என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Monkeys"
- பிரேத பரிசோதனைக்காக கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ராஜ்ண்ணா சிர்சில்லா மாவட்டம், நம்பள்ளி கிராமத்தின் புறநகர் பகுதியில் 30 குரங்குகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதுகுறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இறந்து கிடந்த குரங்குகளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குரங்குகளை யாராவது விஷம் வைத்து கொன்றார்களா? அல்லது வேறு எதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
போலீசார் கூறுகையில், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு குரங்குகள் இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என்றனர்.
- பொன்னேரி பகுதிகளில் குரங்குகள் செய்யும் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வீடுகளில் புகுந்தும் பொருட்களை எடுத்துச் செல்கிறது.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த வேண்பாக்கம், திருவாயர்பாடி, வேம்பட்டு, காந்திநகர், மெதுர், பொன்னேரி ரெயில் நிலையம், பொன்னேரி தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட குரங்குகள், தங்களின் குட்டிகளுடன் அட்டகாசம் செய்து வருகின்றன.
பஜாரில் உள்ள கடைகளின் உள்ளே புகுந்து தின்பண்டங்களை எடுத்துக் கொண்டும், பழக்கடைகளில் பழங்களை எடுத்துக் கொண்டும் செல்கின்றன. அந்த குரங்குகளை பொதுமக்கள் விரட்டினால் அவை அவர்களை கடிக்க வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மேலும் சிறுவர்கள் கையில் வைத்துள்ள தின்பண்டங்களையும் குரங்குகள் பறித்து கொண்டு செல்கின்றன. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியு உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'பொன்னேரி பகுதிகளில் குரங்குகள் செய்யும் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகளில் தின்பண்டங்களை தொங்கவிட முடிவதில்லை. வீடுகளில் புகுந்தும் பொருட்களை எடுத்துச் செல்கிறது. எனவே வனத்துறையினர் கூண்டு வைத்து குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட வேண்டும்' என்றனர்.
- பெரிய கொரில்லா வருவதாக நினைத்து குரங்குகள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கின்றன.
- பல குரங்குகள் ஊரைவிட்டே ஓடிவிட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
தெலுங்கானா மாநிலம் பத்ராத்திரி கோத்தக்குடேம் மாவட்டத்தில் உள்ள மொரம்பள்ளி பஞ்சார் என்ற கிராமத்தில் அதிக அளவில் குரங்குகள் உள்ளன.
இங்குள்ள விவசாயிகள் பயிரிடும் பருத்தி நெல், காய்கறிகளை குரங்குகள் கூட்டம் நாசம் செய்கிறது.
மேலும் வீடுகளுக்குள் புகுந்து அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்கின்றன. கிராம மக்களை அச்சுறுத்தி வரும் குரங்கு தொல்லையை ஒழிக்க அங்குள்ள ஊராட்சி நிர்வாகம் புதிய முறை ஒன்றை கையாண்டு வருகிறது. ஊராட்சியில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கொரில்லா உடை வாங்கப்பட்டுள்ளது.
இதனை அணிந்து கொரில்லா வேடத்தில் வரும் ஊழியர்கள் குரங்குகள் இருக்கும் பகுதிக்கு செல்கின்றனர்.
பெரிய கொரில்லா வருவதாக நினைத்து குரங்குகள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கின்றன. தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் கொரில்லா வேடத்தில் ஊழியர்கள் குரங்குகளை விரட்டியடித்து வருகின்றனர்.
இதனால் தற்போது இந்த கிராமத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் குரங்குகள் தொல்லை குறைந்துள்ளது. பல குரங்குகள் ஊரைவிட்டே ஓடிவிட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இது அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
- பறவைகள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
- கிரிபோன் கழுகு மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் வந்து உள்ளன.
வண்டலூர்:
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. விலங்குகள் பரிமாற்றத்தின் படி நாட்டில் உள்ள மற்ற பூங்காவிற்கு தேவையான விலங்குகள், பறவைகளை கொடுத்து அங்கிருந்து விலங்குகளை பெறுவது வழக்கம்.
அதன்படி உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள், பறவைகள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதில் 10 அனுமன் குரங்குகள், 5 மர ஆந்தைகள். ஒரு ஜோடி இமாலயன் கிரிபோன் கழுகு மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் வந்து உள்ளன.
இந்த அனுமன் குரங்குள் மற்ற குரங்குகளை விட வித்தியாசமான முக அமைப்பை கொண்டது. அதன் வாய் பகுதி சற்று சிகப்பு நிறமாக இருக்கும். புதிதாக வந்து உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளின் உடல்நிலையை பூங்காவில் உள்ள கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து தனிமைப்படுத்தி தனித்தனியாக அறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தும் கால அவகாசம் முடிந்ததும் பூங்காவில் பொது மக்களின் பார்வைக்கு விடப்படும் என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையே விலங்குகள் பரிமாற்றத்தின் படி வண்டலூர் பூங்காவில் இருந்து கான்பூர் உயிரியல் பூங்காவிற்கு ஒரு ஜோடி கட்ட உடல் மலைப் பாம்புகள், இரண்டு ஜோடி சருகு மான்கள், 3 நெருப்புக்கோழிகள், ஒரு ஜோடி பச்சை உடும்புகள் மற்றும் ஒரு ஆண் சாம்பல் ஓநாய் ஆகிய விலங்குகள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- வீட்டுக்குள் புகுந்து உணவுப்பொருட்களை சேதப்படுத்துகிறது
- குடியிருப்புக்குள் வராமல் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் புதுத்தோட்டம் பி.ஏ.பி.நகர், காமராஜர் நகர், துளசிங்க நகர், கூட்டுறவு காலனி, அண்ணா நகர், வால்பாறை டவுன் பகுதி உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக 100க்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் சுற்றி வருகிறது.
