search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Deeney Jayakumar"

    • அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உறுதி
    • விடுதலை நாள் என்பது மகிழ்ச்சிக்குரிய நாள், நன்றி செலுத்தும் நாள்.

    புதுச்சேரி:

    மாகி பிராந்தியத்தில் புதுவை விடுதலை நாளை யொட்டி தேசியக்கொடி ஏற்றி வைத்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது:-

    விடுதலை நாள் என்பது மகிழ்ச்சிக்குரிய நாள், நன்றி செலுத்தும் நாள். ஆண்டுதோறும் நவம்பர் 1-ந்தேதி நமது சுதந்திர போராட்டத்தின் போது முன்னோர்கள் செய்த மாபெரும் தியாகங்கள் நம்மை நினைவுகூறச் செய்கிறது.

    காலனி ஆதிக்கத்தில் இருந்து புதுச்சேரியின் விடுதலைக்காகப் போராடிய அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களையும் இந்த விடுதலை நாளில் தலை வணங்குவதைப் பெருமை யாக கருதுகிறேன். கடந்த 2 ஆண்டு கால ஆட்சியில் புதுவை மாநிலத்தில் சிறப்பான சாதனைகள், வளர்ச்சி திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு புதுவை மக்களின் குறிப்பாக மாகி மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருகிறது.

    ஒரே சமுதாயம், ஒரே கனவு, ஒரே தீர்மானம், ஒரே திசை மற்றும் ஒரே இலக்கை உருவாக்குவதே நம்முடைய குறிக்கோள் ஆகும். மாகி மக்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வரும் காலங்களிலும் மாகி பகுதிக்கு தேவையான மற்றும் சாத்தியமான அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் திட்டங்க ளையும் முன்னெடுத்து மாகியை அனைத்து வகையிலும் மேம்பட்ட வட்டாரப் பகுதியாக மாற்றுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
    • வேளாண் அறிவியல் நிலையத்தின் பண்ணை மேலாளர் அமலோற்பவ நாதன் நன்றி கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவை குரும்பாப்பட்டில் உள்ள பெருந்தலைவர் காமராசர் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகள், உற்பத்தி யாளர்கள் சங்கங்களுக்கு திறன்மிகு மேலாண்மை பற்றிய பயிற்சி 5 நாட்கள் நடக்கிறது.

    ஜெய்ப்பூரில் இயங்கும் மத்திய அரசின் தேசிய வேளாண்மை சந்தைப்படுத்துதல் நிறுவன நிதி உதவியுடன் நடைபெறும் இந்த பயிற்சி முகாமின் தொடக்கவிழா இன்று நடந்தது. வேளாண் துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தலைமை வகித்து பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.

    அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன் வரவேற்றார்.

    நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் சித்தார்த்தன், ஜெய்ப்பூர் தேசிய வேளாண்மை சந்தைப் படுத்துதல் நிறுவனத்தின் துணை இயக்குநர் சிங் நோக்க உரையாற்றினர். வேளாண் அறிவியல் நிலையத்தின் பண்ணை மேலாளர் அமலோற்பவ நாதன் நன்றி கூறினார்.

    பயிற்சியில் புதுவையை சேர்ந்த 5, காரைக்காலை சேர்ந்த ஒரு விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 36 உறுப்பினர்கள் பங்கேற்று பயிற்சி பெறுகின்றனர்.

    • அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கினார்
    • வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் சிவசுப்பிரமணியன் மற்றும் கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார், ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    புதுச்சேரி:

    புதுவையில் இந்திய வேளாண் அறிவியல் கழகம் சார்பில் இளைஞர்களை விவசாயத்தில் தக்க வைக்கவும் அவர்களை ஊக்கப்படுத்தவும் ஆர்யா என்ற திட்டம் பெருந்தலைவர் காமராஜ் வேளாண் அறிவியல் நிலையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

     அதில் ஒரு பகுதியாக இன்று பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு முட்டை பொரிப்பான் மற்றும் சிறுதானியம் அரைக்கும் எந்திரம் ஆகியவற்றை வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கினார்.

    இதன் பிறகு இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அவர்களை ஊக்கப்படுத்தி அரசு அளிக்கும் மற்ற திட்டங்களிலும் பயன்பெற்று விவசாயத்தை நீடித்து செயல்படுமாறு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அறிவுறுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் சிவசுப்பிரமணியன் மற்றும் கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார், ஆகியோர் வாழ்த்தி பேசினர். வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் நரசிம்மன், சித்ரா, அமலோர்பவநாதன், பிரபு பொம்மி, சந்திராதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
    • ஊர்வலம் மூலக்கடை எம்.ஜி.ஆர் சிலை, கூடப் பாக்கம் சாலை வழியாக மீண்டும் மண்டபத்தை அடைந்தது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அடுத்த கோனேரிகுப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் 2 ஆண்டு பண்பு பயிற்சி முகாம் நடந்து வருகிறது. முகாமில் தமிழகம், புதுவையை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

    முகாமில் ஒரு அங்கமாக ஆர்.எஸ்.எஸ். சேவகர்களின் சீருடை அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. புறவழிச்சாலை ராஜா திருமண மண்டபம் அருகிலிருந்து தொடங்கிய அணிவகுப்பு ஊர்வலத்தை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

    ஊர்வலம் மூலக்கடை எம்.ஜி.ஆர் சிலை, கூடப் பாக்கம் சாலை வழியாக மீண்டும் மண்டபத்தை அடைந்தது. சேவகர்கள் கம்பு, கொடி ஏந்தி சென்றனர். முகாம் தலைவர் மணிவாசகம், வரவேற்பு குழு தலைவர் அரவிந்தன், கோட்டதலைவர் செல்வராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×