search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Sai.J.Saravanankumar"

    • அமைச்சர் சாய்.ஜெ‌.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்
    • தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன்குமார் அப்பகுதியில் சாலை அமைப்பதற்கான தீவிர முயற்சியால் ஈடுபட்டார்.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதிக்குட்பட்ட பொறையூர் மற்றும் வள்ளுவன்பேட் பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலை குண்டும் குழியுமாக பொதுமக்கள் வந்து செல்ல லாயக்கற்ற சாலையாக இருந்து வந்தது.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன்குமார் அப்பகுதியில் சாலை அமைப்பதற்கான தீவிர முயற்சியால் ஈடுபட்டார்.

    அதனை தொடர்ந்து அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் தலைமையில் பொறையூர் சண்முகா சிட்டி பகுதிக்கு ரூ.28.61 லட்சம் மதிப்பீட்டிலும், சக்தி நகருக்கு தார் சாலை அமைக்கும் பணிக்காக ரூ.7.83 லட்சம் மதிப்பீட்டிலும், கற்பக விநாயகர் நகர் பகுதிக்கு தார் சாலை அமைக்க ரூ.7.65 லட்சம் மதிப்பீட்டிலும் பூமி பூஜையை செய்து வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலைப் பொறியாளர் கருத்தாயன், பா.ஜனதா தொகுதி தலைவர் தியாகராஜன், பா.ஜனதா நிர்வாகிகள் அய்யனார், காளியப்பன், ராமு, பரமசிவம், தணிகைவேல், அந்தோணி, கிளை தலைவர் பிரியன், ஊடக பிரிவு பொறுப்பாளர் சதீஷ்குமார், சாலை பொறுப்பாளர் கருணாகரன் உள்பட ஊசுடு தொகுதி பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் குடும்பத்தினர் வழங்கினர்
    • கோவிலில் மகா மண்டபம் பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு உருளையன்பேட்டை தொகுதி அருந்ததி நகரில் உள்ள முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் கோவில் திருப்பணிக்காக குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் ரூ.11 லட்சம் நிதி  வழங்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து கோவிலில் மகா மண்டபம் பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

    இதில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறை மந்திரி நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்டுமான பணிக்கான பூமி பூஜையினை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், எம்.எல்.ஏ.க்கள் நேரு, ஜான்குமார், சிவசங்கரன், அசோக் பாபு, ராமலிங்கம், வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் சாய்.இளங்கோவன், ஊசுடு தொகுதி பா.ஜனதா தலைவர் சாய்.தியாகராஜன் மற்றும் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள், ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் முயற்சியில் நடந்தது
    • அரசுக்கும் இருந்த பிரச்சினை தொடர்பாக ஒப்பந்ததாரர் கட்டுமான பணியை மேற்கொள்ளவில்லை.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் ஊசுடு தொகுதி, தொண்டமாநத்தம் கிராமத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி கட்டுமான பணி தொடங்கியது. ஒவ்வொரு 5 ஆண்டுகளிலும் கட்டுமான பணி இடையில் இடையில் நிறுத்தப்பட்டது.

    முதலில் கட்டுமான பணியில் ஈடுபட்ட ஒப்பந்த தாரருக்கும் அரசுக்கும் இருந்த பிரச்சினை தொடர்பாக ஒப்பந்ததாரர் கட்டுமான பணியை மேற்கொள்ளவில்லை.

    மற்றவருக்கு கட்டுமான பணி அரசு வழங்கிய நிலையில், முதலாவதாக கட்டுமான பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து 2017-க்கு பிறகு மேல்நிலை நீர் தேக்கு தொட்டி கட்டுமான பணி முழுமை அடையாமல் பாதியிலேயே நின்றது.

    தற்போது தொண்டமாநத்தம் சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் தேவை அதிகமாக இருப்பதால் தொகுதி எம்.எல்.ஏ.வும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன்குமார் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு அவரது தீவிர முயற்சியில் வழக்கு முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில் மீதமுள்ள பணிக்கு திட்டம் வகுக்கப்பட்டு ரூ.63.81 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமான பணியினை மேற்கொள்ள பூமி பூஜை நடந்தது. அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பூமி பூஜை செய்து வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பழனியப்பன், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், ஊசுடு தொகுதி பாரதீய ஜனதா கட்சி தலைவர் சாய். தியாகராஜன், தொகுதி குடிநீர் வழங்கல் தலைவர் பாலு, துணைத் தலைவர் சதாசிவம், கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • 3 நாதஸ்வரம், மற்றும் முடி திருத்துவதற்கான சுழற்நாற்காலியுடன் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பத்துக்கண்ணு ஊசுடு எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 15 இஸ்திரிப்பட்டி, 10 தவில், 3 நாதஸ்வரம், மற்றும் முடி திருத்துவதற்கான சுழற்நாற்காலியுடன் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஊசுடு தொகுதி பா.ஜனதா ஊசுடு தொகுதி தலைவர் சாய் தியாகராஜன், ஆதிதிராவிடர் பொறுப்பாளர் ஜெகதலபிரதாபன் மற்றும் பட்டியல் அணி நிர்வாகிகள், கமிட்டி நிர்வாகிகள், ஓபிசி அணி நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×