search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "municipal authorities"

    திருவண்ணாமலையில் பிளாஸ்டிக் சோதனைக்கு சென்ற வீடு பூட்டப்பட்டிருந்ததால் நகராட்சி அதிகாரிகள் அந்த வீட்டுக்கு மற்றொரு பூட்டு போட்டனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள ஒரு குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து நகராட்சி கமி‌ஷனர் சுரேந்திரன் தலைமையில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் ஆல்பர்ட், வினோத் கன்னா, கார்த்திகேயன் ஆகியோர் குடோனுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    அங்கு பதுக்கி வைத்திருந்த சுமார் 540 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றினர்.மேலும் அதன் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    தொடர்ந்து காயிதே மில்லத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பிளாஸ்டிக் பதுக்கி வைத்து இருப்பதாக வந்த தகவலை அடுத்து அந்த வீட்டிற்கு சென்றனர். அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது வீட்டின் உரிமையாளர் வெளியூரில் இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.

    அதைத் தொடர்ந்து போலீசார் உதவியுடன் வீட்டுக்கு மற்றும் ஒரு பூட்டு நகராட்சியால் போடப்பட்டது அந்த இடத்தில் மீண்டும் ஆய்வு நடக்கும் என்று நகராட்சி கமி‌ஷனர் தெரிவித்தார்.
    ×