என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » modivideoconference
நீங்கள் தேடியது "Modivideoconference"
நாட்டில் உள்ள 15 ஆயிரம் பகுதிகளில் உள்ள சுமார் ஒரு கோடி பாஜக தொண்டர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் மோடி கலந்துரையாடும் பிரமாண்ட நிகழ்ச்சி வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது. #Modivideoconference #largestvideoconference #AmitShah
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் அக்கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் வழியாக கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
இதில் அடுத்தகட்டமாக நாட்டில் உள்ள 15 ஆயிரம் பகுதிகளில் உள்ள சுமார் ஒரு கோடி பாஜக தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் நலவிரும்பிகளுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் பிரமாண்ட நிகழ்ச்சி வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது.
டெல்லியில் இருந்தவாறு இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மோடி கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்பவர்கள் ‘நமோ ஆப்’பில் உள்ள #MeraBoothSabseMazboot என்ற இணைப்பின் மூலம் பிரதமரை தொடர்புகொண்டு கலந்துரையாடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 28-ம் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சி உலகளாவிய அளவில் மிகப்பெரிய வீடியோ கான்பிரன்சிங் என்ற சாதனையை ஏற்படுத்தும் என பாஜக தலைவர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Modivideoconference #largestvideoconference #AmitShah
×

X