search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mokkumbu dam"

    திருச்சி முக்கொம்பு அணையில் உடைந்த பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். #EdappadiPalaniswami #Mokkumbudam
    திருச்சி:

    காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் திருச்சியில் உள்ள 182 ஆண்டு பழமையான முக்கொம்பு அணையில் 6 முதல் 14-ம் எண் வரையிலான 9 மதகுகள் இடிந்து விழுந்தன. இதனால் அணைக்கட்டின் மேல் பகுதி பாலமும் அப்படியே தண்ணீருக்குள் விழுந்து அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அந்த வழியாக தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மற்ற மதகுகள் அடைக்கப்பட்டுவிட்டன.

    தகவல் அறிந்து திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அணையின் இரு பகுதிகளிலும் இருந்த கேட்டுகள் மூடப்பட்டன. பாலம் இடிந்ததால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

    கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அணையின் உடைந்த பகுதிகளை சீரமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அணையை தற்காலிகமாக சீரமைப்பது தொடர்பான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டார். திருச்சி வந்து சேர்ந்த அவர், முக்கொம்பு அணையின் உடைந்த பகுதிகள் மற்றும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர், அணை சீரமைப்பு பணியை விரைவாக முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



    கொள்ளிடம் மேலணையில் 9 மதகுகள் உடைந்து அணை இடிந்துவிழுந்தாலும் டெல்டா பாசனத்திற்காக காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்படவில்லை. இதனால் விவசாய பணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படவில்லை. #EdappadiPalaniswami #Mokkumbudam
    ×