search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister vijayabaskarn"

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய எந்த தடையும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். #ministervijayabaskar #aimshospital

    மதுரை:

    தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளியான தகவல் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    எய்ம்ஸ் விவகாரம் குறித்து வருகிற 9-ந்தேதி நானும், சுகாதாரத்துறை செயலாளரும் டெல்லி சென்று சுகாதாரத்துறை மந்திரியை சந்திக்க உள்ளோம்.

    எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வருகிறது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துமவனை அமைய எந்த தடையும் இல்லை என்றார். #ministervijayabaskar  #aimshospital

    அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் இன்று திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. #ministervijayabaskar #dmk #gutkha

    புதுக்கோட்டை:

    குட்கா ஊழலை கண்டித்தும், ஊழலில் சிக்கிய அமைச்சர்கள் பதவி விலக வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் கடந்த 18-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. சார்பில் அங்குள்ள திலகர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் அரசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பேசினர்.

    இதில் விராலிமலை ஒன்றிய தி.மு.க. செயலாளரும், கடந்த 2016 சட்டமன்ற தேர்த லில் விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து போட்டியிட்டவருமான தென்னலூர் பழனியப்பன் மற்றும் அரிமளம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் பொன்.ராமலிங்கம் ஆகியோர் அமைச்சர் விஜயபாஸ்கரை தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக புதுக்கோட்டை போலீசில் அ.தி.மு.க. நிர்வாகி கருப்பையா என்பவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் தென்னலூர் பழனியப்பன், பொன்.ராமலிங்கம் ஆகியோர் மீது அவதூறாக பேசுதல் 294, 323, 301 ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதைதொடர்ந்து தென்னலூர் பழனியப்பனையும், பொன்.ராமலிங்கத்தையும் கைது செய்ய தேடினர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் தென்னலூர் பழனியப்பன் வீடு திருச்சி மன்னார்புரம் நடுத்தெருவில் உள்ளது. அவரை கைது செய்ய இன்று அதிகாலை புதுக்கோட்டை போலீசார், போலீஸ் வாகனத்தில் வந்தனர்.

    அவரது வீட்டில் பழனியப்பனை தேடினர். ஆனால் அவர் வீட்டில் இல்லை. அவர் வெளியில் சென்றுவிட்டதாக கூறப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து புதுக்கோட்டை போலீசார் அவரது வீட்டின் அருகிலேயே நீண்ட நேரமாக காத்திருந்தனர். இதனால் அப் பகுதியில் இன்று காலை பரபரப்பு நிலவியது. இதேபோன்று அரிமளம் ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஊராட்சி தலைவருமான பொன்.ராமலிங்கத்தையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் இன்று திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    விபத்துக்களை தடுக்க கரூரிலிருந்து கோவைக்கும், திருச்சிக்கும் விரைவுச்சாலைகள் அமைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    கரூர்:

    கரூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைப்பது உள்ளிட்டவை தொடர்பான ஆலோசனை கூட்டம், கரூர் அரசு சுற்றுலா மாளிகையில் நடந்தது. இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு விபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கினர்.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

    கரூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 7-ஐ கடந்து செல்லும் தவிட்டுப்பாளையம், மண்மங்கலம், பெரிச்சிபாளையம் பிரிவு, பெரியார்வளைவு, அரவக்குறிச்சி பிரிவு ஆகிய பகுதிகளிலும், தேசிய நெடுஞ்சாலை 67-ஐ கடந்து செல்லும் கோடாங்கிபட்டி மற்றும் வீரராக்கியம் ஆகிய பகுதிகளிலும் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காக மேம்பாலங்கள் அமைப்பதற்காக திட்டமிடப்பட்டு அவை விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன.

    இதன் மூலம் விபத்துகளை தவிர்த்து சாலை பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட உள்ளது.

    மேலும் கரூரிலிருந்து கோவைக்கும், திருச்சிக்கும் விரைவுச்சாலைகள் அமைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில், பணிகள் தொடங்கப்படவுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். 

    கூட்டத்தில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர்கள் சங்கர் சுப்பிரமணியம் (திருச்சி), சிவக்குமார் (கோவை), முத்துடையார் (திண்டுக்கல்), நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×