search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mukkudal"

    • பெண்கள் பனைமரம் குறித்த கிராமப்புற பாடலை பாடியபடி கும்மியடித்தனர்.
    • கும்மிபாட்டுகள் விவசாய பணிகள், கோவில் திருவிழாக்களில் பாடுவார்கள்.

    முக்கூடல்:

    நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி ஒன்றியம் வடக்கு அரியநாயகிபுரம் பஞ்சாயத்து பகுதியிலுள்ள நாரம்பூநாதர் பனங்காட்டில் நெல்லை நீர்வளம் மற்றும் முக்கூடல் பொழில் தன்னார்வலர்கள் அறக் கட்டளை இணைந்து சுமார் 30 ஆயிரம் பனை விதைகள் விதைப்பு விழா நடை பெற்றது.

    கலெக்டர் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பனைவிதையை நட்டு விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம், அறநிலைய துறை கவிதா, சேரன்மகாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு சுபக்குமார் ஆகியோர் பனை விதைகளை விதைத்தனர்.

    தொடர்ந்து இலந்தை குளம் பகுதியை சேர்ந்த பெண்கள் சுமார் 10 -க்கும் மேற்பட்டோர் பனைமரம் குறித்த கிராமப்புற பாடலை பாடிய படி கும்மியடித்தனர்.

    தொடர்ந்து அவர்கள் கும்மியடித்ததை அவரது செல்போனில் வீடியோ எடுத்த கலெக்டர் கார்த்திகேயன், அந்த பெண்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

    குறிப்பாக கும்மிபாட்டுகள் விவசாய பணிகள், கோவில் திருவிழாக்களில் பாடுவார்கள். தற்போது பனைமரம் குறித்து கும்மி பாட்டு பாடியதை கலெக்டர் மட்டு மல்லாமல் அனை வரும் ஆச்சரியத்துடன் ரசித்து பாராட்டினர்.

    மேலும் பனையேறும் தொழிலாளர்களுக்கு உபகரணங்கள் வழங்க அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.

    அதற்கு மாவட்ட கலெக்டர் விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

    விழாவில் தோட்டக் கலை துறை உதவி இயக்கு னர் சுபாசினி, நெல்லை வனச்சரக அலுவலர் சரவணக்குமார்,சேரன் மகாதேவி தாசில்தார் ரமேஷ், மாவட்ட பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம், பாப்பாக்குடி ஒன்றிய துணை சேர்மன் மாரி வண்ணமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் சோழ முடி ராஜன், பணி புஷ்பம், வடக்கு அரியநாயகிபுரம் பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி, முக்கூடல் பேரூராட்சி தலைவி ராதா லட்சுமணன், துணை தலைவர் லட்சுமணன், வருவாய் ஆய்வாளர் கோமதி, கிராம நிர்வாக அலுவலர் சங்கரி, ஊராட்சி செயலர் கவிதா மற்றும் ஏராளமான சமூக ஆர்வ லர்கள் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை பொழில் அமைப்பு தலைவர் எட்வின் ஹென்றி, ஹர்ட் புலனஸ் மெடிட்டே சன் கணேசன் மற்றும் ஜெயந்த் பீட்டர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • முக்கூடலை அடுத்த ரஸ்தாவூர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்ற பிரின்ஸ் (வயது 22). அதே பகுதியை சேர்ந்த மகாராஜன் (18), முத்தரசன் (20) ஆகிய 3 பேரும் நண்பர்கள் ஆவர்.
    • நேற்று இரவு முக்கூடலில் இருந்து சேரன்மகாதேவி விலக்கு வரையில் பிரின்ஸ் மற்றும் முத்தரசன் ஆகிய 2 பேரும் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் ரேஸ் சென்றதாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முக்கூடலை அடுத்த ரஸ்தாவூர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகன் பிரேம்குமார் என்ற பிரின்ஸ் (வயது 22). அதே பகுதி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் அரி செல்வம் மகன் மகாராஜன் (18), தியாகராஜர் தெருவை சேர்ந்த சேகர் மகன் முத்தரசன் (20). இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவர்.

