search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister sp velumani கோவை விமான நிலையம்"

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கலெக்டர் ஹரிஹரன் ஆகியோர் வரவேற்றனர். #VenkaiahNaidu
    கோவை:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கலெக்டர் ஹரிஹரன், மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித்சரண், மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, மாநகராட்சி துணை கமி‌ஷனர் காந்திமதி, எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் எம்.பி., கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், கோட்ட பொறியாளர் ஜி.கே. செல்வகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.

    பின்னர் கார் மூலம் ரேஸ்கோர்சில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு சென்றார். மாலை 5 மணிக்கு அவினாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபைக்கு செல்கிறார்.

    அங்கு கோவை வர்த்தக சபையின் 90-வது ஆண்டு விழாவில் கலந்து கொள்கிறார். இரவு சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.

    நாளை (புதன்கிழமை) பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி வைர விழாவில் பங்கேற்கிறார். இதற்காக காலை 9 மணிக்கு கோவை விமான நிலையம் செல்லும் வெங்கையாநாயுடு, அங்கிருந்து விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பொள்ளாச்சி செல்கிறார்.

    பொள்ளாச்சி கல்லூரியில் பாதுகாப்பு குறித்து சென்னை பாதுகாப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. வீரபெருமாள் ஆய்வு செய்தார்.

    கோவையில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே ஹெலிகாப்டர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு காரில் செல்வதற்காக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீசார் செய்துள்ளனர். இதற்கான ஒத்திகையும் நடத்தப்பட்டது.

    பொள்ளாச்சியில் விழா முடிந்ததும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஹெலிகாப்டரில் திண்டுக்கல் செல்கிறார்.

    துணை ஜனாதிபதி வருகையையொட்டி கோவை விமான நிலையம், தொழில் வர்த்தக சபைக்கு செல்லும் பாதைகள், சுற்றுலா மாளிகை மற்றும் பொள் ளாச்சி பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ஐ.ஜி. பெரியய்யா உத்தரவின்பேரில் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் தலைமையில் பொள்ளாச்சியில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகரில் கமி‌ஷனர் சுமித்சரண் உத்தரவின்பேரில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  #VenkaiahNaidu
    ×