என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "M.S.University"
- அங்கீகாரம் பெற்ற கற்றல் உதவி மையங்களிலும் தற்பொழுது மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது.
- விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக இணைய தளத்தின் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரட்டீஸ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்ககத்தில் பல்கலைக் கழக மானியக்குழுவின் தொலைதூர கல்விக்குழு அங்கீகாரத்துடன் இளங் கலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளா தாரவியல், வணிகவியல், வணிக நிர்வாகவியல், இளநிலை நூலகமும் தகவல் அறிவியல் ஆகிய படிப்புகளுக்கும், முதுகலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரவியல், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல், வணிகவியல் மற்றும் முதுநிலை நூலகமும் தகவல் அறிவியல் ஆகிய படிப்புகளுக்கும் 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ந் தேதி ஆகும். இந்த பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்ககத்தின் நேரடி சேர்க்கை மையங்களான, பல்கலைக்கழக வளாகம், அபிசேகப்பட்டி மற்றும் கோவிந்த பேரி- சேரன்மகாதேவி, புளியங்குடி, திசையன்விளை, பணகுடி, சங்கரன்கோவில், நாகம் பட்டி, ஆகிய ஊர்களில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி களிலும், இப்பல் கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்ககத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் கற்றல் உதவி மையங்களிலும் தற்பொழுது மாணவர் சேர்க்கை நடை பெற்று கொண்டிருக்கிறது.
மேலும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி வாயிலாக பயில விரும்பும் விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக இணைய தளத்தின் மூலம் நேரடியாக விண்ணப்பித்து ஆன்லைன் மூலம் www.msuniv.ac.in/Distance-Education சேர்க்கை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த அரிய வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்தி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்ககத்தின் இளநிலை, முதுநிலை , சான்றிதழ், பட்டயப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கூட்டத்தில் உடற்கல்வியியல்துறை தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
- நிகழ்ச்சியில் முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. உடற்கல்வியியல்துறை தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்கள் சங்க கவுரவ ஆலோசகர் தங்கராஜ் வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் பேராசிரியர் வெளியப்பன் கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது நினைவுகளையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் முன்னாள் மாணவர் சங்கத்தை வலுப்படுத்த ஆலோசனைகளை தெரிவித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இதில் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர், இணை செயளாளர்களான செல்வராஜ், ஜோஸ்பின் பிரியங்கா மற்றும் சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் பேச்சிமுத்து நன்றி கூறினார்.
- சிறப்பு விருந்தினராக செய்யது நவாஸ் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
- பல்வேறு மாவட்டங்களில் இருந்து 8 அணிகள் போட்டிகளில் கலந்து கொண்டன.
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வி யியல் மற்றும் விளையா ட்டுத்துறை, முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மாநில அளவில் கல்லூரி களுக்கு இடையேயான கால்பந்து மற்றும் கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது.
கல்லூரி மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் நிறைவு நாளான நேற்று நெல்லை மாவட்ட செய்யது குழுமங்களின் நிர்வாக இயக்குனர் செய்யது நவாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
கால்பந்து போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி அணி முதல் இடத்தைப் பிடித்து சுழற்கோப்பையை தட்டிச் சென்றது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை வீரர்கள் அணி 2-வது இடத்தை பிடித்து சுழற்கோப்பையினை கைப்பற்றியது.
இதே போல் கைப்பந்து போட்டியில் 10 அணிகள் கலந்து கொண்டன. இதில் சங்கரன்கோவில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அணி முதல் இடத்தையும், சிவகங்கை மாவட்ட சாஹிர் ஹுசைன் கல்லூரி அணி 2-வது இடத்தையும் பிடித்தது.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு பல்கலைக்கழக உடற்கல்வி யியல் மற்றும் விளையாட்டுத் துறை முன்னாள் தலைவர் சண்முகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.