    பைக் ரேஸ்

    நேற்று இரவு முக்கூடலில் இருந்து சேரன்மகாதேவி விலக்கு வரையில் பிரின்ஸ் மற்றும் முத்தரசன் ஆகிய 2 பேரும் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் ரேஸ் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பிரின்ஸ் மோட்டார் சைக்கிளில் பின்னால் மகாராஜன் அமர்ந்துள்ளார். அவர்கள் சேரன்மகா தேவி விலக்கு பகுதிக்கு சென்று விட்டு அங்கிருந்து முக்கூடலை நோக்கி மீண்டும் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

    முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகிபுரம் பொட்டல் காலனி பஸ் நிறுத்தம் அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே மருந்து விற்பனை பிரதிநிதிகளான களக்காடு சிங்கம்பத்து பகுதியை சேர்ந்த சதக்கத்துல்லா (42), டவுன் பாரதியார் தெருவை சேர்ந்த பொன்ராஜ் (42) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    வாலிபர் பலி

    அப்போது அவர்கள் மீது பிரின்ஸ் வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதனால் பின்னால் வந்து கொண்டிருந்த முத்தரசன் மோட்டார் சைக்கிளும் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் மகாராஜன் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சதக்கத்துல்லா, பொன்ராஜ், பிரின்ஸ், முத்தரசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்த முக்கூடல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 4 பேரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த மகாராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முக்கூடல் பேரூராட்சிக்குட்பட்ட பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
    • 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்று வரை அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.

    முக்கூடல்:

    முக்கூடல் பேரூராட்சிக்கு ட்பட்ட பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்ப ட்டுள்ளது. இந்த மின்விளக்கு திறப்புவிழா பிரமாண்டமாக நடைபெற்றது.

    ஆனால் 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்று வரை அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு புகார் மனு அளித்தும் பதில் இல்லை. வேலைக்கு சென்று இரவில் வீடு திரும்பும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் உள்ளது.

    இந்நிலையில் நேற்று உயர் மின்கோபுரத்திற்கு முன்பாக அரிக்கேன் விளக்கு மற்றும் ஒளி விளக்குகளை ஏற்றி வைத்து பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் முக்கூடல் ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் மற்றும் வேன் ஸ்டாண்ட் ஓட்டுனர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சபரி கிரிநாத் வரவேற்று பேசினார்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முக்கூடல் பேரூராட்சி தலைவர் ராதா லட்சுமணன் பரிசுகளை வழங்கினார்.

    முக்கூடல்:

    முக்கூடலில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப ள்ளியில் பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா, பள்ளி மேலாண்மை குழு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சபரி கிரிநாத் வரவேற்று பேசினார். மேலாண்மை குழு தலைவர் புவனேஸ்வரி தலை மை தாங்கினார். முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம் முன்னி லை வகித்தார். தன்னார்வலர் ராஜேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார்.

    விளையாட்டுப் போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முக்கூடல் பேரூராட்சி தலைவர் ராதா லட்சுமணன் பரிசுகளை வழங் கினார். பேரூராட்சித்துணை தலைவர் லட்சுமணன், பாப்பாக்குடி வட்டார கல்வி அலுவலர் ஜோசப் கிரிகோரி, பொதுக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுடலைமணி, இடைகால் சாரதா பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி காந்தி, நடுக்கல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், முக்கூடல் சொக்கலால் சத்திரிய வித்யாசாலா பள்ளி ஆசிரியர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    • அரியநாயகிபுரத்தில் ஒரு வீட்டில் நல்ல பாம்பு புகுந்தது.
    • பிடிபட்ட நல்ல பாம்பு சுமார் 10 அடி நீளம் இருந்தது.

    முக்கூடல்:

    முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரத்தில் ஒரு வீட்டில் நல்ல பாம்பு புகுந்தது. பாம்பு கிடப்பதை கண்ட வீட்டில் உள்ளவர்கள் பாம்பை பிடிப்பதற்காக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் வனத்துறையை சேர்ந்த உச்சிமாகாளி விரைந்து சென்று வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பை பிடித்தார். அது சுமார் 10 அடி நீளம் உள்ளதாக இருந்தது. பாம்பு வீட்டுக்குள் வந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

    • விக்னேஷ் மளிகை கடை நடத்தி வருகிறார்.
    • இருசக்கர வாகனத்தை திருடியதாக மாரி என்ற மாரியப்பன் கைது செய்யப்பட்டார்

    நெல்லை:

    முக்கூடல், பூவையா தெருவை சேர்ந்தவர் முத்து விக்னேஷ் (வயது 31). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    கடந்த 11-ந் தேதி முத்து விக்னேஷ் வீட்டிற்கு முன்பு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு முக்கூடல், பெரிய வீதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, நிறுத்தி இருந்த இடத்தில் இரு சக்கர வாகனத்தை காணவில்லை.

