என் மலர்
நீங்கள் தேடியது "Motor cycle"
- நாங்குநேரியை சேர்ந்த சிவசக்தி, ஆறுமுகம் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்
- பின்னால் நெல்லை நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள செண்பகராமநல்லூர், அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவசக்தி (வயது51). தச்சு தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது உறவினர் ஆறுமுகத்துடன் வள்ளியூருக்கு வந்தார்.
பின்னர் இருவரும் ஆறுமுகத்திற்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஆறுமுகம் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார். சிவசக்தி பின்னால் அமர்ந்திருந்தார்.
நெல்லை-நாகர்கோவில் நான்குவழிச் சாலையில் வாகைகுளத்தில் இருந்து பட்டர்புரம் செல்ல சர்வீஸ் சாலையில் திரும்பிய போது, பின்னால் நெல்லை நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற சிவசக்தி, ஆறுமுகம் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து இருவரும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
- தென்காசி அருகே உள்ள அய்யாபுரத்தை சேர்ந்த சக்திமாரி தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
- தலையில் பலத்த காயமடைந்த சக்திமாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தென்காசி:
தென்காசி அருகே உள்ள அய்யாபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பூமாரி. இவரது மகன் சக்திமாரி (வயது 20).
இவர் நேற்று இரவு தனது நண்பர் சுரேஷ் என்பருடன் சேர்ந்து ஒரே மோட்டார் சைக்கிளில் குத்துக்கல்வலசை சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது அய்யாபுரம் விளக்கு அருகே சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த மீனாட்சி சுந்தர் என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த சக்திமாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்ததும் தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆலங்குளம் அருகே உள்ள கடங்கநேரி சின்ராசு இவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை சென்று விட்டு கடங்கநேரி வந்துள்ளனர்.
- ஆய்க்குடி சுடலை என்பவர் ஓட்டி வந்த வேன் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள கடங்கநேரி சின்ராசு (வயது 27). இவர் தனது நண்பரான தென்காசி ஆய்க்குடி சாரதி (22) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை சென்று விட்டு கடங்கநேரி வந்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து ஆய்க்குடி செல்வதற்காக வி.கே.புதூர் சாலையில் சென்றபோது எதிரே ஆய்க்குடி சுடலை என்பவர் ஓட்டி வந்த வேன் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் சின்ராசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாரதி படுகாயம் அடைந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த ஊத்துமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாரதி அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஊத்துமலை போலீசார் வேன் டிரைவர் சுடலையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த தர்சன் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
- பலத்த காயம டைந்த தர்சன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவையாறு:
திருவையாறு அருகே ஆக்கினாதபுரத்தை சேர்ந்த பிரகாஷ் மகன் தர்சன் (வயது 2). இவர் கடந்த 2-ந் தேதி வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தார்.
சம்பவத்தன்று, பொன்னாவரையை சேர்ந்த வரதராஜன் மகன் விக்னேஷ (30) என்பவர் மேலஉத்தமநல்லூரிலிருந்து பொன்னாவரைக்கு மோட்டார் சைக்கிளில் ஆக்கினாதபுரம் வழியாக வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த தர்சன் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் பலத்த காயம டைந்த தர்சன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து, திருவையாறு சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்பர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர்.
- தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள மியாம் பள்ளி சர்ச் தெருவை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 22). இவர் பாளையில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
- பாளை கே.டி.சி. நகர் அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள மியாம் பள்ளி சர்ச் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் ஜெபராஜ் (வயது 22). இவர் பாளையில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு பணியை முடித்துக் கொண்டு ஜெபராஜ் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். பாளை கே.டி.சி. நகர் அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ஜெபராஜ் பரிதாபமாக இறந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பாளை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஜெபராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாக னத்தை தேடி வருகின்றனர்.
- சென்னை நோக்கி அரசு பஸ் இன்று காலை சென்றது.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் விசாரிக்கிறார்.
கடலூர்:
பண்ருட்டியில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் இன்று காலை சென்றது. இந்த பஸ் பண்ருட்டி அருகே பணிக்கண்குப்பம் பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள்மீது மோதியது. மோதிய வேகத்தில் பஸ் அந்த பகுதியில் உள்ள கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ராமதாஸ், ஆறுமுகம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் விசாரிக்கிறார்.
