என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Minister Sattur Ramachandran"
- கடலோர மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனருக்கும் விளக்கமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
- மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள், பயணியர்கள் வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் 14-ந் தேதிவரை செல்ல வேண்டாம்.
சென்னை:
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்திய வானிலை ஆய்வு மையம் 11-ந் தேதி (நேற்று) காலை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், தீவிர புயலாக மாறி, வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து வருவதாகவும், இதற்கு 'மோக்கா' என பெயரிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது மேலும், அதி தீவிர புயலாக உருவெடுத்து மத்திய வங்கக்கடல் பகுதியை கடந்து, 13-ந் தேதியன்று சற்று வலுவிழந்து, 14-ந் தேதியன்று மணிக்கு 120 முதல் 145 கி.மீ. வேகத்துடன் வங்கதேசம் மற்றும் மியான்மருக்கு இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் அறிவுரையின் பேரில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு எச்சரிக்கையின்படி, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மீன்வளத்துறை ஆணையருக்கும், கடலோர மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனருக்கும் விளக்கமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள், பயணியர்கள் வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் 14-ந் தேதிவரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடலுக்குள் சென்ற மீன்பிடி படகுகள் விரைவாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நிகழ்ச்சி முடிந்த பின் கலாவதி என்ற பெண் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை சந்தித்து தனது தாயார் சகுந்தாவிற்கு முதியோர் உதவிதொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.
- மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் விருதுநகரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் மனு கொடுக்க வந்த பெண்ணை, அவர் வழங்கிய மனுவால் தலையில் தாக்குவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.
விருதுநகர் அருகே உள்ள பாலவநத்தம் பகுதியில் பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 9-ந் தேதி நடந்தது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கலெக்டர் மேகநாதரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்த பின் கலாவதி (வயது 55) என்ற பெண் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை சந்தித்து தனது தாயார் சகுந்தாவிற்கு முதியோர் உதவிதொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
அப்போது கலாவதி கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று கூறினார். உடனே அமைச்சர் அந்த பெண்ணின் தலையை லேசாக தட்டி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த செயல் சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கலாவதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 20 வருடங்களுக்கு மேலாக நன்கு அறிமுகமானவர். தொகுதியில் எந்த குறைகள் இருந்தாலும் அவரிடம் நிவர்த்தி செய்யுமாறு கேட்போம். அந்த உரிமையில் தான் அன்று ஆடு வழங்கும் நிகழ்ச்சியில் மனு கொடுத்து எனது தாயாருக்கு முதியோர் உதவித்தொகை கொடுக்க ஆவண செய்யுமாறு கேட்டேன். அப்போது அமைச்சர் செல்லமாக தலையில் தட்டி தொகுதி மக்களாகிய உங்களுக்கு செய்யாமல் வேறு யாருக்கு செய்ய போகிறேன் என தெரிவித்தாக கூறினார்.
இதற்கிடையில் கலாவதியின் தாயார் சகுந்தாவிற்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழகத்தில், பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள மழை நீரை வெளியேற்றும் பணியை, தொடர்புடைய மாநகராட்சிகளும், மாவட்ட நிர்வாகங்களும் மேற்கொண்டு வருகின்றன.
- பொதுமக்கள் மழை வெள்ளம் தொடர்பான தங்களது புகார்களை மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களை 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.
சென்னை:
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு, 336 மி.மீட்டர் மழை இயல்பாக கிடைக்கப் பெறுகிறது. இந்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக, தமிழ்நாட்டில் நேற்று வரை 65.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழை அளவைக் காட்டிலும 85 விழுக்காடு கூடுதல் ஆகும்.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், குறிப்பாக சென்னையில் இரண்டு நாட்களாக கனமழை பெய்துள்ளது. ஜூன் மாதத்தில் சென்னை மாவட்டத்திற்கு இயல்பாக 56 மி.மீ. மழை கிடைக்கப்பெறும் என்ற நிலையில் கடந்த 19.6.2022 அன்று ஒரே நாளில் சென்னை மாவட்டத்தில் 82.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் பதிவான மழையை விட மிக மிக அதிகம் ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் செங்குன்றம் பகுதியில் 78.0 மி.மீ., திருவாலங்காடு பகுதியில் 75.0 மி.மீ., பூண்டி பகுதியில் 66.0 மி.மீ., அரக்கோணம் பகுதியில் 77.4 மி.மீ., வேலூர் பொன்னை அணைப் பகுதியில் 72.6 மி.மீ., மரக்காணம் மற்றும் நீலகிரி பந்தலூர் பகுதியில் 68.0 மி.மீ. கன மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில், பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள மழை நீரை வெளியேற்றும் பணியை, தொடர்புடைய மாநகராட்சிகளும், மாவட்ட நிர்வாகங்களும் மேற்கொண்டு வருகின்றன.
பொதுமக்கள் மழை வெள்ளம் தொடர்பான தங்களது புகார்களை மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களை 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். இதுமட்டுமின்றி, 94458 69848 என்ற வாட்ஸ்அப் எண் வாயிலாகவும், TNSMART செயலி மூலமாகவும் பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்யலாம்.
மேலும், சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது தொடர்பான புகார்களை 1913 என்ற எண்ணில் பதிவு செய்யலாம்.
பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் பல்துறை மண்டலக் குழுக்கள் அமைத்து, புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செம்பரம்பாக்கம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், இன்று நண்பகல் 12 மணி முதல் செம்பரம்பாக்கம் அணையிலிருந்து 250 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் எச்சரிக்கை செய்திகளின் அடிப்படையில், ஆபத்தான பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு நாளை வருகிறது. நாளை மறுநாள் (22-ந்தேதி) முதல் 2 நாட்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார்கள்.
பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் இந்த குழுவினர் அழைத்து செல்லப்படுவார்கள். அனைத்து பகுதிகளிலும் விவசாயிகளை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விவசாயிகள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் சேதவிபரங்களை எடுத்து சொல்ல வேண்டும். மத்திய குழுவினர் 24-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திப்பார்கள்.
தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அண்டை மாநிலங்களில் மழை பெய்து வருவதாலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து புதிதாக பாதிப்பு விவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
எனவே மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிவாரண நிதி கேட்கப்படும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்