search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Missing Girls"

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளார்
    • போலீசார் தொடர்ந்து மாணவியை தேடி வருகின்றனர்.காணாமல் போன போது, பச்சை நிற சுடிதார், பேன்ட் அணிந்திருந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் அடுத்த அவிநாசி, பச்சம்பாளையம், காந்திநகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி இருந்தார். இந்த நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வந்தது. அதில் அந்த மாணவி தேர்ச்சியும் பெற்றார்.

    இந்நிலையில் வீட்டிலிருந்த சிறுமி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர். ஆனால் சிறுமியை எங்கும் காணவில்லை. பின்னர் இது குறித்து அவிநாசி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளார் .இதனை பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது.

    இதனால் தான் மாணவி வீட்டை விட்டு வெளியேறி சென்று இருப்பது தெரியவந்தது .போலீசார் தொடர்ந்து மாணவியை தேடி வருகின்றனர்.காணாமல் போன போது, பச்சை நிற சுடிதார், பேன்ட் அணிந்திருந்தார். அவரை கண்டவர்கள் 94981 01328 என்ற செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    • தோழிகளான இவர்கள் இருவரும் கடந்த 23-ந் தேதி வங்கிக்கு செல்வதாக கூறிசென்றனர்.பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை
    • கார்த்திகாவின் பெற்றோர் இன்று நெல்லை டி.ஐ.ஜி.அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அச்சுதன். இவரது மனைவி லதா.

    இவர்களது மகள் கார்த்திகா (வயது 19).இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சாத்தான்குளம் அருகே உள்ள கொழுந்தட்டு கிராமத்தை சேர்ந்தவர் எப்சிபா செல்வகுமாரி (வயது 21). இவரும் அதே கல்லூரியில் படித்து வருகிறார். தோழிகளான இவர்கள் இருவரும் கடந்த 23-ந் தேதி வங்கிக்கு செல்வதாக கூறிசென்றனர்.பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை.

    டி.ஐ.ஜி. அலுவலகத்தில் புகார்

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தனர்.

    இந்நிலையில் மாணவி கார்த்திகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று நெல்லை டி.ஐ.ஜி.அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.

    அதில், சாத்தான்குளம் போலீசில் மாணவிகள் மாயம் குறித்து புகார் செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாணவிகளை உடனடியாக மீட்டுதர வேண்டும் என கூறியிருந்தனர்.

    தொடர்ந்து மாணவியின் சகோதரர் நிருபர்களிடம் கூறுகையில், கல்லூரியில் தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. சம்பவத்தன்று மாணவிகள் இருவரும் மாயமாகி உள்ளனர். இதுதொடர்பாக சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தோம். ஆனால் மாயமாகி ஒருவாரம் ஆன நிலையிலும் போலீசார் சரிவர விசாரிக்காமலும் காலதாமதம் செய்கின்றனர். மாயமான மாணவிகளை உடனடியாக மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ×