என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "motorcycle crash"
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் ஜல்லிக்கட்டு தெருவைச் சேர்ந்தவர் பிச்சை மணி (வயது 56). பழைய இரும்பு வியாபாரி. இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து காந்தி சிலை அருகே உள்ள கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது கம்பம் தாத்தப்பன் குளத்தைச் சேர்ந்த வாலிபர் செங்கிஸ்கான் வந்தார். இவர் மீது பிச்சை மணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் உரசியது. இதனால் 2 பேருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த செங்கிஸ்கான் இரும்பு வியாபாரி பிச்சை மணியை கீழே தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் பிச்சை மணிக்கு தலையில் அடிபட்டது. ரத்தம் கொட்டியதால் துடி துடித்தார்.
இதனைபார்த்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அவரை தூக்கிக் கொண்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு பிச்சை மணியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறிதது கம்பம் வடக்கு போலீசார் செங்கிஸ்கான் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். தப்பி ஓடிய அவரை தேடி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்தவர் போஸ் (வயது 58). வியாபாரி. இவர் ராசிபுரம் அருகேயுள்ள பிள்ளாநல்லூர் ராமலிங்க நகரில் உள்ள அவரது மகள் கிருஷ்ணவேனியின் (33) வீட்டுக்கு வந்திருந்தார்.
நேற்று இரவு 9.40 மணியளவில் அவரும், அவரது மருமகன் சிவசண்முகமும் நடைப்பயிற்சிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு இருவரும் திரும்பிச் சென்றனர். அவர்கள் ராசிபுரம்-திருச்செங்கோடு சாலையில் வண்டிப்பேட்டை அருகிலுள்ள தனியார் பள்ளி எதிரில் சென்றபோது அவர்களுக்கு பின்னால் ஒருவர் வந்த மோட்டார் சைக்கிள் அவர்கள் இருவர் மீதும் மோதியது. இதில் வியாபாரி போஸ் பலத்த காயம் அடைந்தார்.
மருமகன் சிவசண்முகம் லேசான காயம் அடைந்தார். பலத்த காயம் அடைந்த போசை ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது போஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
விபத்தில் பலியான போஸ் உடல் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ரத்தினவேல் என்பவரும் காயம் அடைந்தார். இவர் ராசிபுரம் அருகேயுள்ள நாட்டாமங்கலத்தைச் சேர்ந்தவர்.
இவருக்கு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான வியாபாரி போசுக்கு சண்முகசுந்தரம் (35) என்ற மகனும், கிருஷ்ணவேனி (33) என்ற மகளும் உள்ளனர்.
பாகூர்:
அரியாங்குப்பம் டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது72). இவர் சம்பவத்தன்று நோனாங்குப்பம் சுண்ணாம்பாறு பழைய பாலத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார். பின்னர் வீட்டுக்கு செல்ல படகுகுழாம் எதிரே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக தனபால் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட தனபால் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று மாலை தனபால் பரிதாபமாக இறந்து போனார்.
இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்வந்திரி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்