    இதுகுறித்து முத்து விக்னேஷ் முக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படை யில் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக பெருமாள் விசாரணை நடத்தி இருசக்கர வாக னத்தை திருடியதாக சிங்கம்பாறையை சேர்ந்த மாரி என்ற மாரியப்பன் (20) என்பவவரை கைது செய்தார். அவரிடமிருந்து இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • முக்கூடல்- ஆலங்குளம் செல்லும் ரோட்டில் மிக்கேல் ராயப்பன் பனை ஓலை வியாபாரம் செய்து வந்தார்.
    • மிக்கேல் ராயப்பனை இருவரும் சேர்ந்து அவதூறாக பேசி தாக்கி உள்ளனர்.

    நெல்லை:

    முக்கூடல் அருகே உள்ள தாளார்குளத்தை சேர்ந்தவர் மிக்கேல் ராயப்பன் (வயது 48). இவர் கடந்த 14-ந் தேதி முக்கூடல்- ஆலங்குளம் செல்லும் ரோட்டில் பனை ஓலை வியாபாரம் செய்து வந்தார்.

    அப்போது அங்கு வந்த முக்கூடலை சேர்ந்த முருகப்பெருமாள் என்ற பழனி (35) மற்றும் முத்துக்குமார் (36) ஆகிய இருவரும் சேர்ந்து மிக்கேல் ராயப்பனை அவதூறாக பேசி தாக்கி உள்ளனர். இதை தடுக்க முயன்ற அவரது உறவினர் மேரீஸ் ராஜாவையும் அடித்து மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து மிக்கேல் ராஜா முக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகப் பெருமாள், முத்துக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • பாபநாசம் போக்குவரத்து பணிமனையில் டிரைவராக வேலை பார்த்து வருபவர் இசக்கிராஜ்
    • இன்று அதிகாலை அம்பையில் இருந்து நெல்லைக்கு தடம் எண் 130-டி என்ற பஸ்சை ஓட்டி சென்றுள்ளார்.

    முக்கூடல்:

    நெல்லை மாவட்டம் பாபநாசம் போக்குவரத்து பணிமனையில் டிரைவராக வேலை பார்த்து வருபவர் இசக்கிராஜ் (வயது 45).

    தகராறு

    இவர் இன்று அதிகாலை அம்பையில் இருந்து நெல்லைக்கு தடம் எண் 130-டி என்ற பஸ்சை ஓட்டி சென்றுள்ளார். முக்கூடல் அருகே பாப்பாக்குடி மெயின் ரோட்டில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்த நந்தன்தட்டயை சேர்ந்த குமார் மீது பஸ் மோதுவது போல் சென்றதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அவர், பஸ்சை வழிமறித்து டிரைவர் இசக்கிராஜிடம் தகராறு செய்தார். அப்போது அந்த நின்றிருந்த ஒருவர், குமாருடன் சேர்ந்து பஸ் டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    கைது

    இதுதொடர்பாக பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் குமார் மற்றும் மற்றொரு நபர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர். தலைமறைவான மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

    பாப்பாக்குடி பஸ் நிறுத்த பகுதியில் சாலையின் இருபுறமும் கடைகள் உள்ளன. ஆக்கிரமிப்பால் சாலையும் குறுகலாக உள்ள நிலையில், இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் வேகமாக செல்வதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், அந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி போலீஸ் நிலையம் ரோட்டை சேர்ந்தவர் வேலையா (வயது 60). விவசாயி. இவரது பேரன் செல்வம் (18).
    • நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை வேலையா பரிதாபமாக இறந்தார்.

