search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Money - jewelry"

    • வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது
    • பீரோ உடைக்கப்பட்டு, 23 பவுன் நகை 1,50,000 பணம் ஆகியவை திருட்டு போனது தெரிய வந்தது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நரியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70 ).

    இவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

    இவருடைய மனைவி ஆசிரியையாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

    இந்நிலையில் சம்பவதன்று 2 பேரும் வீட்டை பூட்டி விட்டு பக்கத்து ஊரில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக சென்றனர்.

    பின்னர் நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்தனர்.

    அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 23 பவுன் நகை மற்றும் 1,50,000 பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து ராமசாமி பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்த மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
    • தனியார் பனியன் கம்பெனி நிர்வாகியாக வேலை பார்த்து வருகிறார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி மலையம்பாளையம் பகுதியில் வசிப்பவர் ரவிக்குமார்(40) இவர் தனியார் பனியன் கம்பெனி நிர்வாகியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 ந்தேதி அன்று சொந்த ஊரில் ஆயுத பூஜை கொண்டாடுவதற்காக வீட்டைபூட்டி விட்டு பவானி அருகே உள்ள குமாரபாளையத்திற்கு சென்று விட்டார். பின்னர் கடந்த 6 ந்தேதி வீடு திரும்பினார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டின் பின்பக்க வழியாக வந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த ரூ.5000 பணம், மற்றும் 2 வெள்ளி வளையல்கள், யுபிஎஸ் இன்வெர்ட்டர் கருவி ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இதை அடுத்து அதிர்ச்சி அடைந்த ரவிக்குமார் இந்த திருட்டு சம்பவம் குறித்து பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் ரவிக்குமார் வீடு அருகே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் பெண்களைப் போல் நைட்டி அணிந்த ஒருவர் ரவிக்குமார் வீட்டிற்குள் செல்வது தெரியவந்தது இதைஅடுத்து அந்த மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    ×