இந்த சிங்கவால் குரங்குகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிவதோடு அங்குள்ள வீடுகளின் ஜன்னல் வழியாக சமையலறைக்குள் நுழைந்து, அங்கு வைத்திருக்க கூடிய உணவுப் பொருட்களை சாப்பிட்டு சேதப்படுத்தி வருகிறது.
சிங்கவால் குரங்குகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சிங்கவால் குரங்குகளை குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கூட்டுறவு காலனி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி வந்தது.
இதில் ஜெபா என்பவர் வீட்டில் நுழைந்த குரங்குகள் கூட்டம் வீட்டிற்குள் இருந்த உணவு பொருட்கள் சாப்பிட்டு கண்ணாடி பொருட்களை உடைத்து சேதப்படுத்தியது. நீண்ட நேரம் போராட் டத்திற்கு பின்பு சிங்கவால் குரங்குகளை அப்பகுதியில் இருந்து சென்றது. குரங்குகள் குடியிருப்பு பகுதியில் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர்
- கொடைக்கானலில் நகர் பகுதிகளில் தற்போது வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
- பொதுமக்களுக்கும் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கும் இடையூறாக இருந்த குரங்கு கூட்டத்தை கொடைக்கானல் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் நகர் பகுதிகளில் தற்போது வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வனவிலங்கு களான காட்டெருமை, மான், பன்றி, சிறுத்தை, யானை, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி உலா வருவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் கொடைக்கானல் நகர் பகுதிகளில் அதிக அளவில் குரங்குகளின் நடமாட்டம் உள்ளது.
வீடுகள், குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் ஆகியவற்றில் இவை புகுந்து அட்டகாசம் செய்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டும் எழுந்து வந்தது. இந்த நிலையில் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் பொதுமக்களுக்கும் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கும் இடையூறாக இருந்த குரங்கு கூட்டத்தை கொடைக்கானல் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
மேலும் பிடிபட்ட குரங்குகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். மேலும் பொது மக்களுக்கு அவ்வப்போது இடையூறு ஏற்படுத்தி வரும் காட்டெருமை கூட்டத்தை யும் கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்பதே அனை வரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
- கூரையை பிரித்து வீட்டிற்குள் நுழைந்து உணவு பொருட்களை சாப்பிட்டு சேதப்படுத்தி வருகிறது
- 100க்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் திரிவதால் பொதுமக்கள் அச்சம்
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை புது தோட்ட பகுதியில் வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் அரிய வகை 300-க்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் வாழ்ந்து வருகிறது.
இந்த சிங்கவால் குரங்குகளை வனத்துறையினர் மற்றும் என்.சி.எப்., தன்னார்வலர் வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் பாதுகாத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சிங்கவால் குரங்குகள் எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து சுற்றி திரிந்து வருகின்றனர்.
குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் சிங்கவால் குரங்குகள் வீட்டின் கூரை களை பிரித்து வீட்டிற்குள் நுழைந்து உணவு பொருட்களை சாப்பிட்டு சேதப்படுத்தி வருகிறது.
சிங்கவால் குரங்குகள் மெல்ல மெல்ல வால்பாறை டவுன் பகுதிக்கு வர ஆரம்பித்தது. தற்போது 100க்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் துளசிங்க நகர், காமராஜ் நகர்,கூட்டுறவு காலனி, அண்ணா நகர், வால்பாறை டவுன், போன்ற இடங்களில் சுற்றி வருகிறது. அவ்வாறு சுற்றி திரியும் குரங்குகள் வீடுகளில் நுழைந்து உணவு பொருள்களை சாப்பிட்டு பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். குரங்குகளை குடியிருப்பு பகுதிகளில் வராமல் தடுக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பனமங்கலம் பகுதியில் குரங்குகள் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.
- கூண்டுகள் அமைத்து 9 குரங்குகளை பிடித்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பனமங்கலம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட குரங்குகள் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.
வீட்டு விலங்குகளான ஆடு,மாடுகளை கடித்தும் வீட்டுக்குள் புகுந்து உணவு பொருட்களை சூறையாடியும் பொதுமக்களை மிகவும் அவதிக்கு உள்ளாக்கியது. குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த கோரி சீர்காழி நகராட்சியில் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனை அடுத்து அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் முழுமதி இமயவரம்பன் சொந்த செலவில் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த முடிவெடுத்தார்.
