என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ministers Participate"
- கூட்டுக்குடிநீர் திட்டங்களால் பாப்பாக்குடி, ஆலங்குளம், முக்கூடல் ஒன்றியங்களைச் சேர்ந்த 49 ஊரக கிராமங்கள் குடிநீர் பெறுவதில் தன் நிறைவு பெறுகின்றன.
- இதில் சுமார் 5,10000 பேர் பயன் அடைவார்கள்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள குடிநீர் வடிகால் வாரியத்தில் தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ. 543.20 கோடி மதிப்பீட்டில் சங்கரன்கோவில், புளியங்குடி, நகராட்சிகள், திருவேங்கடம் பேரூராட்சி மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி, சிவகாசி மாநகராட்சி, திருத்தங்கள் நகராட்சி, மற்றும் ரூ. 50.5 கோடி மதிப்பீட்டில் நெல்லை மாவட்டம் பாப்பாகுடி ஒன்றியத்தைச் சேர்ந்த 17 குக்கிராமங்கள் மற்றும் முக்கூடல் பேரூராட்சியில் ஒரு குக்கிராமம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியத்தை சேர்ந்த 31 குக்கிராமங்களுக்கான தாமிரபரணி ஆற்றினை நீராதாரமாக கொண்ட கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான தொடக்க விழா நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் மற்றும் விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் தலைமை தாங்கினார். அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ்மீனா முன்னிலை வகித்தார். மதுரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் ரகுபதி வரவேற்றார். சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, சென்னை நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆகியோர் திட்ட விளக்க உரை ஆற்றினர்.
தொடர்ந்து எம்.பி.க்கள் தென்காசி தனுஷ்குமார், விருதுநகர் மாணிக்கம் தாகூர், எம்.எல்.ஏ.க்கள் சங்கரன்கோவில் ராஜா, வாசுதேவநல்லூர் சதன்திருமலைகுமார், ராஜ பாளையம் தங்கபாண்டியன், சிவகாசி அசோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன், நிதி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கூட்டக்குடிநீர் திட்டங்களால் பாப்பாக்குடி, ஆலங்குளம், முக்கூடல் ஒன்றியங்களைச் சேர்ந்த 49 ஊரக கிராமங்கள் குடிநீர் பெறுவதில் தன் நிறைவு பெறுகின்றன.
இதில் சுமார் 5,10000 பேர் பயன் அடைவார்கள். தமிழக முதல்-அமைச்சர் தென்காசி மாவட்டத்திற்கு சுமார் ரூ. 650 கோடி மதிப்பீட்டில் திட்டங்களை வாரி வழங்கி உள்ளார். இந்த 2 ஆண்டு காலத்திற்குள் ரூ. 1,828 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் சேமிப்பு திட்டம் ரூ. 4.3 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை துறைக்கு வாகனம், ரூ. 15 கோடியே 37 லட்சத்தில் எல்.இ.டி. விளக்குகள், ரூ. 3 கோடியே 38 லட்சத்தில் குடிநீர் பணிகளுக்கான ஆணைகள், ரூ. 4.62 கோடியில் நீர்நிலை மேம்பாட்டு திட்டங்கள், ரூ. 5.93 கோடியில் பூங்காக்கள் அமைக்கும் பணி, ரூ. 8.85 லட்சத்தில் மின்மயானம் அமைக்கும் பணி, ரூ. 9 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம், ரூ. 12.21 கோடியில் வணிக வளாகம், ரூ. 6.50 கோடியில் அரசு அலுவலக கட்டிடம், ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில் அறிவு சாரா மையங்கள், ரூ. 44.88 லட்சத்தில் சாலை பணிகள், ரூ. 36 கோடியே 84 லட்சத்தில் இதர பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகின்றார்.
தென்காசி தனி மாவட்டமாகி உள்ள நிலையில் தற்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் ரூ. 650 கோடி நிதியை தென்காசி மாவட்டத்திற்கு ஒதுக்கி உள்ளார் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் தி.மு. ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேல், பரமகுரு, யூ.எஸ்.டி. சீனிவாசன், நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமாமகேஸ்வரிசரவணன், புளியங்குடி விஜயா, மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன், மாவட்ட துணைச் செயலாளர்கள், புனிதா, ராஜதுரை, மனோகரன் ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, பூசைபாண்டியன், கிறிஸ்டோபர், பெரியதுரை, சேர்மதுரை, ராமச்சந்திரன், நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சங்கரன்கோவில் மாரிச்சாமி, வேல்சாமிபாண்டியன், தேவா என்ற தேவதாஸ், வெள்ளத்துரை, சாகுல் ஹமீது, மாரிச்சாமி, பராசக்தி, மகேஸ்வரி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் முனியசாமி பேரூர் செயலாளர்கள் ரூபி பாலசுப்ரமணியன், மாரிமுத்து, மாவட்ட மகளிர் அணி தலைவர் அன்புமணி, துணைத்தலைவர் அண்ணாமலை, தொ.மு.ச. மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் நெல்சன், நகரத் துணைச் செயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், சுப்புத்தாய், இளைஞர் அணி சரவணன், நகர பொருளாளர் லாசர் என்ற சதாசிவம், மற்றும் கார்த்தி, வீராசாமி, வீரமணி, கணேஷ், ஜெயக்குமார், பிரகாஷ், ஜான், சிவா, குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தூர்பாண்டி நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்