- ஆறுமுகநேரி பகுதியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே உள்ள குட்டையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்பட்டு வந்தது.
- நவீன எந்திரங்கள் மூலம் குப்பையை அகற்றும் பணி கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி பகுதியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே உள்ள குட்டையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்பட்டு வந்தது. இதனால் அங்கு குப்பை மலை போல் குவிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது.
குப்பை அகற்ற நடவடிக்கை
இந்த நிலையில் அங்கிருந்து குப்பையை அகற்ற தற்போதைய பேரூராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டது.இதற்காக நவீன எந்திரங்கள் மூலம் குப்பையை அகற்றும் பணி கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே வேறு இடத்தில் புதிதாக குப்பைக் கிடங்கு அமைக்க தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்கான இடத்தை தேர்வு செய்ய அவர் நேற்று மாலை ஆறுமுகநேரிக்கு வருகை தந்தார். இந்தகள ஆய்வு பணியின் போது அவருடன் திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதனும் வந்திருந்தார். கலெக்டரை ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் வரவேற்றனர். வார்டு கவுன்சிலர்கள் வெங்க டேசன், ஆறுமுகநயினார், மாரியம்மாள், ரமா, புனிதா, தீபா, புனிதா சேகர், தயாவதி, ஜெயராணி, மரிய நிர்மலா தேவி, சகாயரமணி, ஆறுமுகநேரி நகர தி.மு.க செயலாளர் நவநீத பாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற கலெக்டர்
அப்போது கொட்டமடை காடு பகுதியில் உள்ள இடத்தை பார்வையிட புறப்பட்டபோது அந்த வழியில் பாதை பழுதடைந்து கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இருந்தது. இதனால் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கி அதனை ஓட்டியபடி கலெக்டர் செந்தில் ராஜ் அங்கிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொட்டமடை காடு பகுதிக்கு சென்று ஆய்வு பணியை மேற்கொண்டார். அப்போது அவர் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் வி.ஏ.ஓ வை அமர வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் கூறுகையில் ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதிக்கான குப்பை கிடங்கு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று காயல் பட்டினம் கடையக்குடி பகுதியில் உள்ள நுண் உர செயலாக்க மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது திருச்செந்தூர் துணை கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், காயல் பட்டினம் நகராட்சி தலைவர் முத்துமுகமது, கமி ஷனர் குமார் சிங், சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
- சண்முக ராஜின் உறவுக்கார பெண்ணிடம் முத்துக்குட்டி பேசியதாக கூறப்படுகிறது.
- வாக்குவாதம் முற்றவே 2 பேரும் சேர்ந்து முத்துக்குட்டியை அடித்து உதைத்து அவருடைய மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகர் 6-வது தெருவை சேர்ந்தவர் சின்ன ஈஸ்வரன். இவரது மகன் முத்துகுட்டி (வயது 30). அதே பகுதியில் 1-வது தெருவை சேர்ந்தவர்கள் சண்முகராஜ்(27), மகேஷ்(34). இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.
இந்நிலையில் சண்முக ராஜின் உறவுக்கார பெண்ணி டம் முத்துக்குட்டி பேசியதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சங்கரன்கோவில் பொட்டல் பகுதியில் முத்துக்குட்டி நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சண்முகராஜ் மற்றும் மகேஷ் ஆகியோர் தங்களது உறவுக்கார பெண்ணிடம் பேசக்கூடாது என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளனர்.
வாக்குவாதம் முற்றவே 2 பேரும் சேர்ந்து முத்துக்குட்டியை அடித்து உதைத்து அவருடைய மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகராஜை கைது செய்தனர். தப்பி ஓடிய மகேசை தேடி வருகின்றனர்.
- திட்டை மாரியம்மன் கோவில் குளம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
- சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை விளார் ரோடு பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40) தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் தனது நண்பர் பாண்டியன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தஞ்சையில் இருந்து அம்மன்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
தஞ்சை அடுத்த திட்டை மாரியம்மன் கோவில் குளம் அருகே சென்ற போது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் செந்தில்குமார், பாண்டியன் ஆகிய இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அவர்களை தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் இறந்தார்.
பாண்டியனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்
- மோட்டார் சைக்கிள் மற்றும் 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஆனைமங்கலம் அருகே ஓர்குடி வெட்டாறு பாலம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.