    நெல்லை:

    முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி போலீஸ் நிலையம் ரோட்டை சேர்ந்தவர் வேலையா (வயது 60). விவசாயி. இவரது பேரன் செல்வம் (18). இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அவரை வேலையா கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் இறந்து விட்டார். இதனால் மனமுடைந்த வேலையா நேற்று முன்தினம் விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை வேலையா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் தன்னார்வலர்கள் சிலர் இணைந்து ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
    • அப்போது குளிக்க வரும் பொதுமக்கள் ஆற்றுக்குள் விட்டுச் சென்ற கந்தல் துணிகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.

    முக்கூடல்:

    முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் தன்னார்வலர்கள் சிலர் இணைந்து ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குளிக்க வரும் பொதுமக்கள் ஆற்றுக்குள் விட்டுச் சென்ற கந்தல் துணிகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.

    மேலும் ஆற்றின் கரைகள் மற்றும் தண்ணீரில் கிடந்த மது பாட்டில்களையும் அவர்கள் அகற்றினர். இதில் சுமார் 1½ டன் அளவிலான குப்பை கழிவுகள் அகற்றப்பட்டதாக தன்னார்வலர்கள் தெரி வித்தனர். மது பாட்டில்கள் மற்றும் கண்ணாடி துண்டுகளை சமூக விரோதிகள் ஆற்றுக்குள் வீசுவதால் அப்பகுதியில் குளிக்க வரும் பொது மக்க ளுக்கு காயம் ஏற்பட்டு மிகுந்த சிரம த்திற் குள்ளவ தாகவும் அவர்கள் கூறினார். தாமாக முன் வந்து ஆற்றை சுத்தம் செய்த தன்னார் வலர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

    • முக்கூடல் அருகே உள்ள இடைகால் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் மருதுபாண்டி(வயது 25).
    • ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சிறிய பாலத்தின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    முக்கூடல்:

    முக்கூடல் அருகே உள்ள இடைகால் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் மருதுபாண்டி(வயது 25). இவர் வீரவநல்லூரில் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.

    பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

    இவரது கடையில் இடைகாலை சேர்ந்த கரிகாலன் என்பவரது மகன் பிரமுத்து(16) வேலை பார்த்து வந்தார். நேற்று நள்ளிரவில் 2 பேரும் ஒர்க்‌ஷாப்பில் வேலையை முடித்துவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டி ருந்தனர்.

    ஆட்டோவை மருதுபாண்டி ஓட்டி சென்றார். முக்கூடலை அடுத்த பாப்பாக்குடி அருகே சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சிறிய பாலத்தின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் ஆட்டோவின் முன்பக்கம் நொறுங்கியது. இதில் ஆட்டோவில் இருந்த பிரமுத்து இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மருதுபாண்டி படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டி ருந்தார்.

    தகவல் அறிந்த பாப்பாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மருதுபாண்டியை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பிரமுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துரை முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு வீடு திரும்பிய போது 2 பேர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
    • தலைமறைவாக இருந்த சுடலை மணியை தேடி வந்த நிலையில் அவரும் இன்று கைது செய்யப்பட்டார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முக்கூடலை அடுத்த கீழ பாப்பாக்குடி புது கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் சுப்பையா என்ற துரை(வயது 53). கட்டிட தொழிலாளி.

    கொலை

    இவர் நேற்று காலை முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு வீடு திரும்பிய போது அவரை வழிமறித்த 2 பேர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

    இதுதொடர்பாக பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் கொலை செய்யப்பட்ட சுப்பையாவின் மகன் மாரிமுத்துவுக்கும், அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன்(50) என்பவரது மகள் உமா செல்விக்கும் திருமணம் நடைபெற்றதும் பின்னர் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரிய வந்தது.

    இதன் காரணமாக மாரியப்பனும், அவரது மகன் முத்துக்குமார் என்ற குட்டி, சுடலைமணி ஆகியோர் சேர்ந்து சுப்பையாவை கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் வலைவீசி தேடி வந்த நிலையில் நேற்று மாரியப்பனையும், குமார் என்ற குட்டியையும் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சுடலை மணியை தேடி வந்த நிலையில் அவரும் இன்று கைது செய்யப்பட்டார்.

    ×