search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "M.K.stalin coming"

    • கோவை ஈச்சனாரியில் நடக்கும் அரசு விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
    • அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பொள்ளாச்சி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் சுற்றுப்பயணமாக நாளை மறுநாள் (23-ந் தேதி) மாலை கோவைக்கு வருகிறார்.

    24-ந் தேதி காலை கோவை ஈச்சனாரி பகுதியில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    அதனை தொடர்ந்து பொள்ளாச்சியில் ஒருங்கிணைந்த ேகாவை மாவட்ட தி.மு.க. சார்பில் மாற்றுகட்சியினர் 50 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார்.

    இந்த விழாவுக்காக கோவை-பொள்ளாச்சி சாலையில் ஆச்சிப்பட்டி பகுதியில் சுமார் 44 ஏக்கரில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அமர இருக்கைகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான இருக்கைகளும் போடும் பணி வேகமாக நடந்து வருகிறது. ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர அத்தியாவசிய அடிப்படை தேவைகளும் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்சி நிர்வாகிகளிடம் விழா ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் ஆலோசனைகளையும் வழங்கினார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 23-ந் தேதி இரவு கோவை வருகிறார். 24-ந் தேதி ஈச்சனாரியில் 1 லட்சத்து 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

    முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டக்கூடிய அரசு விழாவும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மாலையில் நடைபெறும் விழாவில் மாற்று கட்சியை சேர்ந்த 50 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின் போது கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயராம கிருஷ்ணன், பொள்ளாச்சி நகர செயலாளர் நவநீ தகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • ஈச்சனாரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும், பொள்ளாச்சி பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார்
    • கோவையில் நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் பொள்ளாச்சி செல்கிறார்.

    பொள்ளாச்சி:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 14-ந் தேதி மாலை கோவை வருகிறார்.அவருக்கு விமான நிலையத்தில் தி.மு.க.வினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.தொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதல்-அமைச்சர் இரவு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.

    பின்னர் மறுநாள் 15-ந் தேதி காலை மலுமிச்சம்பட்டி அடுத்த ஈச்சனாரி பகுதியில் தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்கிறார். முன்னதாக மலுமிச்ச ம்பட்டி பகுதியில் மருதமலை சேனாதிபதி தலைமையில் தி.மு.க.வினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கிறார்கள்.

    பின்னர் விழா நடைபெறும் இடத்திற்கு செல்லும் அவர், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேருரையாற்றுகிறார்.

    கோவையில் நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் பொள்ளாச்சி செல்கிறார். அங்கு மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆேலாசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஈச்சனாரி பகுதியில் முதல்-அமைச்சர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் இடத்தினை மதுக்கரை தாசில்தார் பர்ஸானா, வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும். என்ன வசதிகள் செய்ய வேண்டும். இடையூறு இல்லாமல் நிகழ்ச்சியை நடத்துவது, எப்படி நிகழ்ச்சிக்கு வரும் வாகனங்களை எங்கு நிறுத்துவது என்பது குறித்து விரிவாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

    ×