தொடர்ந்து குரங்கு பிடிக்கும் நபர்களை அழைத்து வந்து கூண்டுகள் அமைத்து 9 குரங்குகளை பிடித்தனர்.குரங்குகள் பிடிக்கப்பட்டது குறித்து சீர்காழி வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் விரைந்து வந்த சீர்காழி வனத்துறை வனவரிடம் குரங்குகளை ஒப்படைத்தனர்.
இதனை யடுத்து பிடிக்கப்பட்ட குரங்குகள் அனைத்தையும் வனத்துறையினர் மக்கள் நடமாட்டம் இல்லாத பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விடுவதற்கு கொண்டு சென்றனர்.
- திருப்பத்தூரில் குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மின்கம்பங்களில் ஏறி விளையாடுவதால் மின் இணைப்புகள் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் கடந்த சில தினங்களாக 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் முற்றுகையிட்டுள்ளன. குரங்குகளின் தொல்லை யால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.
நகரின் முக்கிய வீதிகளான பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி, 4 ரோடு, கூகல் பெர்க் சாலை, காளியம்மன் கோவில் தெரு, அக்னி பஜார், சீதளி வடகரை, தேரோடும் வீதி, ஆறுமுகம் பிள்ளை தெரு, தென்மாட்டு ஆகிய பகுதிகளில் சுற்றி திரிகின்றன. வீட்டின் கதவுகள் திறந்திருந்தால் உள்ளே புகுந்து மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை குரங்குகள் எடுத்து செல்கின்றன.
மேலும் அருகாமையில் உள்ள கடைவீதி மற்றும் உழவர் சந்தையிலும் காய்கறி கள், பழங்கள், திண்பண்டங்களை தின்று சூறையாடி வருகின்றன. வீதிகளில் இருக்கும் மின்கம்பங்களில் ஏறி மின் வயர்களில் குரங்குகள் விளையாடுவதால் மின் இணைப்புகள் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இரு சக்கர வாகனங்க ளில் வருபவர்களையும் பொருட்களை கொண்டு செல்போர்களையும் குரங்குகள் அச்சுறுத்து கின்றன.
இப்படி நாள்தோறும் பொது மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து குரங்கு களை பிடித்து வனபகுதியில் அதனை கொண்டு சென்று விட வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.
- வீடுகளில் உள்ள ஜன்னல் கதவு மற்றும் பொருட்களை சேதப்படுத்துகிறது.
- குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டில் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது.
திருத்துறைப்பூண்டி:
முத்துப்பேட்டை அருகே உள்ள சங்கேந்தி குடியிருப்பு பகுதியில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு சமீப காலமாக குரங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வீடுகளில் உள்ள ஜன்னல் கதவு மற்றும் பொருட்களை சேதப்படுத்துவதும், வீட்டில் உள்ளவர்கள் குரங்கை விரட்டினால் அவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. இதனால், வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகவும் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி அங்கு சுற்றித்திரியும் குரங்களை வனத்துறையினர் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்த குரங்குகள் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகளை துரத்துவதும், கடை தெருவில் தின்பண்டங்கள் வாங்கிச் செல்லும் சிறார்களை விரட்டு வதுமாக அட்டகாசம் செய்து வந்தது.
- பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் குரங்கு பிடிக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் ஏராளமான குரங்குகள் பிடிக்கப்பட்டு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டன,
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூர் பேரூராட்சி பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் அளவுக்கு அதிகமாக இருந்தது. இந்த குரங்குகள் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகளை துரத்துவதும், கடை தெருவில் தின்பண்டங்கள் வாங்கிச் செல்லும் சிறார்களை விரட்டு வதுமாக அட்டகாசம் செய்து வந்தது.
அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு உத்தரவின் பேரில் செயல் அலுவலர் அருள்குமார் முன்னிலையில் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் குரங்கு பிடிக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் ஏராளமான குரங்குகள் பிடிக்கப்பட்டு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டன. அரகண்டநல்லூர் பேரூ ராட்சி நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்களும் வியாபாரிகளும் குறிப்பாக பெண்களும் பள்ளி செல்லும் குழந்தைகளும் பாராட்டு தெரிவித்தனர்.
- அபிராமம் தெருக்களில் சுற்றித்திரியும் குரங்குகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- வனத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, சாயல்குடி. அபிராமம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் போதிய உணவு, தண்ணீர், கிடைக்காமல் குரங்குகள் வெளியேறி அபிராமம் டவுன் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சுற்றிதிரிகின்றன.
அபிராமம், வல்லகுளம், விரதக்குளம், பள்ளபச்சேரி உள்ளிட்ட கிராம பகுதிகளில் தென்னைமரங்களில் தாவி குதித்து வருவதுடன் தென்னை மரங்களையும், தென்னங்காய்களையும் நாசம் செய்து வருகின்றன. மேலும் அபிராமம் தெருக்களில் குரங்குகள் சுற்றிதிரிவதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் அச்சத்துடன் செல்லும் சூழ்நிலை நிலவுகிறது.
அபிராமம் தெருக்க ளிலும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்