search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "More than 300 acres of arable land were submerged and crops were destroyed"

    • தண்ணீர் வீணாக வெளியேறியது
    • ஏரியின் மதகை சீர்செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் மாவட்டத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஏரியின் மதகை மர்ம நபர்கள் சிலர் உடைதததாக கூறப்படுகிறது.

    இதனால் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் தண்ணீர் மூழ்கி பயிர்கள் நாசமானது.

    இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர் இந்தநிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதகில் இருந்து வெளியேறும் தண்ணீரை சரியான முறையில் சீரமைப்பு செய்யாததால். நேற்று இரவு மீண்டும் ஏரியின் மதகு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது.

    இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் தண்ணீரில் முழுகி நெற் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இரண்டு மாதம் தண்ணீர் வீணாக வெளியேறிய நிலையில் தற்போது ஒரு மாதம் தண்ணீர் வீணாக வெளியேறியது கோடை காலங்களில் தண்ணீர் கிடைக்காத நிலையில் தற்போது ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி வருவதால் எதிர்காலங்களில் விவசாயிகளுக்கும் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கம் பெரும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலையில் இருந்து வருகிறது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுத்து ஏரியின் மதகை சீர்செய்து ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.‌

    ×