடந்த 6-ந்தேதி 5 ஆயிரத்து 471 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 6 ஆயிரத்து 14 அடியாக இருந்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 6 ஆயிரத்து 961 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 1000 கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீரும் நேற்று வரை திறந்து விடப்பட்டு வந்தது.

    இன்று காலை முதல் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அணையில் இருந்து மொத்தம் 1600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 102.32 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 102.67 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களிலும் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. #MetturDam
    ×