search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "midnight in Erode district"

    • இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
    • மரம் பலத்த காற்றால் சாய்ந்து ரோட்டில் விழுந்து விட்டது.

    ஈரோடு, நவ. 4-

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடும் வெயில் வாட்டி வருகிறது. அதே போல் மாவட்டத்தின் பல பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் ஈரோட்டில் நேற்று பகலில் வழக்கம் போல் வெயில் அடித்தது. ஆனால் மதிய நேரத்தில் மேக மூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து மாலை மற்றும் இரவில் சாரல் மழை பெய்தது.

    இதே போல் சத்தியமங்க லம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை வெயில் அடித்தாலும் மாலை நேரத்தில் மேக மூட்டத்துடனேயே காணப் பட்டது.

    இதை தொடர்ந்து சத்திய மங்கலம், பண்ணாரி, ராஜன் நகர், சிக்கரசம் பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மேலும் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை கொட்டியது. இதையடுத்து விடிய, விடிய பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது.

    மேலும் வன்பகுதிகளான தாளவாடி, தலமலை பகுதிகளிலும் நேற்று இரவு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் வனப்பகுதி முழுவதும் பச்சை பசேலென பசுமையாக காணப்பட்டது.

    இதே போல் அந்தியூர், தவிட்டுபாளையம், சின்ன தம்பி பாளையம், வரட்டுப் பள்ளம் அணைப்பகுதி மற்றும் பர்கூர் பகுதிகளிலும் நள்ளிரவில் பரவலாக மழை கொட்டியது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பர்கூர் மலை பகுதியில் மழை பெய்ததால் குளிர்ந்த காற்று வீசியது.

    நம்பியூர், எலத்தூர், குரு மந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் பவானிசாகர் கோபி, கொடுமுடி, குண்டேரி பள்ளம் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    சென்னிமலை பகுதியில் காலையில் வெயில் அடித்தது மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை 4.20 மணிக்கு திடீர் என இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. மின்னல், இடியுடன் பலத்த காற்று வீசியது.

    இதில் சென்னிமலை அடுத்துள்ள உப்பிலிபாளையம் அருகே சென்னிமலை-கே.ஜி.வலசு செல்லும் ரோட்டில் ரோட்டின் ஓரமாக இருந்த மரம் பலத்த காற்றால் சாய்ந்து ரோட்டில் விழுந்து விட்டது. இதனால் இந்த ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த தகவல் அறிந்து சென்ற சென்னிமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் 40 நிமிடங்களில் மரத்தினை துண்டாக்கி அப்புறப்படுத்தி போக்குவரத்திற்கு இருந்த இடையூறுகளை சரி செய்தனர். இந்த பலத்த காற்று வீசியதில் பல இடங்கில் சிறிய மரங்களும் முறிந்தும், சாய்ந்தும் விழுந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:

    பவானிசாகர்-28, கொடி வேரி-26, சத்தியம ங்கலம்-19. நம்பியூர்-16, குண்டேரி பள்ளம்-14.20, மொட க்குறிச்சி-10, கொடுமுடி-10, கோபி-9.20, வரட்டுப்ப ள்ளம்-8.70, சென்னி மலை-4, ஈரோடு-1.

    ×