search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mukoodal"

    • இந்த ஆண்டு ஆடி மாத திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • நேற்று காலை 11 மணிக்கு நாராயணருக்கு சிறப்பு பூஜையும், மாலையில் தீர்த்தவாரியும் நடைபெற்றது.

    முக்கூடல்:

    முக்கூடல் நகரில் அமைந்துள்ள நாராயணசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடக்கும். இந்த ஆண்டு ஆடி மாத திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் இரவு அன்னதானம், சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. நேற்று 9-வது நாள் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி காலை 11 மணிக்கு நாராயணருக்கு சிறப்பு பூஜையும், மாலையில் தீர்த்த வாரியும் நடைபெற்றது.

    தொடர்ந்து இரவில் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நாராயணர் செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தார். நாராயணரின் சப்பரத்தின் முன்பாக சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய வேடங்களை உயரமாக அமைத்து ஆடி, பாடி வந்தனர். இதனை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். நேற்று முக்கூடல் முத்தமிழ் பேரவையின் இலக்கிய சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • பிரசித்திப்பெற்ற முக்கூடல் நாராயணசாமி கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
    • இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.

    முக்கூடல்:

    பிரசித்திப்பெற்ற முக்கூடல் நாராயணசாமி கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து வருகிற 14-ந் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. 1-ம் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு வருஷாபிஷேகம், கோபுர கொடி ஏற்றம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தவாரி எடுத்து வரப்பட்டது. இரவில் சப்பர பவனி நடைபெற்றது.

    திருவிழாவை முன்னிட்டு தினசரி மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தவாரி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலை வந்தடையும்.

    அதனை தொடர்ந்து இரவில் நாராயணர் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்த்தில் முக்கூடல் நகரை வலம் வருதல் நடைபெறுகிறது. 10-ம் திருநாள் அன்று லட்சுமி நாராயணர் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம்.

    திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை சொற்பொழிவு, விழிப்புணர்வு நிகழ்ச்சி, பக்தி இசை, இலக்கிய சொற்பொழிவு, பட்டிமன்றம், பேச்சுப்போட்டி, சிலம்பம் நடைபெறுகிறது.

    13-ந் தேதி இரவு சிவச்சந்திரனின் அய்யாவழி இசை வழிபாடு, விடிய, விடிய அன்னதானம் நடைபெறும். மேலும் அனுமன் ஆட்டம், மாடு, மயில் ஆகிய ஆட்டங்கள் ஆகியவை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ விஷ்ணு சபையார், கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர். 

    • முக்கூடல் பிரிவுக்கு உட்பட்ட ஓடைமறிச்சான் பகுதியில் மின்னழுத்த குறைபாடு குறித்து புகார் செய்யப்பட்டது.
    • அதை சரி செய்வதற்காக புதிதாக 25 கிலோவாட் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் முக்கூடல் பிரிவுக்கு உட்பட்ட ஓடைமறிச்சான் பகுதியில் மின்னழுத்த குறைபாடு குறித்து புகார் செய்யப்பட்டது.

    இதையடுத்து அதை சரி செய்வதற்காக மேற்பார்வை மின் பொறியாளர் ராஜன் ராஜ் உத்தரவுபடி, கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் மேற்பார்வையில் ரூ.6 லட்சத்தில் புதிதாக 25 கிலோவாட் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி உதவி செயற்பொறியாளர் மகேஷ்சுவாமிநாத், முக்கூடல் உதவி மின் பொறியாளர் பிரம்ம நாயகம் , பிரிவு அலுவலக பணியாளர்கள் மற்றும் அப்பகுதி ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×