என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mony"
கோவை:
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள குந்தா காலனியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 58). காய்கறி வியாபாரி. இவர் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் இருந்து கேரள மாநிலத்துக்கு காய்கறி ஏற்றுமதி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று தேவராஜ் பணம் வசூல் செய்வதற்காக கேரள மாநிலத்துக்கு சென்றார். வசூலை முடித்துக்கொண்டு இரவு கோவைக்கு பஸ்சில் திரும்பினார்.
பஸ் உக்கடம் பஸ் நிலையம் வந்ததும் திடீரென தேவராஜீக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் ஓய்வு எடுக்க நினைத்த அவர் தான் வசூல் செய்து கொண்டு வந்த ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் பணத்தை கைப்பையில் அருகே வைத்து விட்டு படுத்து இருந்தார்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர் தேவராஜ் வைத்து இருந்த கைப்பையை பணத்துடன் திருடிச் சென்றார்.நள்ளிரவு கண் விழித்த தேவராஜ் பணப்பை திருட்டு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து உக்கடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.