Liquor smuggler on motorcycle arrestedஇதில் அவர் திருப்பூண்டி காரைநகர் பகுதியை சேர்ந்த முரளி ராஜன் மகன் சித்திரவேல் (வயது21) என்பதும், மோட்டார் சைக்கிளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்திரவேலுவை கைது செய்து, மோட்டார் சைக்கிள் மற்றும் 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- மோட்டார் ஆக்டேன் என்ற பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் ஒரு வாலிபர் ஆற்றில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்கிறார்.
- சிறுவயதில் இருந்தே அவர்கள் நதிக்கரைகளில் வசிப்பதால் உள்ளூர் மக்களுக்கு இது வழக்கமானது தான்
சாலைகளில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்பவர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் கரடு முரடான பெரிய பாறைகளில் மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் சாகசம் செய்த வீடியோ ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி இருந்தது. இந்நிலையில் ஆற்றில் மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஒரு வாலிபரின் வீடியோ டுவிட்டரில் தற்போது வைரலாகி வருகிறது. மோட்டார் ஆக்டேன் என்ற பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் ஒரு வாலிபர் ஆற்றில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்கிறார். அவர் ஒரு பலகையில் இருந்து மோட்டார் சைக்கிள் மூலம் கீழே ஆற்றில் இறங்குவதை காணமுடிகிறது. தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஆற்றில் அந்த வாலிபர் பயணம் செய்யும் வீடியோக்களை பார்த்து நெட்டிசன்கள் தற்போது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதில் ஒருவர், இந்த சாகசம் ஆபத்தானது. என்ஜினுக்குள் தண்ணீர் நுழைந்தால் என்ன நடக்கும்? என கேள்வி எழுப்பி உள்ளார். மற்றொரு பயனர் அபாயகரமான சாகசம் செய்யும் புத்திசாலி என கூறியுள்ளார். அதே நேரம் அசாமில் இதுபோன்ற சாகசங்கள் வழக்கமானது என்று ஒரு நெட்டிசன் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிறுவயதில் இருந்தே அவர்கள் நதிக்கரைகளில் வசிப்பதால் உள்ளூர் மக்களுக்கு இது வழக்கமானது தான் என குறிப்பிட்டுள்ளார்.
The perfect example of "Where there is a will there's a way"
— MotorOctane (@MotorOctane) April 6, 2023
Thoughts about this? Very clever or just very risky? pic.twitter.com/FgYfaFlOtt
- திருப்பூர் கோல்டன் நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் மே தினத்தன்று அரசு விதியை மீறி மது பாட்டில்களை விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது.
- அதிக மதுபோதையின் காரணமாக செல்போனை தொலைத்ததும் தெரிய வந்தது.
திருப்பூர்:
மே தினத்தை முன்னிட்டு, தமிழகத்திலுள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு அரசு விடுமுறை அளித்திருந்தது. இந்நிலையில், திருப்பூர் கோல்டன் நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் மே தினத்தன்று அரசு விதியை மீறி மது பாட்டில்களை விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது.
இந்த பாரில் குடிக்க வந்த வாலிபர் ஒருவர் அதிகளவு மது குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் அங்கேயே படுத்து விட்டார். விடுமுறையன்று மகனை காணவில்லை என தேடிய தாய், மகன் டாஸ்மாக் பாரில் மது போதை தலைக்கேறிய நிலையில் இருப்பதை கேள்விப்பட்டு அங்கு வந்து பார்த்த பொழுது மகனின் நிலையை கண்டு பதறி அங்கிருந்தவர்கள் உதவியுடன்
போதையை தெளிய வைத்து, பைக்கை, செல்போன் எங்கே என்று கேட்ட போது, வாலிபர் பைக்கை அடமானம் வைத்து டாஸ்மாக் பாரில் மது குடித்தது தெரிய வந்தது. மேலும் அதிக மதுபோதையின் காரணமாக செல்போனை தொலைத்ததும் தெரிய வந்தது. இதையறிந்த தாய் பதறிய நெஞ்சத்துடன், விடுமுறை நாளன்று எவ்வாறு மது விற்பனை செய்கிறீர்கள் எனவும், எனது மகனை இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டீர்கள் என பாரில் மது விற்பனை செய்தவர்களிடம் கண்ணீர் மல்க ஆவேசத்துடன் பேசினார். மதுவால் சீரழிந்த மகனின் நிலை கண்டு தாய் ஒருவர் கண்ணீருடன் ஆதங்கமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.