முன்னதாக உடற்கல்வி யியல் உதவிப்பேராசிரியர் ஆறுமுகம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியை முன்னாள் மாணவர் சங்க செயலாளர் ரமேஷ் தொகுத்து வழங்கினார். உதவிப்பேராசிரியர் பேச்சி முத்து நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை க்கழக உடற்கல்வி யியல் மற்றும் விளையா ட்டுத்துறை மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் மற்றும் விரிவுரை யாளர்கள் செய்திருந்தினர்.
- கருத்தரங்கத்திற்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) அண்ணாத்துரை தலைமை தாங்கினார்.
- கருத்தரங்கில் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை முன்னாள் மாணவர் சங்கம் இணைந்து சதுரங்க விளையாட்டு குறித்த 'சதுரங்கத்தில் நிகழ்வு மேலாண்மை நுட்பங்கள்' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கத்திற்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) அண்ணாத்துரை தலைமை தாங்கினார். பிடே சங்கத்தின் நடுவர் மற்றும் தேசிய பயிற்சியாளருமான கற்பகவள்ளி 'சதுரங்க போட்டியின் நிர்வாக நுட்பங்கள்' என்ற தலைப்பில் மாணவ-மாணவிகளுக்கு தெளிவான முறையில் எடுத்துரைத்தார். கருத்தரங்கில் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தேசிய பயிற்சியாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பயிற்சியாளருமான சாந்தி 'சதுரங்க போட்டியின் வெற்றிக்கான உத்திகள்' என்ற தலைப்பில் செயல்முறை மூலம் செய்து காண்பித்தார்.
இதில் பல்கலைக்கழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறைத் தலைவர் ஆறுமுகம் வரவேற்று பேசினார். உதவி பேராசிரியர்கள் சேது, துரை ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவிப் பேராசிரியர் பேச்சிமுத்து நன்றி கூறினார். கருத்தரங்கில் மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளின் உடற்கல்வி இயக்குநர்கள், மாணவ- மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நெல்லை பல்கலைக் கழகத்தில் முதுநிலை பாடப்பிரிவு தேர்வுகள் கடந்த ஜனவரி 13-ந் தேதி முடிவடைந்தது.
- விடைத்தாள் நகலை பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
நெல்லை:
நெல்லை பல்கலை கழக பதிவாளர் (பொறுப்பு) அண்ணாத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நவம்பர் 2022-ல் நடத்தப் பட்ட முதுநிலை பாடப்பிரிவு களுக்கான தேர்வுகள் அனைத்தும் கடந்த ஜனவரி 13-ந் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் ஒரு மாத காலத்திற்குள் தேர்வுதாள்கள் திருத்தும் பணி முடிக்கப்பட்டு தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 28-ந் தேதி வெளி யிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரி வழியாகவோ அல்லது www.msuniv.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளம் வழியாகவோ அறிந்து கொள்ளலாம்.
முதுநிலைப் பாடப் பிரிவுகளுக்கான தேர்வுக ளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை மறு மதிப்பீடு செய்ய விருப்பம் உடையவர்கள் அதற்குரிய படிவங்களை www.msuniv. ac.in என்ற இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
மறுமதிப்பீடு செய்ய விரும்புபவர்கள் முதலில் விடைத்தாள் நகலைப் பெற்றுக் கொண்ட பின்னனர் தான் மறுமதிப்பீடு செய்து விண்ணப்பிக்க முடியும்.
விடைத்தாள் நகலை இணையதளம் வழியாக பெறுவதற்கு உரிய கட்டணத்துடன் படிவம் ஏ மூலம் இன்று (3-ந்தேதி) முதல் விண்ணப்பிக்கலாம். வருகிற 9-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.
விடைத்தாள் நகல்கள் பல்கலைக்கழக இணைய தளத்தில் பதிவேற்றம் செய் யப்படும். அதன் பின்னர் மாணவர்கள் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க லாம். மறு மதிப்பீடு செய்ய இணையதளம் வழியாக உரிய கட்டணத்துடன் படிவம் பி யை வருகிற 16-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண் ணப்பிக்க கடைசிநாள் மார்ச் 21-ந் தேதி ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்