என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Morphing"
- பெண்கள் பதிவெட்டில் கையெழுத்திடும் போது அவர்களுக்கு தெரியாமல் செல் போனில் போட்டோ எடுத்துள்ளார்.
- வசந்த குமார் தனது செல்போனை நண்பர் தினேசிடம் அடமானம் வைத்து பணம் பெற்று ள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்துள்ள வீரசோழபுரம் ஊராட்சியில் தற்காலிக பணிதள பொறுப்பாளராக பணிபுரிந்தவர் வசந்தகுமார் (வயது27).இவர் ஊரக வேைல திட்ட பணிக்கு வரும் பயனாளிகள் குறித்த பதிவேடுகளை பராமரிக்கும் வேலையை செய்த வந்தார். வேலை செய்த பெண்கள் பதிவெட்டில் கையெழுத்திடும் போது அவர்களுக்கு தெரியாமல் செல் போனில் போட்டோ எடுத்துள்ளார்.அவர்களின் முகத்தை ஆபாச படத்துடன் இணை த்து மார்பிங் செய்து ரசித்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் வசந்த குமார் தனது செல்போனை நண்பர் தினேசிடம் அடமா னம் வைத்து பணம் பெற்று ள்ளார்.
அப்போது செல்போ னில் வைத்திருந்த ஆபாசப டங்களை அழித்து விட்டு கொடுத்துள்ளார். ஆனால் தினேஷ் அழிக்கப்பட்ட படங்களை மீட்டெடுத்து பார்த்து அதிர்ச்சி அடை ந்தார். ஆபாச படங்களை வார்டு உறுப்பினரான தங்கராஜ் மகன் ரவியிடம், தினேஷ் காண்பித்துள்ளார் . அப் படங்களை ரவி ேவறு சிலருக்கு பகிர்ந்துள்ளார். அந்த படங்களை பெண்களின் உறவினர் சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வசந்த குமாரை கைது செய்யக் கோரி சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு 100 நாள் வேலையில் பணியாற்றும் பெண்கள், பெண்களை ஆபாசமாக போட்டோ மற்றும் வீடியோ மார்பிங் செய்த நபரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து வசந்த குமாரை போலீ சார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை வீரசோ ழபுரம் பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடு க்க வேண்டும் என கலெ க்டர் ஷ்ரவன் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிலையில் தினேஷ் மற்றும் ரவியை போலீசார் நேற்று கைது செய்தனர். கிராம மக்கள் மறியல் குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் சட்ட விரோதமாக ஒன்றுகூடி, சாலையை மறித்து, அரசு அனுமதியின்றி அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடப்பட்டதாக அதே பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், கோவி ந்தராஜ், ஆனஸ்ட்ராஜ், சதீஷ், ராஜா, மணிகண்டன் உள்ளிட்ட 20 பேர் மீது புகார் மனு அளித்துள்ளார். இது குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- பேஸ்புக் பக்கத்தில் ஆன்லைன் கிரடிட் மூலம் லோன் தருகிறோம் என ஒரு விளம்பரம் வந்தது.
- சில நாட்கள் கழித்து எனது போட்டோவை மார்பிங் செய்து எனது மொபைலுக்கு அனுப்பி குறுந்தகவல் வந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை சேர்ந்த ஒரு தனியார் வங்கி உதவி மேலாளர். இவர் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது :-
எனது பேஸ்புக் பக்கத்தில் ஆன்லைன் கிரடிட் மூலம் லோன் தருகிறோம் என ஒரு விளம்பரம் வந்தது. மேலும் கிரடிட் லோன் என்ற செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறப்பட்டது.
அதன்படி நானும் மொபைலில் பதிவிறக்கம் செய்தேன்.
இதை எடுத்து எனது மொபைலில் கேலரி, தொடர்பு எண்கள், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல்வேறு செயலிக்கு நான் அந்த செயலில் கூறப்பட்டுள்ள மாதிரி அக்சஸ் செய்து கொண்டேன்.
பின்னர் உங்களுக்கு லோன் தருகிறோம். அதற்காக நீங்கள் கட்டணமாக ரூ.5000 செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. இதனால் நான் அந்த கட்டணத்தை செலுத்தாமல் வெளியேறி விட்டேன்.
சில நாட்கள் கழித்து எனது வங்கி கணக்குக்கு ரூ.9000 வரவு வைக்கப்பட்டது.
இந்த பணம் அந்த செயலி மூலம் வரவு வைக்கப்பட்டது என்பதை அறிந்தேன்.
இருந்தாலும் நான் அதனை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டேன்.
சில நாட்கள் கழித்து எனது போட்டோவை மார்பிங் செய்து எனது மொபைலுக்கு அனுப்பி இதனை வெளியிடாமல் இருப்பதற்காக ரூ.14700 தர வேண்டும் என குறுந்தகவல் வந்தது.
மேலும் மார்பிங் செய்யப்பட்ட எனது போட்டோவை எனது உறவினர்களுக்கும் அந்த மர்ம நபர்கள் அனுப்பி வைத்துள்ளனர் இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன்.
ஏமாற்றப்பட்டோம் என்பதையும் உணர்ந்தேன். எனவே மர்ம நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
புகாரின் பேரில் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப் -இன்ஸ்பெக்டர் கார்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்