search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister kamarak"

    திருவாரூர் ரேசன் கடையில் அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பொருட்களின் தரம், அளவு ஆகியவை குறித்து கேட்டறிந்தார். #ministerkamaraj

    திருவாரூர்:

    தமிழக முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை நாட்களிலும் நியாயவிலைக் கடைகள் முழுநேரமும் செயல்பட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் திருவாரூர் நகராட்சி குட்பட்ட கீழவீதி நியாயவிலைக் கடையில் அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பொருட்களின் தரம், அளவு ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பண்டிகை நாட்களில் பொதுவிநோகத்திட்ட பொருட்களை எந்தவித சிரமம்மின்றி பொதுமக்கள் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் விடுமுறை தினத்திலும் தீபாவளிக்கு முதல்நாள் வரை நியாயவிலைக்கடைகள் அனைத்தும் செயல்பட வேண்டும் என்ற உத்தரவினை முதலமைச்சர் பிறப்பித்துள்ளார்.

    அதன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமையிலும் நியாயவிலைக்கடைகள் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தை பொறுத்தவரை தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தையும், விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தினையும் அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே பொதுவிநியோக திட்டத்தை பொறுத்தவரை எந்தவித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் பண்டிகை நாட்களில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது தாசில்தார் குணசீலி, வட்ட வழங்கல் அலுவலர் குருமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க முன்னாள் நிர்வாகிகள் உடன் இருந்தனர். #ministerkamaraj

    ×